மிகப் பெரிய நந்தி

கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில், நவகரையில் உள்ளது மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில். ஆசியாவிலேயே மிகப் பெரிய நந்தி இக்கோயிலில் அமைந்துள்ளது. இதன் உயரம் 31 அடி, அகலம் 22 அடி. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சனி பகவானுக்கு இங்குயாக பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாவதாகக் கூறுகிறார்கள்.
முத்தேவியர் திருக்கோயில்
கோயம்புத்தூருக்கு அருகில் ஈச்சனாரியில் உள்ளது மகாலட்சுமி திருக்கோயில். இக்கோயிலில் முப்பெரும் தேவியரானதுர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஒரே சன்னிதியில்கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள வேத மண்டபம் நான்கு வேதங்களைப் பிரதி பலிக்கும் அம்சத்துடன் திகழ்கிறது. தினமும் காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூன்று தேவியரின் மீதும் விழுகிறது. இது, சூரியன் தினமும் அன்னையரைப் பணிந்து வணங்குவதாக ஐதீகம்.
கிருஷ்ண தாண்டவம்
உவபெருமான் ஆடிய தாண்டவங்கள்போல், பக வான் கிருஷ்ணனும் தாண்டவங்கள் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் அன்னையசொதை தயிர் கடையும் சத்தத்தையே ஜதியாகக் கொண்டு, அவள் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, வெண்ணெய் சுவைத்தபடியே ஆடிய நடனம், ‘நவநீத நடனம்.’ ஐந்து தலை நாகம் காளிங்கனின் கர்வம் அடக்கி அவன் தலை மேல் ஆடிய நடனம், ‘காளிங்க நர்த்தனம்.’தனது தோழர்களுடன் கைகோத்து ஆடியது, ‘குரவைக் கூத்து நடனம்.’
சிறிய குடங்களை அடுக்கடுக்காக ஏந்தி இருகரங்களாலும் குடங்களை மேலே தூக்கி எறிந்து பிடித்து ஆடிக்காண்பித்தது, குடக்கூத்து நடனம்.’
பிரதோஷ நடராஜர்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடிக்கு அருகில் மேலக்கடம்பூரில் உள்ளது அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள ரிஷப தாண்டவ மூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் பத்து திருக்கரங்களுடன் உற்ஸவராக அருள்பாலிக்கிறார். இவரை பிரதோஷத்தன்று மட்டும் தான் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சன்னிதிக்குள் எழுந்தருளி இருப்பார். அந்தச் சன்னிதியும் மூடப் பட்டிருக்கும் என்பது தனிச்சிறப்பு.

 

Comments