திருப்புகழில் மயங்கிய திருக்குமரன்!

அழகு, அறிவு, திறமை, நற்குணங்கள் என அனைத்தும் ஒருவரிடமே அமைந்திருப்பது இயலாத காரியம். அதுவும் இவ்வளவும் ஒரு பெண்ணிடம் அமைந்துவிட்டால், சுற்றுவட்டாரம் சும்மா விட்டுவைக்குமா?
ஆனால், அந்தப் பெண்ணோ எந்த வலையிலும், வம்புகளிலும் சிக்காமல், அற்புதமாகத் தன் வாழ்வை நடத்தி வந்தாள். அதிகாலையில் எழுவது, நீராடுவது, நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வது, மலையை வலம் வந்து, அதன்பின் மலையேறி சுவாமி சன்னிதியில் நின்று, பழனியாண்டவா, கணிகையர் குலத்தில் தோன்றிய நான், இங்கே குடவிளக்கெடுத்தல், ஆடல், பாடல் என்பனவற்றின் மூலம் உன்னை வழிபட்டு வருகிறேன். என் உள்ளத்தில் இரு! எனக்கு நற்கதி அளி" என வேண்டுவார்.
‘கருப்பிணி அகற்றும் திருப்புகழ் பாடுவதே என் பணி’ என்று அவர், சன்னிதியில் நின்று திருப்புகழ் பாடினால், அவரது கண்களில் இருந்து அப்படியே கண்ணீர் வழிந்து, பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்.
தன்னிலை மறந்து, அவர் திருப்புகழ் பாடும் போது, பலமுறை முருகப்பெருமான் அவருக்குத் தரிசனம் தந்திருக்கிறார். அக்காட்சி காணக் கிடைக்காதவர்கள், பாடி முடித்ததும் அப்பெண்ணின் முகத்தில் வெளிப்படும் பரவச நிலை கண்டு, உண்மை உணர்வார்கள்.
அவரது அழகைக் கண்டு யாருமே மயங்கியதில்லை. காரணம்? அவரது அருள்மயமான நடவடிக்கைகள், அனைவருக்குமே அவர் மீது அச்சங்கலந்த ஒரு மரியாதையைத் தோற்றுவித்தன; அதனால்தான்!
கார்த்திகைத் திருநாள்! பாலதண்டாயுதபாணி, பளபளக்கும் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். மலைக்கோயிலின் நான்கு புறங்களிலும் ஸ்வாமி வலம் வரும்போது, ஒவ்வொரு மூலையிலும் பக்தையின் நடனம் நடைபெறும்.
சாதாரணமாக, நடனமாடுபவர் பாடுவதில்லை. இசைக்கருவிகள் முழங்கப் பின்னணிப் பாடகர்தான் பாடுவார். ஆனால், நமது பக்தையோ அதைத் தவிர்த்து, தானே திருப்புகழ் பாடுவார்.
அன்று, வடிவேலன் திருவுலாவடக்கு மூலைக்கு வந்தது. நாதஸ்வரம் நிறுத்தப்பட்டது. பக்தை வந்தார். ஆறுமுகன் எதிரில் நின்று வணங்கிக் கண்ணாரத் தரிசித்தார். அழகொழுகும் திருமுகம், வேல் தாங்கிய திருக்கரம், தண்டைகள் சிலம்பும் திருவடிகள், திருவடியைத் தாங்கிய மயில்... என வடிவேலனின் அழகைக் கண்ட பக்தை மனம் உருகினார்.
விசாலத்தோகை விரிய, அனுகூலப்பார்வை வீச மயிலாட, பொன் திருவடி ஆட, வேல் அசைந்தாட, முருகப்பெருமான் ஆடுவதுபோலத் தெரிந்தது பக்தைக்கு. அவ்வளவுதான்! மறுபடியும் முருகனை வணங்கிய பக்தை, நிமிர்ந்தார்; கால் சலங்கைகள் ஒலித்தன. அவரது வாயிலிருந்து சித்ர மிகுத்த சந்தத் திருப்புகழ்வர, பாடத் தொடங்கினார் பக்தை.
