எல்லாம் வல்ல சித்தர்!

மதுரை மன்னன் அபிஷேக பாண்டியனின்
அரசவை அன்று அல்லோலகல்லோலப்பட்டது. யாரோ ஒரு சித்தராம்! இந்திரஜாலம் போல் திடீரென்று தோன்றுவார்; திடீரென மறைந்து போவார். பார்வை பார்த்திருக்க அவர் காட்டும் சித்து விளையாடல்கள்... அப்பப்பா... அநேகம்... அநேகம்!"
சபையில் சிலர் ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மேலும் சிலாகித்தார்... அந்தச்சித்தர்... ஆமாம். நாங்களும் கேள்விப்பட்டோம். ஆணைப் பெண்ணாக்குவாராம். பெண்ணை ஆணாக் குவாராம். முதியவரை இளைஞர் ஆக்குவாராம்; சிறுவரை முதியவர் ஆக்குவாராம்... காது படப் பேசுகின்றார்கள் மக்கள் என்று ஆச்சரியத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
இன்னொருவர், அடடே... அந்தச் சித்தரா? ஆமாம். சொன்னார்கள். பிள்ளையே பிறக்காது என்று கைவிட்ட ஒரு பெண்ணுக்கு மகப்பேறு உண்டாக அருள்புரிந்தாராமே! இன்னும் கால், கை ஊனமானவர் களை எல்லாம் சரி செய்தாராம். காது கேட்க வைத்தாராம், பேச முடியாமல் தவித்தவரை வாய் பேசவைத்தாராம்! நகருக்குள் ஒரே பரபரப்புதான். எங்கே திரும்பினாலும் அந்தச் சித்தரைப் பற்றித்தான் ஒரே பேச்சு...!" நீட்டி முழக்கினார் அவர்.
ஓரிருவர் சொல்லச் சொல்ல, அவரைப் பற்றிய மேலும் அதிசயச் சம்பவங்கள் அந்த அவையிலே பரவலாகப் பேசப்பட்டது. ஒருவர் சொன்னார், ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். அவர் நீர் வரத்து இல்லாத காலத்திலும் ஆற்றில் வெள்ளம் வரச் செய்வாராம். பிறகு ஆற்று நீரை வற்றச் செய்வாராமே! இரவிலே திடீரென சூரியனை தோன்றச் செய்வாராம். எட்டி மரத்திலும் சுவையான பழம் பழுக்கச் செய்வாராம்!"
அவையினரின் இந்த அதிசயப் பேச்சுக்களை செவி மடுத்தான் அபிஷேக பாண்டியன். அவர்கள் பேசப் பேச, மன்னனுக்குள்ளும் குறுகுறுப்பு! யார் அந்த அதிசயச்சித்தர். அவரைப் பார்க்க வேண்டுமே! அவர் எங்கே இருப்பார்? எப்படி அவரை அழைத்து வருவது? யோசித்துக் கொண்டிருந்தான் மன்னன்.
ஏவலர்களை அழைத்தான். சித்தர் குறித்துச் சொன்னான். சித்தரை அழைத்து வாருங்கள் எனக் கட்டளையிட்டு அனுப்பிவைத்தான்! அவர்களும் சென்றார்கள். சித்தரின் சித்து விளையாடல்களைக் கண்டு அதிசயித்தார்கள். தாங்கள் வந்த காரியம் மறந்து, அங்கேயே நின்றார்கள்.
ஏவலர்கள் திரும்பி வராதது கண்ட அபிஷேக பாண்டியன், அமைச்சர்கள் சிலரை அனுப்பிவைத்தான். அவர்கள் சென்று மன்னனின் கட்டளையைக் கூறினர். சித்தரோ, உமது மன்னனால் எனக்கு ஆக வேண்டியது என்ன? நான் ஏன் அவரை வந்து பார்க்க வேண்டும்?" என்று கூறி அவர்களை உதாசீனப்படுத்தினார்.
செய்தி மன்னனுக்குச் சென்றது. கேட்ட மன்னன் தன் தவறுணர்ந்தான். ‘சித்தரை தாம் சென்று வணங் குவதே முறை; அதை விடுத்து சாதாரண மனிதரைப் போல் எண்ணி அவரை அழைத்து வரக் கட்டளையிட்டோமே’ என்று வருந்தினான். உடனே அவர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.
