நவபாஷாணத்தால் வடித்துள்ள இரட்டை முக பைரவர்

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் உள்ள சுகந்தவனேஸ்வரர் ஆலயத்தில் இரட்டை முக பைரவர், மேற்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
நவபாஷாணத்தால் வடித்துள்ள இரட்டை முக பைரவர்
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற இடத்தில் சுகந்தவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இரட்டை முக பைரவர், மேற்கு நோக்கியவாறு வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். போகர் என்ற சித்தர், நவபாஷாணத்தில் உள்ள விஷத்தன்மையை நீக்கி பழனி முருகன் சிலையை உருவாக்கினார்.

அதே போகர் தான், இந்த இரட்டை முக பைரவரையும், விஷத்தன்மையை நீக்காமல் நவபாஷாணத்தால் வடித்துள்ளார். பழனி முருகனின் சிலையை வடிப்பதற்கு முன்பே உருவாக்கப்பட்டது இந்த பைரவர் சிலை என்று தல வரலாறு கூறுகிறது.

காசி கால பைரவருக்கு நிகரான இந்த பைரவரின் முன்புறம் தீபாராதனை காட்டும்போது பைரவர் போலவும், பின்புறம் தீபாராதனை காட்டும்போது பழனி முருகன் போலவும் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள்.

                                   

Comments