அன்று பக்தை பாடிய பாடல், ‘வங்கார மார்பிலணி’ எனும் திருப்புகழ்ப் பாடல். அப்பாடலில் வரும்,
‘சிங்கார ரூப மயில் வாகன நமோ நம
கந்தா குமார சிவ தேசிக நமோ நம சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம’
என்ற அடிகள் வெளிப்பட்டன. அப்போது, பக்தை பரவசத்தின் உச்சிக்கே போவிட்டார். அவர் ஆடிய பரதத்தில் புதுசொபை வெளிப்பட்டது. மறுபடியும் மறுபடியும், ‘சிங்கார ரூப மயில் வாகன’ வரி களே பாடப்பட்டன. பக்தை அன்று முருகனை எவ்வாறு தரித்தாரோ, யாருக்கும் தெரியவில்லை.
தேன் குடித்த வண்டு போல, அனைவரும் செயலற்று நின்று அனுபவித்தார்கள். மாலை ஏழு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, பத்து மணி ஆகியும் நிற்பதாகத் தெரியவில்லை. பார்த்தார் ஆலய அதிகாரி.மெள்ள நாதஸ்வரக்காரரை நெருங்கி, ஓங்கி ஒலிக்கச் சொன்னார். அது ஒலித்ததும் பக்தையின் ஆடல் நின்றது; கண் மூடிய அவர் அப்படியே சாந்தார்.
அவரைத் தூக்கிப்போ, முகத்தில் பன்னீர் தெளித்து, குடிநீர் தந்து ஆசுவாசப்படுத்தினார்கள்.அதன்பின் மற்றைய மூலைகளில், பக்தையின் நடனம் நடைபெறவில்லை. திருவுலா முடிந்து, பிரசாதம் வழங்கப்பட்டு, அனைவரும் இறங்கத் தொடங்கினார்கள்.
மயிலோனையே மனதில் நிறுத்தியிருந்த பக்தை ஒருவாறு தெளிவு பெற்றுச் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் இல்லை. தன்னந்தனியாகத்தான் இருந்ததை உணர்ந்த பக்தை, ‘வேலும் மயிலும் துணையிருக்க வேறு துணை எதற்கு?’ என்றபடியே, மலையிலிருந்து இறங்கத் தொடங்கினார்.
புறப்பட்டவர் சற்று நின்று, வெற்றிலையை மடித்து பாக்குடன் வாயில் போட்டுக்கொண்டு மென்றபடியே இறங்கத் தொடங்கினார். நினைவு முருகனிடம் போக, ‘அடாடா! திருப்புகழைப் பாதியிலேயே நிறுத்தி விட்டோமே...’ எனச்
சொல்லி, விட்ட இடத்திலிருந்து திருப்புகழைப் பாடத் தொடங்கினார்.
வாயில் நிறைந்த வெற்றிலைச் சாற்றை அவ்வப்போது பக்கவாட்டில் உமிழ்ந்தபடியே பாடிக்கொண்டு போனார் பக்தை. அவ்வாறு அவர் உமிழும்போது, சில இடங்களில், ஜரிகைக்கரை போட்ட வெள்ளை மேலாடை வெளிப்பட்டு மறைந்தது.
பாட்டிலேயே லயித்திருந்த பக்தை, அதைப் பார்க்காமல், பாடலை முடித்து வீடு சேர்ந்தார். அன்று விரத நாளாக இருந்ததால், பாலும் பழமும் அருந்தி விட்டுப் பழனியாண்டவரை வணங்கி, அபிஷேக விபூதியைக் கொஞ்சம் எடுத்து நெற்றியில் அணிந்து, படுத்தார். கன விலும் கந்தவேளே காட்சியானார்.