சித்தர், சொமசுந்தரப் பெருமானின் ஆலயத்துள் இருக்கின்றார் என்று கேட்டறிந்த மன்னன், நேரே
சொமசுந்தரர் சன்னிதிக்குச் சென்றான். அங்கே பெருமானை விழுந்து வணங்கினான். மன்னனின் உளக் குறிப்பறிந்த சிவயோகியான அந்தச்சித்தர், மன் னனுக்கு முன்னதாகவே ஓர் இடத்தில் வீற்றிருந்தார். அந்நேரம் மன்னனும் அவரைக் கடந்து போக நேர்ந்தது. அப்போது மன்னனுக்கு எவ்வித மரியாதையும் தராமல் தன் போக்கில் இறுமாப்புடன் அமர்ந்திருந்தார் சித்தர். அதனைக் கண்டு கோபமுற்ற காவலர்கள், சித்தரைத் துரத்தினர். மன்னர் வந்திருக்கிறார் எழுந்து கொள் என்று மிரட்டினர். அந்த மிரட்டலைக் காதால் கேட்ட சித்தரோ, இடியெனச் சிரித்தார். அந்தச் சிரிப்பு, மன்னனின் சிந்தையைக் கலக்கியது.
சித்தரிடம் வந்த பாண்டியன், அவரிடம் கேள்வி களைக் கேட்க முனைந்தான். உமது நாடு எது? உம் ஊர் என்ன? பேர் என்ன? ஏன் இங்கு வந்து இருக்கின்றீர்?"
வரிசையாகக் கேள்விக் கணைகள் சித்தரை நோக்கி வீசப்பட்டன. எல்லாவற்றையும் சிரித்தபடியே எதிர் கொண்ட சித்தர், அன்பு ததும்ப மன்னனிடம் கூறினார். அப்பனே! நான் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் திரியும் ஒரு சஞ்சாரி. இப்போது நான் இருப்பதோ காசி மாநகரம். நானோர் சித்தன். காடுகளைக் கடந்து, இங்கே இருக்கும் ஆலயங்களைத் தரிசிக்க இங்கே வந்துள்ளேன். மன்னனே, உன்னிடம் இருந்து நான் பெற வேண்டியது ஒன்றும் இல்லையே!" என்று சிரித்தபடியே கூறினார்.
மன்னனுக்கு அந்தச் சிரிப்பு, வேறு விதமாக எண்ணத் தோன்றியது. ‘இவரை எப்படியாவது நாம்
சொதித்து அறிய வேண்டும். இவருக்குள் சித்து விளை யாடல் இருப்பது உண்மையா என்பதை அறிய வேண்டும்’ என்று எண்ணினான்.
அதேநேரம், வேளாளன் ஒருவன் தம் தோட்டத்தில் விளைந்த கரும்பினை எடுத்து வந்து மன்னன் முன் வணங்கி நின்றான். கரும்பினை கையில் வாங்கிய மன்னன், சித்தரைப் பார்த்தான். அவரிடம், நீர் வல்லவர்களில் வல்ல வராக உம்மை நினைத்துக் கொண்டிருக் கின்றீர். ஏதோ சித்துக்களெல்லாம் செய்வார் என்று உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதோ இங்கே நிற்கும் கல்யானைக்கு இந்தக் கரும்பை ஊட்டினால், நீர் எல்லாம் வல்ல சித்தர் என்று உம்மை ஏற்கிறேன். இந்த மதுரையில் எழுந்தருளி எம்மைக் காக்கும் சொம சுந்தரக் கடவுளும் நீரே என்று ஒப்புக் கொள்கிறேன். அதோடு, நீர் விரும்பியதை அளிப்பேன்" என்றான் மன்னன்.
மண்டபத் தூணில் செய்துக்கப்பட்ட அந்தக் கல்யானை, அமைதியாக எந்தவிதச் சலனங்களும் இன்றி இருந்தது. சித்தர் தன் கடைக்கண் பார்வையினால் கல் யானையை நோக்கினார். அவ்வளவுதான், அம்மாத் திரத்தில் கண்திறந்தது கல் யானை. துதிக்கை நீட்டி வாய் திறந்து பிளிறியது. அந்தப் பிளிறலின் அலறல் சத்தம் மண்டபம் முழுதும் எதிரொலித்தது. மன்னன் கையில் இருந்த கரும்பைப் பார்த்தது. படக்கென தன் துதிக்கையை நீட்டி, வெடுக்கெனப் பிடுங்கி வாயில் வைத்துச் சுவைத்தது. அந்தக் கரும்பில் இருந்து வழிந்த சாறு, தரையில் ஓடிப் பெருகியது.
