சூரிய ஆராதனை!

நம் சனாதன தர்மத்தில் மருத்துவர் தெய்வம். மருந்து அமிர்தம். மருந்து தயாரிக்கும் ரகசியம் மந்திரம். அதனால்தான் மனச்சொர்வடைந்த சீதா
தேவியும், உடற்சொர்வடைந்த ஸ்ரீராமனும் கூட சூரிய சக்தியை உபாசனை செய்து சகஜ நிலைக் குத் திரும்பி, வெற்றிக்கு ஒரு வருக்கொருவர் உதவிகரமாக அமைந்தனர்" என்றார் தம் சொற்பொழிவில் பிரம்மஸ்ரீ காசீபொட்ல சத்யநாராயண. அவரது சொற்பொழிவிலிருந்து மேலும்...
ராம - ராவண யுத்தம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் ராவணன், சீதா தேவியிடம் ஒரு கபடயுக்தியைப் பிரயோகித்தான். மகா மாயாவியான ராவணன் ‘வித்யுஜ்ஜிஹ்வன்’ என்ற மந்திரவாதி அரக்கனை அழைத்து சீதையின் மனதை சிதற அடிப்பதற்காக ஒரு ஆலோசனை செய்தான். அதில், ‘அரக்கனே! நீ ராமனுடைய தலையையும் பாணத்தோடு கூடிய கோதண்டத்தையும் ஸ்ருஷ்டி செய்து சீதையிடம் எடுத்து வா’ என்று கூறி, அசொக வனத்துக்குச் சென்றான்.
அங்கே, ‘சீதே! ராமனின் தலையை அவன் தூங்கும் போது துண்டித்து விட்டோம். லட்சுமணனும் மற்ற வர்களும் உயிரைக் காத்துக்கொள்ள ஓட்டம் பிடித்து விட்டார்கள். எனவே, நீ என் வசப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று கொக்கரித்தான்.
அரக்கன், ராவணனின் ஆணைப்படி ஸ்ரீராமனின் தலையையும் கோதண்டத்தையும் கொணர்ந்து சீதை அருகில் வைத்துவிட்டுச் சென்றான். அவற்றைப் பார்த்த சீதை துக்கித்து மூர்ச்சித்தாள். அதற்குள் ஏதோ அழைப்பு வர, ராவணன் அவ்விடம் விட்டகன்றான். அவன் சென்ற உடனே சிரசும் தனுசும் கூட மாயமாகி விட்டன.

மானஸீகமாக பலவீனமாகிப் போன சீதையின் மனத்தைத் தேற்றும் விதமாக விபீஷணனின் மனைவி ‘சரமா’ சீதையின் சகியாக அங்கு வந்து சேர்ந்தாள். ராமன் கே்ஷமமாக இருக்கும் விஷயத்தை எடுத்துக் கூறி, அவளுக்கு தைரியமூட்டினாள். அதோடு, ‘குதிரை போல மேருமலையை வெகு விரைவில் பிரதக்ஷிணம் செய்பவனும், இருளை ஒளியாகச் செய்யக்கூடியவனுமான சூரிய பகவானைச் சரணடை’ என்று அறிவுறுத்தினாள் சரமா.
அதுமுதல், சீதா தேவி திவாகர ஆராதனையை ஆரம்பித்தாள். ராவண சம்ஹாரம் முடியும் வரை சூரிய உபாஸனையை அவள் விடாமல் செய்து வந்தாள்.
இது இவ்விதம் இருக்கையில், ராம - ராவண யுத்தம் தொடங்கி முடியும் நிலையில் இருந்தது. ராவணனைத் தவிர, அவனுடைய மித்திரர்கள், புத்திரர்கள், பரிவாரங்கள் அனைத்தையும் ராமன் வதைத்து விட்டான். ஆயினும், அவர்களில் இந்திரஜித்து போன்றவர்களால் ராமனும் மிகவும் சொர்வடைந் திருந்தான். இறுதியில், ராவணனோடுயுத்தம் செய்து அவனுக்கு அயர்ச்சியை உண்டாக்கி ஓய்வெடுத்துக் கொள்ளும்படி எச்சரித்து அனுப்பினானே தவிர, தானும்கூட மிகவும் களைத்துப் போனான்.
ராமன் உடலளவில் சொர்ந்திருந்தான். ராவணனோ, ஓய்வெடுத்து யுத்தத்துக்குச் சித்தமாக இருந்தான். அச் சமயத்தில் ராமனுக்கு சகல வித்யைகளும் அறிந்த அகஸ்திய மகரிஷி சூரிய சக்தி மூலம் சிகிச்சை அளித்தார். ஸ்ரீ ராமனின் உடலில் சௌர சக்தியைச் செலுத்தினார்.
உலகியல் விஷயத்தில்கூட கணவன் மனைவி இருவரில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மற்றவரின் சிரத்தை மூலம் அது சரியாகிறது என்பதைப் பார்க்கிறோம்.

இங்கு வால்மீகி மகரிஷி ஒரு சிறிய ரகசியத்தை நமக்குப் புரிய வைக்கிறார். சீதையும் ராமனும் பெற்ற சூரிய உபாசனை என்னும் சிகிச்சையில் வேறுபாடு உள்ளது. சீதா தேவி சூரியபகவானை திவா கர சொரூபமாக வணங்கினாள். ஒருவேளை இது மானசீக பல வீனம் உள்ளவர்கள் வணங்கிப் பயன் பெறும் வழிமுறையாக இருக்கலாம்.
ஸ்ரீராமன் ஆதித்ய சொரூபமாக சூரிய பகவானை வணங்குகிறான். இது, உடல் பலகீனம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய வழிமுறை போலும். ஆதித்யன், திவாகரன் என்ற சொற்களின் விளக்கத்தையும் அந்த சொரூபங்களின் சாமர்த்தியத்தையும் பற்றி விரிவாக அறிந்து கொண்டால் இவற்றின் பலன்கள் புரியவரும்.
கணவன், மனைவி இருவரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை ஒருவருக்காக மற்றவர் உபாசனை செய்தால் அந்தக் குடும்பம் பலவீனத்தைக் களைந்து சைதன்யத்தைப் பெறும் என்பது உறுதி.
உத்தராயண ஆரம்பம் சூரிய னின் தேஜஸ் நம்மை விசேஷமாக வந்தடையும் காலமாதலால், மாசி மாதத்தில் சூரிய ஆராதனை செய்வது என்பது நமக்கு மகரிஷிகள் உபதேசித்த மார்க்கம்.
அதனால், ‘ஸ்வாமீ! உன்
தேஜஸ்ஸை என் உடல் தாங்கும்படி அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்திப்பது மாக (மாசி) மாதத்தில் நமது கடமை. இதற்கு ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டத்தில் உள்ள ஆதித்ய ஹ்ருதயம் ஓர் உபாயம். ஆதித்யனின் சொரூபத்தை அறிந்து கொண்டு வழிபடுவது விசேஷ பலன்களை அளிக்கும் என்பதில் ஐயமில்லை."

Comments