பொழுது விடிந்தது. பக்தை எழுந்தார். நீராடி, தனக்கு உண்டான அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மலை நோக்கி நடந்தார். அதற்குள் கோயிலில், குருக்கள் கருவறைக் கதவைத்திறந்தார்.என்றுமில்லாதபடி, கருவறை தீபம் பேரொளி விட் டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தார் குருக்கள். சர்கைக் கரை வெண்பட்டு மேலாடையுடன் விளங்கிக் கொண்டிருந்த சுவாமியின் ஆடையில் ஆங்காங்கே, ஒரே தாம்பூல எச்சிலாக இருந்தது.
குருக்கள் நடுங்கினார். அச்சத்தினால் அதிர்ந்தார். தகவல் பரவியது. விழாக் காலமல்லவா? கூட்டம் முழுதும் சன்னிதியில் குவிந்து விட்டது. அந்த நேரத்தில், நமது பக்தையும் உள்ளே நுழைந்து விவர மறிந்தார்; துடித்துப் போவிட்டார்; ஐயனின் அலங்காரத் திருமேனி இவ்வாறு அலங்கோலம் ஆக லாமா? தெய்வமே! யார் செய்தது?" எனத் துடித்தார்.
அப்போது அனைவரும் கேட் கும்படியாக ஓர் அசரீரி கேட்டது; நம்மிடம் மிகுந்த பக்தி கொண்ட பக்தை, நேற்று உலாவின்போது பாடியாடிய பாடல் முடியவில்லை. மலையில் இருந்து அவள் இறங்கும் போது, துணையின்றித் தவித்தாள். அப்போது யாமே அவளுக்குத் துணையாகப் பின் சென்றோம். போகும் வழியில், பாதியில் நிறுத்திய பாடலைத் தொடர்ந்து பாடியபடியே, அவள் படியிறங் கினாள்.இடையிடையே அவள் உமிழ்ந்த தாம்பூல எச்சில், திருப்புகழ் கலந்ததாதலால் அதைக்கீழே விழாதபடி, எம் மேலாடையில் ஏற்றோம். இடையிடையே, நம் மேலாடை அவள் கண்களில் தெரிந்தது. ஆனால், அதைக் கூர்ந்து கவனிக்கவில்லை அவள்.
எம் அன்பர் வாக்கே நமக்கு அமுதம். தூமை யான பக்தி நிறைந்த சண்முகவடிவின் (இதுதான் பக்தையின் பெயர்) தனிச்சிறப்பையும் திருப்புகழில் எமக்குள்ள விருப்பத்தையும் உலகவர் அறியவே, இவ்வாறு செய்து காட்டினோம்" என்று கருவறையில் இருந்து வெளிப்பட்ட அசரீரியைக் கேட்டதும், அனைவர் பார்வையும் சண்முகவடிவின் மீது திரும்பியது.
பரமனாலேயே குறிப்பிடப்பட்ட சண்முகவடிவோ, கைகளைக் கூப்பிக் கண்களில் கண்ணீர் வழிய,பரம் பொருளே! இந்த அடிமைக்காக நள்ளிரவில் நடந்து வந்தாயா? கைமாறு என்ன செய்வேன் நான்?" என்று குளறிப் புலம்பினார்.
‘வங்கார மார்பிலணி’ எனும் இப்பாடலைக் கேட்டுத்தான் வள்ளிமலை சுவாமிகள் திருப்புகழில் ஈடுபட்டு, திருப்புகழைக் கற்றுப் பாடிப் பரப்பினார். அதன்பிறகே, திருப்புகழ் வெகுவாக மக்கள் மத்தியில் பரவியது என்பது வரலாறு.
பக்தரைக் காக்கப் பன்னிரு கரத்தோன் தவறுவ தில்லை என்பதோடு, அவர்கள் பெருமையைப் பறை சாற்றவும் தவறுவதில்லை என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி இது.

Comments