பாவம் போக்கும் பரமன்




பச்சைப்பசேலென்று காடுகளும், அரிய மூலிகைகளும், குளிர்ச்சியான நிரோடைகளும் கொண்டது, கொல்லிமலை, சதுரகிரி என்றொரு பெயரும் இதற்குண்டு.
நாமக்கல், ராசிபுரம் வட்டத்தில் சுமார் 27 கி.மீ. நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள இம்மலைப் பகுதியில் ஏராளமான சித்தர்களும் மனிவர்களும் தவமிருந்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
சங்ககால புலவர்கள் அகநானூறு, புறநானூறு நற்றிணை நூல்களில் கொல்லிமலையைக் குறித்துப் பாடியுள்ளனர். கொல்லி அண்ட குடவர் கோவே எனும் சிலப்பதிகார வரிகளிலிருந்து இம்மலைப் பகுதியில் சேரர் ஆட்சி புரிந்திருப்பதும் புலனாகிறது.
அக்காலத்தில், வல்வில் ஓரி எனும் அரசன் இப்பகுதியில் ஆண்டு வந்தான். ஓரி எனம் சொல்லுக்கு ஒப்பற்றவன் எனப் பொருள் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த ஏழு பெரு வள்ளங்களுள் ஓரியும் ஒருவர் என பெருஞ் சித்திரனார் புறநானூறறில் பாடியுள்ளார்.
ஓரி ஆட்சி செய்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு, அறைப்பளி எனப் பெயர் பிற்காலத்தில் அப்பெயர் மருவி. அறப்பள்ளி என வழங்கலாயிற்று இங்கு எழுந்தருளியுள்ள ஈசன், அறப்பளீஸ்வரர்.
சதுரகிரி வளர் அறப்பளீஸ்வரர் தேவனே என அறப்பளீஸ்வர சதகத்தில் பாடல் ஒன்றுள்ளது. இச்சதகத்தை இயற்றிவர் அம்பலவாண கவிராயர் என்றும், பாடியவர் மோழை கவுண்டர் மகனள் கரும கவுண்டர் எனவும் தலவரலாறில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இங்கு கோயில் அமைந்தது எப்படி?
தற்போது கோயில் உள்ள பகுதி. முன்பு விளைநிலமாக இருந்தது. விவசாயி ஒருவர் அந்த நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கடினமான பொருள் ஒன்றின்மீது ஏர் கலப்பை மோத, அங்கு ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்ட விவசாயி பயந்துபோய் அருகிலிருப்பவர்களை அழைத்த, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, சுயம்பாலான லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டனர். அதை எடுத்து சுத்தப்படுத்தினர். சில நாட்களில் அந்த லிங்கத்திற்கு சிறிய கோயில் அமைக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகளை மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் ஆலயம் விரிவடைந்தது.
சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயம் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராஜ ராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராத்தித்த சோழனின் மனைவியுமான செம்பியன் மகாதேவியார் இங்கு வந்து சுவாமியை தரிசனம் செய்ததுடன், கோயிலுக்கு காணிக்கையாக விலையுயர்ந்த அணிகலன்களை வழங்கியுள்ள தகவலும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் இத்தலம் குறித்துப் பாடியிருப்பதிலிருந்து இதன் தொன்மையையும் பெருமையையும் அறியமுடிகிறது.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்ள்ளத. ராஜகோபுரம் இல்லை. மாறாக நுழைவுவாயில் மண்டபத்தின் மேல் ஈசனும் பார்வதியும் ந்நதிவாகனத்தில் வீற்றிருக்க, திருநாவுக்கரசரும் விநாயகரும் முருகனும் திருஞானசம்பந்தரும் நின்ற கோலத்தில் சுதைச் சிற்பமாக அருள்கின்றனர். உள்ளே பலிபீடம், கொடிமரம், நந்திகேஸ்வரரைத் தொடர்ந்து மகாமண்டபத்தில் நால்வர் சந்நதியையும், மிடுக்காக காவல்புரியும் துவாரபாலகர்களையும் காணலாம்.
அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அறப்பளீஸ்வரர் லி்ஙக ரூபத்தில் அருள்கிறார். சுயம்பு மூர்த்தம் ஆதியில், கலப்பையின் முனையால் சிவலிங்கத்தின் உச்சியில் காயம் பட்ட இடத்தில் ஏற்பட்ட தழும்பினை இன்றும் அபிஷேகம் செய்யும்போது காணலாம். தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் எதுவாயினும் இத்தல இறைவனை மனமுருகி வழிபட்டால் அது விரைவில் நீங்கும் என்பதால், இது பாவ விமோசன தலமாகும்.
மகாமண்டபத்தில் அறம் வளர்த்த நாயகி தெற்கு நோக்கி நான்கு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்மன் சந்நதிக்கு முன் விதானத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட அஷ்டலட்சுமி மற்றும் ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
