கல்வியில் சிறக்க...

தமது வாழ்நாளெல்லாம் ராம நாமத்தை அன்றி வேறொன்றை அறியாதவர் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகள். இவர் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி சிவபெருமானை போற்றித் துதித்த ஒரே திருத்தலம் சென்னை புறநகர், போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கோவூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில். குலோத்துங்கச்
சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் சென்னையைச் சுற்றி அமைந்துள்ள நவக்கிரகத் தலங்களில் புதன் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.


சிவபெருமானை மணம் புரிய வேண்டி அன்னை காமாட்சி மாங்காடு திருத்தலத்தில் அக்னி நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தாள். அம்பாளின் கடும் தவத்தினால் உலகின் சகலமும் வெப்பத்தால் தகித்தது. முனிவர்களும், தேவர்களும் உலகைக் காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பகவான் விஷ்ணு, தாயார் மகாலக்ஷ்மியிடம் உலகைக் காக்கும்படி கூற, தாயார் காமதேனு வடிவில் இத்தலத் தில் ஈசனை வழிபட்டாள்.
மகாலக்ஷ்மியின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், தியானத்திலிருந்து கண் விழித்து மகாலக்ஷ்மிக்குக் காட்சியளித்தார். சிவபெருமானின் கருணை நோக்கினால் உலகம் மீண்டும் குளிர்ச்சி பெற்றது. மகாலக்ஷ்மி காமதேனு வடிவில் ஈசனை பூஜித்த இடமானதால் இத்தலம், ‘கோபுரி’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே ‘கோவூர்’ என்று மருவி விட்டது. அன்னை பார்வதிக்கு ஈசன் தன் சுந்தர சிவலிங்கத் திருமேனியைக் காட்டி அருள்புரிந்த தலமாதலால் இறைவன், ‘திருமேனீச்சுவரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
தெற்கு நோக்கி அமைந்துள்ளது ஏழு நிலை நான் மாட ராஜகோபுரம். பொதுவாக, கோபுரங்களில் புரா ணங்களில் வரும் இறைபாத்திரங்களின் சிற்பங்கள் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால், இக்கோயில் ராஜகோபுரத்தில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் பல்லக்கில் செல்வதுபோல் உள்ள சிற்பம் கோபுரத்தின் இருபுறமும் அமைந்திருப்பது சிறப்பு.
நீண்டு நெடிதுயர்ந்த செப்புக் கவசமிட்ட கொடி மரம். கீழே நந்தி பகவான் ஈசனை நோக்கி அமைந்த திருக்கோலம். கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைந்த கருவறையின் இருபுறமும் துவாரபாலகர்கள் மற்றும் நாகாஸ்கந்தர்கள் விளங்க, மூலவர் சிவபெருமான் லிங்கத் திருமேனியரா, கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். பெருமானின் இடதுபுறம் தனி விமானத்துடன் கூடிய
சன்னிதியில் அம்பாள் சௌந் தராம்பிகை நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். பெருமான் - அம்பிகை இருவரையும் ஒருசேர வலம் வரும் சன்னிதி அமைப்பு. பெருமானின் கருவறை கோஷ்ட மூர்த்தங் களாக கணபதி, தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்கா ஆகியோர் காட்சி தருகின்றனர். அதேபோல், அம்பாள் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக இந்திராணி, மாகேஸ்வரி, மகாலக்ஷ்மி, ப்ராம்மி, சண்டேஸ்வரி, துர்கி ஆகியோர் காட்சி தருகின்றனர்.
கருவறை பிராகார வலத்தில் நால்வர், காளிகாம் பாள் - வீரபத்ரர், சோமாஸ்கந்தர், முத்துமாரியம்மன், சந்திரசேகரர், கருணாகரப்பெருமாள், வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர், அறுபத்துமூவர், நடராஜர் - சிவகாமியம்மை ஆகியோரையும் தரிசிக்கலாம். தவிர, நுழைவாயிலின் இருபுறமும் பெருமானை நோக்கிய கோலத்தில் சேக்கிழார் மற்றும் சூரிய பகவானும் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தின் தென்கிழக்கில் நவக்கிரகம் மற்றும் சனீஸ்வரருக்கு தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.
கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது ஐராவத தீர்த்தம். இது, ‘சிவகங்கை தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம் சாபத்தின் காரணமாக காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, இத்தலத்தினில் தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது என்பது தல புராணம். அரிதான ஒன்பது பதினாறு என இலைகளைக் கொண்ட மகா வில்வம் தல விருட்சமாகக் காணப்படுகிறது. இது, மருத்துவ குணங்கள் கொண்டதோடு, சகல தோஷ நிவர்த்தியாகவும் விளங்குகிறது.
சேக்கிழார் பெருமானின் அவதாரத் தலமும் இதுவே. ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்’ என்று தொடங்கும் பாடலுடன் அவர் பெரிய புராணத்தை இயற்றியதும் இத்தலத்தில்தான். வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. தவிர, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை தீபத் திருநாள், மார்கழி உற்ஸவம், தைப்பொங்கல், சிவ ராத்திரி, பங்குனி உத் திரம், தமிழ் வருடப் பிறப்பு ஆகியவை விசேஷ நாட்கள்.
சுந்தரேஸ்வரரை யும், சௌந்தராம் பிகையையும் வழி பட, கோரிய வரங் கள் சித்தியாகின்றன. புதன் பரிகாரத் தலம் என்பதால் மாணவர்கள் கல்வி மற்றும் கலைகளில் சிறக்க இத்தல இறைவனை வழிபடுகிறார்கள். தவிர, திருமணம், குழந்தைப்பேறு, கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும் பக்தர்கள் ஸ்ரீசுந்தரேஸ்வரர் மற்றும் சௌந்தராம்பிகையை வணங்கிப் பலனடைகின்றனர்.
அமைவிடம்: போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும்
சாலையில் சுமார் 5 கி.மீ. பஸ், ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 9 வரை.

 

Comments