அக்னி ரூபத்தில் அன்னை ஜ்வாலாதேவி

ஹிமாச்சலப் பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ளது அன்னை ஜ்வாலாதேவி கோயில். 51
சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அவற்றில், சதி தேவியின் நாக்கு பகுதி விழுந்த இடம் இதுவெனக் கூறப்படுகிறது. அன்னை ஜ்வாலாதேவி, இங்குள்ள மலைப்பாறை இடுக்குகளிலிருந்து தம்மை ஒருவித வாயுவாக தொடர்ந்து வெளிக்காட்டுகிறாள். அது காற்றுடன் கலந்து தீச்சுடராக எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை, இயற்கையின் தெய்வீக சக்தி என்று அங்குள்ள பக்தர்கள் கூறுகிறார்கள்.
அக்னி ரூபமாகக் காட்சியளிக்கும் தேவி, இங்குள்ள பாறைகளில் ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக எரிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி,
சண்டிதேவி, சரஸ்வதி, துர்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள். மலைப்பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க, உள்ளே நீல ரூபத்தில் ஜுவாலையாக எரிந்து அருள்பாலிக்கிறது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமா அன்னபூர்ணி, பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா
சண்டிதேவி, மா ஹிங்க்லாஜ் தேவியும் உள்ளனர். இவள் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணம் தருபவள். விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம். அனைத்து ஹிமாச்சலப் பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ளது அன்னை ஜ்வாலாதேவி கோயில். 51
சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. அவற்றில், சதி தேவியின் நாக்கு பகுதி விழுந்த இடம் இதுவெனக் கூறப்படுகிறது. அன்னை ஜ்வாலாதேவி, இங்குள்ள மலைப்பாறை இடுக்குகளிலிருந்து தம்மை ஒருவித வாயுவாக தொடர்ந்து வெளிக்காட்டுகிறாள். அது காற்றுடன் கலந்து தீச்சுடராக எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை, இயற்கையின் தெய்வீக சக்தி என்று அங்குள்ள பக்தர்கள் கூறுகிறார்கள்.
அக்னி ரூபமாகக் காட்சியளிக்கும் தேவி, இங்குள்ள பாறைகளில் ஒன்பது இடங்களில் ஜ்வாலையாக எரிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு ஜ்வாலையையும் மஹாகாளி, அன்னபூர்ணி,
சண்டிதேவி, சரஸ்வதி, துர்கா தேவி, லக்ஷ்மி என வணங்குகிறார்கள். மலைப்பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டிருக்க, உள்ளே நீல ரூபத்தில் ஜுவாலையாக எரிந்து அருள்பாலிக்கிறது மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமா அன்னபூர்ணி, பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா
சண்டிதேவி, மா ஹிங்க்லாஜ் தேவியும் உள்ளனர். இவள் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணம் தருபவள். விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம். அனைத்து தேவியரையும் இங்கே ஜோதி ரூபமாக பக்தர்கள் வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு இடையிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, காரணம் என்னவென்பதை எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த பூமி சந்த் என்ற மன்னன், இந்த அன்னையின் தீவிர பக்தன். அவனது கனவில் தோன்றிய அன்னை, தாம் இத்தலத்தில் சுடர் வடிவில் கோயில் கொண்டிருப்பதாகவும், தம்மை வழிபட்டால் நலமருளுவதாகவும் உணர்த்தினாள். மன்னர் அந்த இடத்தைத் தேடிக் கண்டறிந்து, அங்கு அன்னைக்கு ஒரு கோயில் கட்டியதுடன், வெண்கல மணி ஒன்றையும் காணிக்கையாக வழங்கினான்.
முகலாய மன்னர் அக்பர் இக்கோயிலைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கு எரிந்துகொண்டிருக்கும் தீ ஜ்வாலைகளை அணைக்க உத்தரவிட்டார். படை வீரர்கள் பெரிய அளவில் நீரைப் பாய்ச்சியும், பல விதங்களில் முயன்றும் தீ ஜ்வாலைகளை அணைக்க முடிய வில்லை. தேவியின் ஆற்றலைப் புரிந்து கொண்ட அக்பர், தங்கக் குடை ஒன்றை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, தமது கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தரும்படி அன்னையிடம் வேண்டினார். ஆனால், அதற்கு அன்னை ஜ்வாலாதேவி உடன்பட வில்லை. அதோடு, அக்பர் அளித்த தங்கக் குடையையும் சாதாரண உலோகமாக மாற்றி விட்டாளாம்.
வேறு சில முகமதிய மன்னர்கள் இந்த ஆலயத்தை கொள்ளையிட்டதுடன், கோயிலையும் மிகவும் சேதப் படுத்தி விட்டுச் சென்று விட்டார்கள். கடைசியாக, கி.பி.1813ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இந்த ஆலயத்தைச் சீரமைத்ததுடன் நுழைவாயிலுக்கு வெள்ளிக் கதவுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டவர்களும் இக்கோயில் திருப்பணிக்கு உதவியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாலும், நீரும் சமர்ப்பித்து அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நெருப்பு போல் மனதை வாட்டும் பல சொதனைகளும் இங்கு வந்து அன்னையை வழிபட்டால் நீங்கி விடுகிறதாம். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளை அகற்றும் மந்திரவாதிகள் இங்கு பூஜை செய்து அம்பாளை வழிபடுகிறார்கள். தினமும் கோயிலில் துர்கா சப்தசதி
வாசிக்கப்படுகிறது. தினமும் ஐந்து முறை அன்னைக்கு ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகையால் சிறந்து விளங்கும் இக்கோயிலிலிருந்து சில படிகள் மேலே ஏறிச்சென்றால் பாபா கோரக்நாத் கோயிலை தரிசிக் கலாம். இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள். ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அந்தத் தண்ணீரை நம் மேல் தெளித்து, தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.
இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால், நான்கு அல்லது ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மிகவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் என்று சொல்கிறார்கள். அந்த நீரோட்டத்தில் உள்ள அக்னி ஜ்வாலை இரண்டு, இரண்டரை அடி உயரத்துக்கு மேலே எழுகிறது.
கோயிலின் உள்ளே ஒருவித அதிர்வலைகளை நன்கு உணர முடிகிறது. அக்னி ரூபமாக அன்னை அங்கு அருள்பாலிப்பதாகச் சொன்னாலும், மனித
சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அங்கு இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
செல்லும் வழி: காங்க்ராவிலிருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. ரயில் வசதி உண்டு. ஜபல்பூரிலிருந்து ஆட்டோ, குதிரை வண்டி வசதியும் உண்டு.தேவியரையும் இங்கே ஜோதி ரூபமாக பக்தர்கள் வழிபடுகிறார்கள். பாறைகளுக்கு இடையிலிருந்து வரும் ஜ்வாலை எங்கிருந்து வருகிறது, காரணம் என்னவென்பதை எவராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த பூமி சந்த் என்ற மன்னன், இந்த அன்னையின் தீவிர பக்தன். அவனது கனவில் தோன்றிய அன்னை, தாம் இத்தலத்தில் சுடர் வடிவில் கோயில் கொண்டிருப்பதாகவும், தம்மை வழிபட்டால் நலமருளுவதாகவும் உணர்த்தினாள். மன்னர் அந்த இடத்தைத் தேடிக் கண்டறிந்து, அங்கு அன்னைக்கு ஒரு கோயில் கட்டியதுடன், வெண்கல மணி ஒன்றையும் காணிக்கையாக வழங்கினான்.
முகலாய மன்னர் அக்பர் இக்கோயிலைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கு எரிந்துகொண்டிருக்கும் தீ ஜ்வாலைகளை அணைக்க உத்தரவிட்டார். படை வீரர்கள் பெரிய அளவில் நீரைப் பாய்ச்சியும், பல விதங்களில் முயன்றும் தீ ஜ்வாலைகளை அணைக்க முடிய வில்லை. தேவியின் ஆற்றலைப் புரிந்து கொண்ட அக்பர், தங்கக் குடை ஒன்றை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, தமது கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தரும்படி அன்னையிடம் வேண்டினார். ஆனால், அதற்கு அன்னை ஜ்வாலாதேவி உடன்பட வில்லை. அதோடு, அக்பர் அளித்த தங்கக் குடையையும் சாதாரண உலோகமாக மாற்றி விட்டாளாம்.
வேறு சில முகமதிய மன்னர்கள் இந்த ஆலயத்தை கொள்ளையிட்டதுடன், கோயிலையும் மிகவும் சேதப் படுத்தி விட்டுச் சென்று விட்டார்கள். கடைசியாக, கி.பி.1813ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இந்த ஆலயத்தைச் சீரமைத்ததுடன் நுழைவாயிலுக்கு வெள்ளிக் கதவுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டவர்களும் இக்கோயில் திருப்பணிக்கு உதவியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாலும், நீரும் சமர்ப்பித்து அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நெருப்பு போல் மனதை வாட்டும் பல சொதனைகளும் இங்கு வந்து அன்னையை வழிபட்டால் நீங்கி விடுகிறதாம். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளை அகற்றும் மந்திரவாதிகள் இங்கு பூஜை செய்து அம்பாளை வழிபடுகிறார்கள். தினமும் கோயிலில் துர்கா சப்தசதி
வாசிக்கப்படுகிறது. தினமும் ஐந்து முறை அன்னைக்கு ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகையால் சிறந்து விளங்கும் இக்கோயிலிலிருந்து சில படிகள் மேலே ஏறிச்சென்றால் பாபா கோரக்நாத் கோயிலை தரிசிக் கலாம். இங்கேயும் பாறைகளில் அக்னி பிழம்புகள். ஒரு சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து அந்த அக்னிப் பிழம்புகளை மூட, சிறிது நேரத்தில் குடத்திலிருக்கும் தண்ணீரும் கொழுந்து விட்டு எரிகிறது. அதை அணைத்து விட்டு, அந்தத் தண்ணீரை நம் மேல் தெளித்து, தீர்த்தமாகவும் அளிக்கிறார்கள்.
இன்னுமொரு சிறிய குகையில் பாறைகளுக்கு இடையே நீரோட்டம். ஒரு சிலரே அங்கே நின்று தரிசனம் செய்ய முடியும் என்பதால், நான்கு அல்லது ஐந்து பேர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மிகவும் அருகில் சென்றால் முகத்தில் அக்னி பட்டு விடும் என்று சொல்கிறார்கள். அந்த நீரோட்டத்தில் உள்ள அக்னி ஜ்வாலை இரண்டு, இரண்டரை அடி உயரத்துக்கு மேலே எழுகிறது.
கோயிலின் உள்ளே ஒருவித அதிர்வலைகளை நன்கு உணர முடிகிறது. அக்னி ரூபமாக அன்னை அங்கு அருள்பாலிப்பதாகச் சொன்னாலும், மனித
சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அங்கு இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
செல்லும் வழி: காங்க்ராவிலிருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது. ரயில் வசதி உண்டு. ஜபல்பூரிலிருந்து ஆட்டோ, குதிரை வண்டி வசதியும் உண்டு.

Comments