தோல் நோய் அகற்றும் தும்பிக்கையான்

தோல் நோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபடவும், பிள்ளைப் பேறு வேண்டியும் கண்டர மாணிக்கம் என்ற ஸ்தலத்திற்கு வழிபட வருபவர்கள் ஏராளமானோர்.
தோல் நோய் அகற்றும் தும்பிக்கையான்
நம்பிக்கையோடு நாம் வணங்கினால் நற்பலன்களை அள்ளி வழங்குபவர் விநாயகப்பெருமான். இவர் தும்பிக்கை இல்லாமலேயே காட்சி தரும் இடம் கண்டர மாணிக்கம் என்ற ஸ்தலமாகும். இங்குள்ள மருதம் பிள்ளையார், ஆங்கிலேயர் காலத்தில் மருதுபாண்டியரைத் தேடிச் சென்ற பொழுது, ஆங்கிலேயர்களால் தும்பிக்கை வெட்டப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது.

அபூர்வ சக்தி வாய்ந்த அந்தப் பிள்ளையாருக்கு வடைமாலை அணிவித்து, பொங்கல் நைவேத்தியம் படைத்து மக்கள் மகிழ்கிறார்கள். மழை வரப் பாடிய மகாகவி முத்தப்பர், இதற்கு பத்துப் பாடல்கள் பாடியதன் விளைவாகத்தான் உடலில் இருந்த தோல் நோய் நீங்கியதாக சரித்திரம் சொல்கிறது.

எனவே, தோல் நோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபடவும், பிள்ளைப் பேறு வேண்டியும் இங்கு வழிபட வருபவர்கள் ஏராளமானோர். சைவமுனி, முருகன், வன துர்க்கை உள்பட பல தெய்வங்கள் அதன் அருகில் இருக்கின்றன. இத்திருக்கோவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ளது.

Comments