இந்த ஸ்ரீ சக்கரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தால் மன அமைதியும் நற்பல்னகளும் பெறலாம் என்கின்றனர். சுவாமியையும் அம்பாளையுளம் விரதம் இருந்து வேண்டினால் திருமணத்தடை நீங்குவதாகவும், புத்திர பாக்யம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். அவ்வாறு பலன் பெற்றவர்கள் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்து, தங்கள் நன்றிக் கடனைச் செலுத்துகின்றனர்.
ஈசன் சந்நதி வெளிச்சுற்றில் தட்சிணா மூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வள்ளி - தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமான். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சரஸ்வதி, சண்டிகேஸ்வரர், நவகிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் தனிச்சந்நதிகளில் அருள்கின்றனர். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நதி விமானங்களை காசியில் உள்ளதைப் போன்றே வடித்திருக்கின்றனர்.
ஒரே இடத்தில் நின்று ஈசன், அம்பாள், ஆறுமுகன், விநாயகர் என நான்கு திருஉருவங்களையும் ஒருசேர தரிசித்து மகிழும் அரிய வாய்ப்பு இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகைச் சிறப்புகளையும் பெற்று திகழ்கிறது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி - தெய்வானை சமேத சண்முகப் பெருமான் பன்னிரு கரங்களுடன் திகழ்கின்றார். அருணகிரிநாதர் இத்தலத்தை தரிசித்து தமது திருப்புகழில் தொல்லை முதல் எனத் தொடங்கும் பாடலில் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். இப்பாடலில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் வருவது சிறப்பு.
இத்தலத்திற்கு வடபுறத்தில் ஐந்து நதிகள் ஒன்றாக கலந்து ஓடி வருகிறது. இது ஐயாறு, பஞ்சநதி என்றெல்லாம் அழைக்கப் படுகிறது. ஆயிரக்கணக்கான மூலிகைகள் கலந்து வற்றாத ஜீவநதியாய் ஓடி வரும் இநநதி, ஆகாய கங்கையாய் சுமார் 150 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்த விழுவது அனைவரத நெஞ்சத்தை அள்ளும் வண்ணம் உள்ளது. இப்பகுதிக்கு சுமார் 750 படிகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும்.
இந்த ஆற்றில் வண்ணமயமான மீன்கள் ஏராளமாக உள்ளன. அறப்பளீஸ்வரர் இங்கு மீன் வடிவமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றன. வழிபாட்டுக்கு முன்னர் இங்கு வரும் பக்தர்கள் இம்மீன்களுக்கு உணவு அளிக்கின்றனர். மீன்களை அச்சமின்றி பக்தர்கள் அருகில் வந்து உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்கின்றன. இந்த அருவி நீர், முசிறி வழியாக காவிரியில் கலக்கிறது.
இக்கோயிலில் பூஜைகள் திருவிழாக்கள் ந்நதவனம் போன்றவற்றுக்காகவும் பராமரிப்பு செலவினங்களுக்காகவும் தேவையான வருவாய் ஈட்டும் பொருட்டு அரசர்களும், பக்தர்களும் நிலம் போன்றவற்றை கோயிலுக்கு தானமாக வழங்கி உள்ளதை கோயிலில் பல்வேறு இடங்களில் காணப்படும் கல்வெட்டுச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. சுமார் 20 கல்வெட்டுகள் உள்ளன.
தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக பஞ்சநதியும் விளங்குகின்றன. பிரதோஷ காலத்தில் ஈசனுக்கும், நந்திகேஸ்வரருக்கும், ஒரே நேரத்தில் அபிஷேக, ஆராதனைகள் நடப்பதோடு, பிரதோஷ மூர்த்தி மூன்றுமுறை உட்பிராகாரத்தில் வலம் வருதலும் நடக்கிறது.
சிவாகம முறைப்படி தினமும் மூன்று கால பூஜைகள் நடந்து வருகினறன. இத்தலத்தில் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, ஆருத்ரா தரினசம், கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம் என விழாக்கள் பல கொண்டாடப் பட்டாலும் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஆடி 18ம் பெருக்கு இத்தலத்தின் பெருவிழாவாகும். ஆடி 15ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, மஞ்ள் நீராட்டு, கொடியிறக்கம் என ஐந்து நாட்களும் கோலாகலம்தான்.கொல்லிமலையில் உள்ள அத்தனை ஊர்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக வந்து இவ்விழாவில் கலந்து கொள்வர் இங்கு வாழும் பூர்வகுடிகளான மலைவாழ் மக்கள் பல வண்ண உடைகள் அணிந்து இவ்வாழ்வில் கலந்து கொள்வது கண்களுக்கு விருந்தாக அமையும்.
பல சிறப்புகள் ஒருங்கே அமையப் பெறற இத்தலத்திற்கு நீங்களும் சென்று மூலிகை மணத்துடன் வீசும் காற்றை சுவாசித்து முக்கண்ணனின் அருளையும் பெற்று வரலாமே!

எங்கே இருக்கு: நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை உள்ளது. நாமக்கல்லிலிருந்து 64 கி.மீ. சேலத்திலிருந்து சுமார் 100 கி.மீ.

தரிசன நேரம்: காலை 7 - பகல் 1; மதியம் 2.30 - இரவு 7.

Comments