நவ திருப்பதிகள்!

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 9 கோயில்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரையோரம் அமைந்துள்ளன. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் இவை நவக்கிரகத் தலங்களாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் வழிபடுவது விசேஷம்.
திருவைகுண்டம்: நவ திருப்பதிகளில் முதல் ஸ்தலம் இது. இங்கு ஸ்ரீவைகுண்டநாதர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். மூல விக்ரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன் கமண்டலத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து வழிபட்டதாக தலப்புராணம் கூறுகிறது. தாயார் வைகுண்டவல்லி, சொரநாத நாயகி ஆவார். சூரியன் தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
திருவரகுணமங்கை (நத்தம்):
ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மூலவர் விஜயநன பெருமாள், ஆதிசேஷன் குடைபிடிக்க கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் வரகுணவல்லி, வரகுணமங்கை. சந்திரன் தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
திருப்புளியங்குடி: நத்தத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மூலவர் காசின வேந்தன், தாயார் மலர்மகள் நாச்சியார், புளியங்குடி வல்லி. திருமால் இலக்குமி தேவியுடன் நதிக்கரையில் தனித்திருந்தபோது, தன்னை திருமால் கண்டு கொள்ளவில்லை என பூமாதேவி கோபம் கொண்டு பாதாள லோகம் செல்ல, திருமால் பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இருவரும் சமமே என இரு தேவியருடனும் இங்கு எழுந் தருளி காட்சியளிக்கிறார். பூமாதேவியை சமாதானம் செய்து பூமியைக் காத்ததால், பூமிபாலன் என்ற திருநாமமும் சுவாமிக்கு உள்ளது. புதன் கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
தொலைவிலிமங்கலம் (இரட்டைத் திருப்பதி):
இரண்டு கோயில்கள் அருகருகே உள்ளன. இவை இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகின் றன. தெற்குக் கோயிலில் மூலவர் தேவபிரான், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். ஆத்ரேயசுப்ரபர் தேவபிரானுக்கு தினமும் வடக்குத் தடாகத்திலிருந்து தாமரை மலர்களைக் கொதுபூஜித்து வந்தார். ஒரு நாள் சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களைக் கொது வருகிறார் என்பதை அறிய பின்தொடந்து சென்றார் மாலன். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடந்து வருவதற்கான காரணத்தைக் கேட்க, தேவபிரானோடு சேர்த் துத் தனக்கு அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால் அங்கேயே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்தப் பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக அருள்பாலிக்கிறார். இது ராகு கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
தெற்குக் கோயிலிலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்குக் கோயில் உள்ளது. மூலவர் அரவிந்த லோசனர் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் கருந்தடங்கன்னி. ராகு கிரக தோஷ நிவர்த்தி தலம். முன்னொரு காலத்தில் இத்தலத்தில் தராசும் வில்லும் கிடந்தன. ஆத்ரேயசுப்ரபர் என்ற முனிவர் கைபட்டதும் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் சாபவிமோசனம் பெற்று பரமபத முக்தி அடைந்தனர். இப்படி தராசும் வில்லும் மங்கலம் பெற்ற இடம் தொலைவிலி மங்கலம் ஆயிற்று.
பெருங்குளம்: மூலவர் வெங்கடேஷவாணனாக தாயார் அலமேலு மங்கை, குளந்தை வல்லி தாயாருடன் அருள்பாலிக்கிறார். இவ்வூரில் வாழ்ந்த வேதாசரன் என்ற அந்தணரின் மகள் கமலா வதி என்ற பெண் வெங்கடேஷனை தான் மணப்பேன் என்று தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து தன்மார்பில் ஏற்றுக் கொண்டதாகத்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றானது. மேலும் இங்கு அச்மசாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
தென் திருப்பேரை : ஆழ்வார் திருநகரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் மகரநெடுங்குழைக்காதர், அமர்ந்த திருக்கோலம் கிழக்குப்பார்த்து அருள்பாலிக்கிறார். தாயார் குழைக்காது வல்லி, திருப்பேரை நாச்சியார். சுக்கிரன், பிரம்மா, வருணன் ஆகியோருக்கு பிரத்யட்சணமாக திருமால் காட்சி தந்த ஸ்தலம். துர்வாசமுனிவரின் சாபம் நீங்க பூமாதேவி இத்தலம் வந்து ஜெபித்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்று நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகரக் குண்டலங்கள் கிடைக்க அதைத் திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் திருப்பேரை என்றழைக்கப்பட்டது. இது சுக்கிர கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
திருகோளூர்: இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள். தாயார் குமுதவல்லி, கோளூர் வல்லி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குபேரன் ஒரு சாபத்தால் இழந்த பொருளில் பாதியை, இப்பெருமாளை வணங்கப் பெற்றதாக, தலப்புராணம் கூறுகிறது. எனவே இழந்த செல்வத்தைப் பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழி படலாம். செவ்வாய் தோஷ நிவர்த்தி ஸ்தலம்.
ஆழ்வார் திருநகரி: நம்மாழ்வார் அவதார ஸ்தலம். பெருமாள் கிடந்த கோலத்தில் வெள்ளி அங்கியில் தகதகவென ஜொலிக்கிறார். பெருமாள் ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் ஆதி நாதன் என்ற திருநாமம் இவருக்கு. குருகூர் என்றும் அழைப்பர். பிராகாரத்தில் நம்மாழ்வார் பல ஆண்டுகள் பிண்டமாக வாழ்ந்த புளியமர பொந்தை தரிக்கலாம். இந்த மரத்தின் இலைகள் இரவில் மூடாது. குரு கிரக பரிகார ஸ்தலம். Ž
எட்டு கரங்களுடன் சரஸ்வதி வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி, யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகிய வற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப் படும் ‘சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் கல்வி, இன்பம் பெருகும்.
அம்பிகை வழிபாட்டில் துர்கை, காளி, மாரி ஆகியோருக்கு மகிமை அதிகம். துர்கா என்றால் ‘துன்பத்தைப் போக்குபவள்’ என்றும் அர்த்தம் உண்டு. இவள் எட்டு கைகளோடு விளங்கும் போது, அஷ்டபுஜ துர்கை என்ற திருநாமம் பெறுகிறாள். தன்னைச் சரணடையும் பக்தர்கள் எட்டுத்திசைகளில் எங்கு சென்றாலும் அவர்களுடன் இருந்து எந்தவிதத் தீங்கும் நேராமல்
கோட்டைபோல பாதுகாப்பதாக ஐதிகம்.
பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் சரஸ்வதி, எட்டுக் கைகளுடன் சில தலங்களில் காட்சி தருகிறாள். மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றை கைகளில் தாங்கி சற்று உக்கிரக வடிவத்தில் எழுந்தருளிய இத்தேவி சம்பாசுரனை வதைத்ததாக
‘தேவி மகாத்மியம்’ கூறுகிறது.
‘குமார் தூலி’ கலைஞர்கள்
கல்கத்தாவில் உள்ள ‘குமார் தூலி’ என்ற பகுதியில் களிமண்ணைக் கொண்டு அற்புதமான மகிஷாசுரமர்த்தினி மூர்த்தங்களை உருவாக்கும் பரம்பரைக் கலைஞர்கள் வாழ்கின்றனர். இவர்கள் உருவாக்கிய முர்த்தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய் யப்படுகின்றன. துர்கா பூஜைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, பூஜைக்குரிய திட்டங்கள் தீட்டி, செயல்முறை விதிகளை உருவாக்கி, இந்தப் பகுதிக் கலைஞர்கள் இரவு பகலாக உழைத்து மூர்த்தங்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப உருவாக்கு கிறார்கள்.

Comments