‘மாத்ரு கயா’

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் ஒரு முறையாவது காசி, கயாவுக்குச் சென்று தந்தை மற்றும் முன்னோர்களுக்கு பித்ருகர்மாக்களைச் செய்தாக வேண்டும் என்கிறது இந்து தர்மம். பீஹாரில் உள்ள‘கயா’ கே்ஷத்திரத்தில் உள்ள விஷ்ணு பாதம் மற்றும் அட்சய வடத்தின் பாதத்தில் பிண்டங்களைச் சமர்ப்பித்து பித்ரு கடனை அடைத்து பித்ருக்களை திருப்திபடுத்துவது இன்றும் அனைத்து இந்துக்களாலும் செய்யப்பட்டு வரும் வழக்கம். இத்தலம் ‘பித்ரு கயா’ என்று அழைக்கப்படுகிறது.
இதேபோல், குஜராத் மாநிலம், சித்தாபூரில் உள்ளது ‘மாத்ரு கயா’ என்கிற இடம். இது தாய்க்கு மாத்திரம் நாம் செலுத்த வேண்டிய கர்மாக்களை செய்யும் இடம்.
புராண காலத்தில் மாத்ரு கயா, ‘ஷ்ரீ ஸ்தல்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. ஒரு கல்பம் என்பது நான்கு சதுர் யுகங்களைக் கொண்டது. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது அதிலிருந்து பூமித்தா மஹாலக்ஷ்மி முதன்முதலில் பூமியில் கால் பதித்த இடம் சித்தாபூர். சரஸ்வதி நதி இங்கே தோன்றி மஹாலக்ஷ்மியை வரவேற்ற புனித பூமி.
சரஸ்வதி நதி தீரத்தில் பரமசிவன் ஐந்து சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்ததால் இந்த இடம் ‘ஷ்ரீ ஸ்தல்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதேபோல், சத்திய யுகத்தில் பிரம்மா வின் புத்திரர் கர்தம பிர ஜாதிபதி தவம் செய்வதற்கு வசதியாக மாதா சரஸ்வதி நதி ரூபத்தில் இங்கே தோன்றியதாகவும், இந்த சரஸ்வதி நதிக்கரையில் கர்தமர் மிக நீண்ட காலம் பகவானைக் குறித்து தவம் செய்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன.
கர்தமருடைய தவத்தில் மகிழ்ந்த ஸ்ரீஹரிவிஷ்ணு அவருக்குக் காட்சியளித்தபோது கர்தமருடைய கண்களிலிருந்து தோன்றிய ஆனந்தக் கண்ணீர்தான் பின்னாட்களில் இரண்டு ஏரிகளாக மாறியது. அவை பிந்து சரோவர், அல்ப சரோவர். பகவானின் இச்சைப் படி முனிவர் ஸ்வாயம்புவமனு தன் பெண் தேவ ஹீதியை கர்தமருக்குப் பெண் கேட்டு வந்ததும், அவர்கள் திருமணம் நடந்த இடமும் இங்கேதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு விஷ்ணுவே கபிலராகப் பிறந்த இடமும் சித்தாபூர்தான்.
பிந்து சரோவர் கரையில்தான் கபிலர் தன் தாய் தேவஹீதிக்கு உபதேசம் செய்தார். ‘கபில கீதை’ பிறந்த இடம் சித்தாபூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் சித்தாபூர் தர்மாரண்யமான பாரதத்தின் நடுப்பகுதியாக விளங்குகிறது. கபிலர் சென்றதும் தேவஹீதி தமது மீதிக் காலத்தை பிந்து சரோவர் தீரத்தில் தவம் செய்து கழித்தார். இறுதியில் தனது கணவர் உருவாக்கிய பிந்து சரோவரில் உருகிக் கரைந்து தேகத்தை விட்டதாக சரித் திரம் கூறுகிறது.
சித்தாபூரில் வாழ்ந்த ஒரு பிராமண புத்ரி அல்பா. இவள் தேவஹீதியுடன் கபில கீதையை கேட்டதோடு, தனது வாழ்க்கையையே தேவஹீதிக்கு சேவை செய்து கழித்தாள். இறுதியில் அவளும் தேவஹீதியைப் போல் அல்ப சரோவரில் தன் தேகத்தைக் கரைத்துக் கொண்டதாகப் புராணம் கூறுகிறது.
பிற்காலத்தில் பரசுராமர்தான் பிந்து சரோவர், அல்ப சரோவர் என்கிற இந்த இரண்டு ஏரிகளும் மிகப் புண்ணிய தீர்த்தம் என்று உலகுக்கு உணர்த்தினார். தந்தை ஜமதக்னியின் வாக்குப்படி பரசுராமர் தனது அன்னை ரேணுகாவின் கழுத்தை வெட்டிக் கொன்ற பாவத்தைப் போக்க இந்த இடத்துக்கு வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாதா ரேணுகாவின் உயிரை, பிள்ளை பரசுராமரின் ஆசைப்படி திரும்பப் பெறச் செய்தாலும், அன்னையைக் கொன்ற பாவம் பரசுராமருக்கு வந்துவிட்டது.
தந்தை ஜமதக்னியின் ஆலோசனைப்படி பரசுராமர் இங்கே பிந்து சரோவரில் தமது தாய்க்கும், தேவஹீதி மாதா மற்றும் அல்பாவுக்கும் மாத்ரு கர்மங்களைச் செய்து அவர்களை கர்ம பந்தங்களிலிருந்து விடுவித்து பகவானுடன் ஐக்கியப்படுத்தினார். பகவானின் அவதாரமான பரசுராமர் மூன்று தாய்களுக்கும் பிள்ளையாக மாத்ரு கர்மங்களைச் செய்த புண்ணிய பூமி சித்தாபூர் என்பதால் இந்த இடம் ‘மாத்ரு கயா’ எனப் பெயர் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு தம் தாய்க்கு செய்ய வேண்டிய கர்மங்களை செய்து, அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்று வருகிறார்கள். இங்கு தர்ப்பணம் செய்து, தாயை நினைத்து மனமார வேண்டுபவர்களுக்கு தாயின் ஆசிர்வாதம் பரிபூரண மாக உடனே கிடைக்கப்பெற்று மனசாந்தி அடைவதாக அனுபவப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
பிற்காலத்தில், குஜேஷ்வர் மஹராஜ் மூல்ராஜ்
கோலங்கி இங்கே ஒரு ருத்ர மஹா ஆலயத்தைக் கட்டி னார். இங்கு, தாக்கு தர்ப்பணம் போன்ற கர்மாக் களைச் செய வருபவர்களுக்கு வசதியாக படித்துறை கட்டி வைத்திருக்கிறார். அவருக்குப் பின் அவர்
மகன் பட்னேஷ்வர் சித்தராஜ் ஆலய பூர்த்தியை செய்து முடித்ததாகச் செய்ப்பேடுகள் கூறுகின்றன.
அமைவிடம்: அகமதாபாத் - அஜ்மீர் மார்க்கத்தில்
சித்தாபூர் ரயில் நிலையம் உள்ளது. அருகில் உள்ள மேஷானா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து
40 கி.மீ. சென்றால் சித்தாபூரை அடையலாம்.

Comments