சர்வம் சக்திமயம்!

நவ’ என்பதற்கு ஒன்பது எனப் பொருள். அன்னை துர்கை ஒன்பது வடிவங்களில் அருள்பாலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. அவை: சைலபுத்ரி, பிரம்ம சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகும். நவராத்திரி நாட்களில் இந்த ஒன்பது அன்னையரை வழிபட, அனைத்து நலன்களும் பெறலாம்.
சைலபுத்ரி: நவராத்திரி முதல் நாளில் வழிபடப்படுபவள். ‘சைலபுத்ரி’ என்றால் மலைமகள் எனப்பொருள். கரங்களில் சூலமும் தாமரை மலரும் ஏந்தி, நந்தி வாகனத்தில் காட்சி தருவாள். யோகிகள், யோக சாதனைகளை இவளை வணங்கியே தொடங்குவர். இந்த அன்னையை வழிபட, சிந்தனா சக்தி பெருகும்.
பிரம்மசாரிணி: இரண்டாம் நாள் வணங்கப்படும் துர்கை. ‘பிரம்ம’ என்றால் தபஸ் எனப் பொருள். கரத்தில் கமண்டலத் தோடு காட்சி தருபவள். நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தம்மை வழிபடு வோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள் இந்த துர்கை.
சந்திரகாண்டா: மூன்றாம் நாள் வழிபடப்படும் துர்கை. முன் நெற்றியில் சந்திர பிறையை அணிந்து, மூன்று கண்கள், பத்து கரங்களுடன் சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். இவளை வழிபடுவோர் தெய்வீக சப்தத்தைக் கேட்பர் என்பது ஐதீகம். இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள்பாலிப்பவள் இவள்.
கூஷ்மாண்டா: நான்காம் நாள் சதுர்த்தி அன்று வணங்கப்படுபவள். கூஷ்மாண்டா என்றால் உலகைப் படைத்தவள் எனப் பொருள். இவள் எட்டு கரம் கொண்டவள். இவளது வாகனம் புலி, தர்மத்தின் வடிவம். கரத்தில் உள்ள கலசம் அஷ்ட சித்தியை யும், நவ நிதியையும் தர வல்லது. இன்று யோக
சாதனை செய்வோர் உடல், மன வலிமை பெறுவர்.
ஸ்கந்தமாதா: ஐந்தாம் நாள் பஞ்சமி அன்று வழிபடப்படுபவள். இவள் சிங்க வாகனத்தில் நான்கு கரங்களோடு காட்சி தருவாள். இவள் மடியில் ஸ்கந்தன் காட்சி தருவான். இவள் தூமையின் வடிவம். தம்மை வணங்குவோருக்கு மன அமைதி, ஒருமுகப் பட்ட சிந்தனையைத் தருபவள். இத்தேவியை வழி படும்போது முருகனையும் சேர்த்து வணங்குவது சிறப்பு.
காத்யாயனி: ஆறாம் நாள் துர்கையை காத்யாயனி வடிவில் வழிபடுவர். இவளை மகிஷா சுரமர்த்தினி என்றும் கூறுவர். இவளது கருணை பக்தர்களின் துக்கத்தைப் போக் கும். இவள் நான்கு கரம் கொண்டவள். இந்த அன்னையை வழிபட, எதிரிகள் தொல்லை ஒழியும். பாபம் போகும். மங்கலங்கள் சேரும்.
காளராத்ரி: நவராத்திரியின் ஏழாம் நாள் வழி படப்படுபவள். துர்கா தேவி யின் ஒன்பது வடிவங்களில் மிகவும் உக்ரமானவள். காளராத்தி என்றால் காலத்தின் முடிவு எனப் பொருள். இவளது உடல் கருமை நிறம் கொண்டது. இவள் நான்கு கரத்தோடு, கழுதை வாகனத்தில் வீற்றிருப்பவள். இவளது அருள்நோக்கால் பாவம் தொலையும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும். பக்தருக்கு மங்கலம் அருளுவதால் இவளை ‘சுபங்கரி’ என்பர்.
மகா கௌரி: எட்டாம் நாள் துர்காஷ்டமியன்று வழிபடப்படுபவள். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் சூலத் தையும், மறுகரம் மணியையும் தாங்கி நிற்கும். வெண்மையான காளையை வாகனமாகக் கொண்ட இவளின் அருள் கிட்டினால் வாழ்வு வசந்தமாகும். இவள் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்று பவள்.
சித்திதாத்ரி: நவராத்திரியின் இறுதி நாள் மகா நவமியன்று ஆராதிக்கப்படுபவள். சித்திதாத்ரி என் றால் பக்தருக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் எனப் பொருள். தாமரை மலரில் அமர்ந்து, நான்கு கரங்களில் கதை, சக்கரம், தாமரை, சங்கு ஏந்தி அருள்பாலிப்பவள். ‘சிவபெருமானே இவளை வழிபட்டு அனைத்து சித்திகளையும் பெற்று, அர்த்த நாரீஸ்வரர் ஆனார்’ என தேவி புராணம் கூறுகிறது. இவளை வழிபட்டால், மனதில் உள்ள ஐயம் நீங்கி, பேரானந்தம் அடைவர்

Comments