பாண்டியன் திகைத்தான். நடப்பது என்ன என்று மெயுணர்வு பெற்று அறிவதற்குள், சித்தர் மீண்டும் கல் யானையை உற்றுப் பார்த்தார். கரும்பைச் சுவைத்த யானை, இப்போது மன்னன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை வெடுக்கெனப் பிடுங் கிப் பறித்தது. கண்ணிமைக்கும் நொடி தான். எதிர்பாராது நடந்து விட்ட இச்செயல் கண்டு சீற்றமடைந்த காவலர்கள், யானையை அடிக்க கோலினை ஓங்கினர்.
சித்தருக்கோ கண் சிவந்தது. கோபத்தில் யானையைப் பார்க்க, துதிக்கையில் இருந்த முத்துமாலை இப்போது யானையின் வாக்குள் சென்றது. அவ்வளவு தான். மன்னன் இப்போது கடும்கோபம் அடைந்தான். அந்தச்சினம், இப்போது சித்தர் மீது திரும்பியது. மன்னன் கண்ணசைத்தான். மெக்காப்பாளன் சித்தரை அடிக்கக் கை ஓங்கினான். புன்னகை புரிந்த சித்தர், ‘அப்படியே நில்’ என்று கை காட்ட, ஓங்கிய கையுடன் மெக்காப் பாளனும் காவலர்களும் கல்லாச் சமைந்து நின்றனர்.
மன்னன் அதிசயித்தான். தன் தவறை உணர்ந்தான்.
சித்தரின் திருவடிகளில் தடாலென விழுந்தான். தன்னை மன்னித்து அருளும்படி வேண்டி நின்றான். அவன்பால் மனமிரங்கிய சித்தரும், வேண்டுவன கேள் என்று அருள் புரிந்தார். மன்னன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, அதற்கு நிவர்த்தி வேண்டி நின்றான். அப்படியே ஆகட்டும் என அருள்புரிந்த சித்தர், தம் திருக்கரத்தை அந்தக் கல்யானை மீது வைத்தார். அந்த நொடியில் மீண்டும் உயிர் பெற்ற யானை, தன் வாயில் அடக்கி வைத்த முத்து மாலையை மன்னனிடமே திருப்பி அளித்தது. முத்துமாலையைப் பெற்றுக் கொண்ட மன்னன், தலை குனிந்து மீண்டெழுமுன், அவன் பார்வையில் இருந்து மறைந்தார் சித்தர். எங்கு தேடியும் சித்தரின் திரு முகத்தை அவனால் காண இயலவில்லை! யானையோ, வழக்கம்போல் கல்யானையாக தூணுடன் நின்று கொண்டிருந்தது.
மன்னனுக்கு உண்மை புரிந்தது. எல்லாம் நம் சொம சு ந்தரக் கடவுளின் திருவிளை யாடலே என்று மனம் மகிழ்ந்து, பெருமானே தனக்கு புத்திரப் பாக்கியம் அருள இந்தத் திருவிளையாடலை நடத்தினார் என்று மனம் மருகினான். வேத நாயகனாம்
சொமசுந்தரக் கடவுளின்
சன்னிதிக்குச் சென்றான். அடியும் முடியும் தரையிற்பட விழுந்து வணங்கினான்.
நாட்கள் சென்றன. அபிஷேக பாண்டியனுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு விக்ரமன் என்று பெயர் சூட்டினான் மன்னன். சித்தரின் திருவருளால் இந்த பாக்கியம் தனக் குக் கிட்டியதாக மகிழ்ந்து, வெகு நாட்கள் ஆட்சி புரிந்து, சித்தரின் பேரின்பத்திலேயே கரைந்து போனான்.
பெருமானே சித்தராக எழுந்தருளி அதிசயங்கள் நிகழ்த்திய லீலை, திருவிளையாடற் புராணத்தில், ‘கல் யானைக் குக் கரும்பருத்திய படலம்’ என்று குறிப்பிடப்பெற்றது. அந்தச் சித்தர் எல்லாம் வல்ல சித்தர் என்ற திருநாமம் கொண்டு மதுரையில் எழுந்தருளினார். இவரே சித்தர்களின் தலையாய சித்தர் எனப் போற்றப் பட்டார். சிவ பெருமானிடம் இருந்து இந்தப் பரம்பரை தொடங்கியது!
இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்தக் காட்சியின் சிற்பத்தையும் கல்யானைக் கோலத்தையும் கண்டு தரிசிக்கலாம்! எல்லாம் வல்ல சித்தர் சன்னிதி கொண்டு, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

Comments