விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை

பிள்ளையாருக்கு அருகம் புல் அர்ச்சனை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை
ஒரு காலத்தில் தேவர்களுக்கு துன்பம் கொடுத்த அனலாசுரன் என்ற அசுரனை எதிர்த்து விநாயகர் போரிட்டார். அனலாசுரன் வாயில் இருந்து நெருப்பை கக்கி பிள்ளையாரின் படைகளை அழித்தான். இதைக்கண்ட விநாயகப்பெருமான் அனலாசுரனை தூக்கி அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள்போன அனலாசுரன் வெப்பமடைய செய்தான். விநாயகர் வயிறு எரிகிறதே என்று அங்கும், இங்கும் ஓடினார்.

அதைக்கண்ட தேவர்கள் குடம், குட மாகக் கங்கை நீரினால் அவருக்கு அபிஷேகம் செய்தனர். ஆனால் எரிச்சல் குறையவில்லை. ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையாரின் தலைமீது வைத்தார். உடனே எரிச்சல் அடங்கி விட்டது. அனலாசுரன் பிள்ளையாரின் வயிற்றிலேயே ஜீரணம் ஆகி விட்டான். மனம் மகிழ்ந்த விநாயகர் என் அருள் வேண்டுபவர்கள் அருகம் புல்லினால் என்னை அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறினார். அன்று முதல் பிள்ளையாருக்கு அருகம் புல் அர்ச்சனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

தேங்காயால் சிதறி ஓடும் துன்பம்

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, அது சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக் காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்கக்கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங் களும் சிதறும் என்பது ஐதீகம்.

செல்வ வளம் தரும் தெய்வங்கள்

எந்த தெய்வத்தை, எந்த திசையில் வைத்து வழிபட வேண்டுமென்று சாஸ்திர நியதி இருக்கிறது. அந்த திசையில் வைத்து வழிபட்டால் அற்புதமான பலன் கிடைக்கும். ஆனால் நடராஜர் படமும், குரு தட்சிணாமூர்த்தியின் படமும் தெற்கில் பார்க்கும் விதத்தில் வைத்து வழிபட்டால் தான் சிறப்பான பலன்களை நீங்கள் காண முடியும்.

துளசிமாடம் அமைப்பது மட்டும் கிழக்குப் பக்கம் நின்று மேற்கு பார்த்தபடி பூஜை செய்வது நல்லது. துளசியை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

Comments