சர்ப்ப தோஷங்களைப் போக்கும் ஸ்ரீபெரும்புதூர்

சர்ப்ப தோஷம், நாகதோஷத்திற்கு நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும்.
சர்ப்ப தோஷங்களைப் போக்கும் ஸ்ரீபெரும்புதூர்
சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் காள-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும்.

சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

ஸ்ரீபெரும்புதூர் கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும்.

இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காள-சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

Comments