துக்காராம் உருவத்தில் பாண்டுரங்கர்!

சீக்கியர்களின் புனித நூலில் கூட மகான் துக்காராமின் அபங்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது எங்களுக்கு வியப்பான செதியாக இருந்தது.
"அது எப்படி?" என்று ஆச்சரியமாகக் கேட்டான் ஜருகண்டி.
"சீக்கிய மதத்தின் நம்பிக்கை இதுதான். அதாவது ஒரு கட்டத்தில் தன் மனதுக்கினிய புனிதர்களுக்குள் இறை வன் புகுந்துகொள் கிறான். அதற்குப்பிறகு அவர்கள் வாயில் இருந்து வெளியாகும் சோற் களுக்கு அவர்கள் காரணம் இல்லை. இறைவன்தான் அவர்கள் மூலமாகப் பேசுகிறான். இதுதான் சீக்கியர்களின் நம்பிக்கை. அந்த விதத்தில் சீக்கிய மதத் தைச் சேராத துக்காராமின் தெவிகத் தன்மையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டு சிறப்பு செதிருக்கிறார்கள். துக்காராம் வெளிப்படுத்திய கருத்துகளும் சீக்கிய மதக் கருத்துகளும் கூட பலவிதங் களில் ஒத்திருந்ததும் ஒரு காரணம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
"அட, துக்காராமின் பெருமை அந்தளவுக்குப் பரவியிருந்ததா?" என்று ஜருகண்டி பரவசப்பட்டான்.
துக்காராமின் பெருமை வெனிஸ் வரை கூட பரவியிருக்கிறது என்ற ஒரு விவரமும் பின்னர் தெரியவந்தது.
உலகளவில் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘பக்த துக்காராம்’. பல வருடங்களுக்கு முன்பா கவே - அதாவது 1937ஆம் ஆண்டிலேயே - சிறந்த திரைப்படமாக இது வெனிஸில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப் பட்டது. மகாராஷ்டிரத் தில் உள்ள மூலைமுடுக் குத் திரையரங்குகளில் எல்லாம் வெளியாகி வசூ லைக் குவித்த படம் இது. தயாரித்தவர்கள் பிரபாத் சினிமா நிறுவனம். ‘மக் களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் திரைப்படம்’ என்று தேர்வுக்கான காரணத்தைக் கூறியிருந் தனர் தேர்வுக் குழுவினர். துக்காராமின் சேவையும் பக்திப் பாதையில் மக்களைப் பல நிலைகளைத் தாண்டி அழைத்துச் சென்றதுதானே.
துக்காராமின் தந்தை ஓர் வணிகர். தானி யங்களை வாங்கி விற்று லாபம் ஈட்டியவர். அந்தக் கிராமத்தில் அந்தக் குடும்பத்துக்கு நல்ல பெயர் இருந்தது. வணிகர்களைக் கண் காணித்து உரிய வரிகளை வசூலித்து மன்னனிடம் சேர்க்கும் பணியை யும் துக்காராமின் தந்தை செது வந்தார்.
மகன் துக்காராமை அவர் படிக்க வைக்க வில்லை. கடையில் உட்கார போகிறவனுக்கு எதற்குப் பெரிய அளவில் கல்வி என்று நினைத்திருக்க வேண்டும். துக்காராமுக்கும் இதில் எந்த வருத்தமும் இல்லை. அவரது கவனமெல்லாம் கவிதைகள் இயற்றுவதில் இருந்தது. குரலும் கற்கண்டு. இந்த இரண்டு வரங்களும் ஒருசேர இருப்பதால் அவர் பாடும்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.
சிறுவன் துக்காராம் இளைஞன் ஆனான். மகனுக்கு மணம் முடிக்கவேண்டும் என்று தீர்மானித்தார் தந்தை. ஆனால் அதில் ஒரு சின்னச் சிக்கல். மாதவராவுக்கு இரண்டு நண்பர்கள். இருவருக்குமே திருமண வயதில் மகள்கள் இருந்தனர். இரண்டு நண்பர்களுமே தங்கள் மகளைத்தான் துக்காராம் மணக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.
அதற்கும் ஒரு விடை கிடைத்தது. இரண்டு பெண்களையுமே மகனுக்கு மணம் முடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் துக்காராமின் தந்தை. எல்லோருமே ஒத்துக் கொண்டனர். இருதார மணம் என்பது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்து வந்தது.
இரு மனைவிகளுடன் துக்காராம் அழகா கக் குடித்தனம் நடத்துவதைக் கண்ட அவரது தாயும் தந்தையும் காலப்போக்கில் மன நிம்மதியுடன் இறைவனடி சேர்ந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக துக்காராமின் முதல் மனைவி நோவாப் பட்டு இறந்து விட்டாள்.
எனவே, தனது இளைய மனைவி கமலாபா மற்றும் மூத்த தாரத்தின் மூலம் பிறந்த இரு மகன்கள் ஆகியோருடன் துக்காராம் வாழத் தொடங்கினார்.
பல தெவங்களின் மீதும் பக்திப்பாடல் களைப் பாடுவது என்றிருந்த துக்கா ராமின் கவனம் போகப் போக விட்டலனின் மீது மட்டுமே பாடத் தொடங்கியது. பாண்டுரங்க பஜனையிலேயே அதிக காலத் தைக் கழிக்கத் தொடங்கினார். தானியங் களை மாட்டுவண்டியில் ஏற்றி, பல ஊர் களுக்கும் சென்று விற்கும் வணிகத்தைத் தான் அவர் செது வந்தார் என்றாலும் வணிகத்தின் மீது இருந்த நாட்டம் அவருக்கு மெல்ல மெல்ல குறைந்தது.
தன்னிடம் இருந்த தொகையுடன் ஊராரி டமும் நன்கொடை வசூலித்து தான் வசித்த பகுதியிலேயே பாண்டுரங்கருக்கு ஓர் ஆல யம் எழுப்பினார்.
இறைவன் மீது மட்டுமல்ல, எளியோர் மீதும் துக்காராமின் கவனம் பதிந்தது. அவர் களுக்கும் தன்னால் இயன்ற செல்வத்தை வாரி வழங்கினார். இதில் அவர் குடும்பத் தினருக்குச் சம்மதம் இல்லை.
நாட்டில் பஞ்சம் தோன்றியது. இருக்கும் தானியத்தை விற்பதற்கு என்று எடுத்துச் சென்று ஏழை மக்களுக்கு அவர் இலவசமாக அளித்துவிட்டு வீடு திரும்ப, மகன்கள் இருவரும் அவரிடம் வாக்குவாதம் செ தனர்.
தாங்கள் கூறுவது எதுவுமே துக்காராமின் மனத்தில் பதியவில்லை என்பதை அறிந்த அவர்கள் சலிப்புடன் அந்த வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
இது என்ன மூட பக்தி. வீட்டில் தானியங்கள் காலியாகிவிட்டன. இருக்கும் நகைகளையும் அடகு வைத்தாகிவிட்டது. உமது முட்டாள்தனத்தில்தான் பிள்ளைகளும் வெளியேறிவிட்டார்கள். எப்போது பார்த் தாலும் பாண்டுரங்கனையே ஜெபித்துக் கொண்டிருந்தால் அவனா வந்து சாப்பாடு போடப் போகிறான்?" என்று கத்தினாள் கமலாபா.
பின்னர் தனக்குத் தெரிந்த ஒரு செல்வந் தரிடமிருந்து சில வராகன்களைக் கடனாகப் பெற்று வந்தாள். அந்த வராகன்களைக் கணவரிடம் கொடுத்தாள். இனியாவது பொறுப்புடன் இருங்கள். இந்தப் பணத் தைக்கொண்டு தானியம் வாங்குங்கள். பிற ஊர்களுக்குச் சென்று அதிக விலைக்கு விற்று விட்டு வாருங்கள்" என்றாள். துக்காராமுக் கும் இது நியாயமாகவே பட்டது. கவலைப் படாதே கமலா. நான் நிறைய லாபத்துடன் வந்து சேர்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
அடுத்த ஊருக்குச் சென்றார். அதாவது சென்று கொண்டிருந்தார். அப்போது வானம் கருத்தது. சில நொடிகளிலேயே மழைத் துளிகள் வேகவேகமாகக் கீழே விழுந்தன.
தானிய மூட்டைகளுடன் மாடுகளை நிறுத்தினார். ஒரு மரத்துக்கடியில் நின்றார். தன் மேல் விழுந்த மழைத்துளிகள் அவருக்கு இறைவனின் அருள் முத்துக்களாகப்பட் டன. கருமேகம் அவருக்குக் கார்முகில் வண்ணனை அழுத்தமாக நினைவுபடுத்தியது.
துக்காராம் கீழே அமர்ந்துகொண்டார். கண்களை மூடினார். அவர் வாயில் இருந்து விட்டல கீதங்கள் அடுத்தடுத்து இனிமை யாகப் பொழிந்தன. இயற்கை வெள்ளத் துடன் இசை வெள்ளமும் கலந்தது. தானி யங்கள் எல்லாம் மழைநீரில் கலந்து கரைந்து கொண்டிருந்தன. மாடுகள் தறிக்கெட்டு காட்டின் உட்பகுதிக்குச் சென்று விட்டன. இதில் எதைப்பற்றியும் அறியாதவராக துக்காராம் தன் விட்டல பஜனையில் மூழ்கி இருந்தார்.
அதே சமயம் தனது வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் இன்னொரு துக்காராம். கமலாபாயிடம் மாடுகளை ஒப்படைத்தார். கூடவே நூற்றுக்கணக்கான வராகன் களை அளித்தார்.
வியந்துபோன கமலாபா தன் கணவரைச் சாப்பிட வருமாறு அழைத்தாள். கொஞ்சம் இரு, நதியில் குளித்துவிட்டு வருகிறேன்" என்றபடி வெளியேறினார் அவர்.
தான் வாங்கிய கடனை முதலில் அடைத்துவிட வேண்டும் என்று தோன்றியது கமலாபாக்கு. அப்போதும் வராகன் கள் மீதி இருக்குமே!
தனக்குக் கடன் கொடுத்த செல்வந்தரின் வீட்டை அடைந்தபோது அவளுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அம்மா, நீ சோன்ன சோல் தவறாதவள். துக்காராம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு வந்தான். கடனைச் செலுத்திவிட்டு ரசீதை வாங்கிச் சென்றான்" என்றார்.
கமலாவுக்கு ஆனந்த வியப்பு. தன் கணவருக்கு இவ்வளவு பொறுப்பா? அவர் ஈட்டியது இவ்வளவு லாபமா? கணவருக் காகக் காத்திருக்கத் தொடங்கினாள். ஆனால் துக்காராம் வந்தபாடில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பின்னர் அடுத்த ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினாள். வழியில் காட்டுப்பகுதியில் இருந்து இனி மையான பாட்டுக் கேட்டது.


‘அட, கணவரின் குரலாயிற்றே. குளிக்கிறேன் என்று கிளம்பிவிட்டு இங்கே என்ன செகிறார்?’ கேள்விகள் பொங்க காட்டுக் குள் நடந்தாள் கமலாபா. அங்கே தியானம் செவது போன்ற நிலையில் உட்கார்ந்து கொண்டு விட்டல கீதங்களை இசைத்துக் கொண்டிருந்தார் துக்காராம்.
அவர் எதிரே நின்ற கமலா குளித்துவிட்டு வருகிறேன் என்று இங்கே என்ன செ கிறீர்கள்?" என்று கத்தினாள்.
துக்காராமின் தியா னம் கலைந்தது. நான் எப்போது உன்னிடம் வந்து குளித்துவிட்டு வரு வதாகச் சோன்னேன்?" என்றார். சற்றே குழப்பத்துடன் கமலாபா நடந் ததை எல்லாம் விவரிக்க, இப்போது ஆனந்த அதிர்ச்சி அடைவது துக்காராமின் முறையாயிற்று. தன் உருவில் வீடு சென்று வராகன்களை அளித்தவன் பாண்டுரங்கன் தான் என்பது அவருக்கு விளங்கியது.

அபங்க அமுதம்


தாஹீ காஷ்டாசா குமான
கோவீ ப்ரமரா ஸுமன
ப்ரேம ப்ரீதிசே பாந்தலே
தேந ஸுடே காஹீ கேலே நந
பதரீ காலீ பிளா
பாப நிர்பள ஸாடீ பாளா
துகா ம்ஹணே பாவே
பேணே தேவே ஆகாராவே நந

- பக்த துக்காராம்
"கடினமான மரத்தையும் கூட துளைக் கும் சக்தி கொண்ட வண்டு, மலரின் மென் மையான இதழ்களில் அகப்பட்டுக் கொள் கிறது. மலரோ தனது அன்பினால் தேன் அளித்து அதைச் சிறைப்படுத்திவிடுகிறது. வெளியே கிளம்பும்போது உடையின் நுனி யைப் பிடித்துக் கொண்ட தன் குழந்தையை விட்டுவிட்டுச் செல்ல தந்தையால் முடிவ தில்லை. அதுபோல இறைவன் பக்தனின் அன்பிற்கு வசப் பட்டுவிடுகிறான்."

Comments