வேழகிரி வரதர்!

விலங்குகளில் மிகப் பெரிய உருவமும், கம்பீரத் தோற்றமும், அதிக வலிமை உடையதாகவும் கொண்டு உலா வருவது யானை. கோயில்களிலும், திருவிழாக்காலங்களில் வீதிகளிலும் யானையைப் பார்க்கும் குழந்தைகளின் குதூகலம் அளவிடற்கரியது. காட்டு விலங்காக இருந்தபோதும், நமக்குப் பழக்கப்பட்ட நாட்டு விலங்காகவும் இருக்கிறது.
சதம் பிடித்து துவம்சம் செயக்கிளம்பும் அந்தக் குறிப்பிட்ட நேரம் தவிர, மற்ற நேரங்களில் யானை நமக்கு நல்ல விலங்குதான். பெரும்பாலான நேரங்களில்
அந்த யானையின் பாகன் சொல்வதைப் புரிந்துகொண்டு, அதன் படியே செயல்படும் இயல்பினைக் கொண்டது யானை. எனவேதான், யானையைத் தம் கட்டளைக்குக் கட்டுப்படுத்தி, யானை மீது அம்பாரி கட்டி அதன் மீதமர்ந்து மன்னர்களும், மாவீரர்களும் பவனி வந்துள்ளனர்.
அந்த விதத்தில், யானை பவனி என்பது, மிகவும் உயர்வாகக் கருதப் படுகிறது. இந்தப் பாரம்பரியத்தின் படியே, இறைவன், இறைவியையும் யானை வாகனத்தில் அமர்த்தி வீதியுலா காணுதல், பெருந்திருவிழாக்களில் முக்கிய அம்சமாகப் பார்க்கப் படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் தாயார்
சன்னிதியில், திருவிழாக் காலங்களில் ஆண்டாள் எனப் பெயர் கொண்ட கோயில் யானை, காலில் வெள்ளிச்சலங்கை கட்டிநடனமாடும். துதிக்கையில்மவுத் ஆர்கான் பிடித்து வாசிக்கும் அழகே தனி. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் கூட்டத்தையே குதூகலிக்க வைத்து விடுகிறது இந்த யானை.
திருக்கோயில் உற்ஸவ காலங் களில் இறைவன் - இறைவியர் ஏதேனும் ஓர் உற்ஸவத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். யானை வாகனத்தில் சுவாமி கம்பீரமாக வீதியுலா வருவது காணக் கண் கொள்ளாக் காட்சி. அப்படிப்பட்ட ஒரு காட்சியினை காஞ்சிபுரம் வரத ராஜப்பெருமாள் கோயில் உற்ஸவத் தன்று காணலாம்.
‘திருக்கச்சி’ என்று வைணவர் களால் போற்றப்படுவது காஞ்சிபுரம். திவ்யதேசம் நூற்றியெட்டில் முப்பத்தியோராவது திருத்தலம். வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திரு வேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாந்த திருத்தலம் காஞ்சிபுரம். சின்ன காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி தேவஸ்தானம், அருள் மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலின் இறைவன் தேவராஜன், தேவாதிராஜன், ஆகிய திருநாமங்களால் வரதராஜன் அழைக்கப் படுகிறார். திருக்கோயில் அமையப்பெற்றுள்ள இடம் ‘வேழ மலை’ எனப்படுகிறது.
பெருமாளின் தரிசனம் வேண்டி, பிரம்மா கிழக்கு திசை நோக்கி யாகம் நிறைவேற்றியுள்ளார். பிரம்மா வின் வரத்தை நிறைவேற்ற பெருமாள் மேற்கு திசை பார்த்து தோன்றியுள்ளார். வரதராஜப் பெருமாள் சற்று மேடான பகுதியில் நின்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சி யளிக்கிறார். கோயிலின் பரப்பளவு இருபத்தி நான்கு ஏக்கர். அனந்த சரஸ் மற்றும் பொற்றாமரைக் குளம் எனப்படும் இரண்டு திருக்குளங்களின் படிகள் ஒவ்வொன்றிலும் இருபத்தி நான்கு. மூலவர் வரதராஜனைத் தரிசிக்க நாம் மேலேறிக் கடந்து செல்ல வேண்டிய பித்தளைப் படிகள் இருபத்தி நான்கு. அந்தப் பெருமாளுக்கு தினப்படிநைவேத்யம் இருபத்தி நான்கு படி.
மிகப் பிரம்மாண்ட
மாக ஒன்பதடி உயரத்துக்கு நின்றிருக்கும் திருக்கோலத் தில் எழுந்தருளியுள்ளார் வரமருளும் வரதராஜப் பெருமாள். புன்னகை பூத்த திருமுகம், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கதம். பெருமாளின் திருவுருவில் வரத ஹஸ்தம் இல்லை. அதனால் என்ன? அப்பய தீட்சிதர் அவரது பாடலிலேயே கேள்வியும் கேட்டு, பதிலும் பெற்றுப் பாடி நம் சந்தேகத்தினைத் தீர்த்து வைக்கின்றார். ‘பக்தர்கள் கேட்கும் வரங்களை ஆராந்து உரியவைகளை உடனடியாகத் தருபவன் நீ. உனக்குத் தனியாக எதற்கு வரத ஹஸ்தம்?’ என்கிறார் அப்பய தீக்ஷதர்.
அவருக்கு முந்தைய காலத்தவளான ஆண்டாள் அருளிய திருப்பாவையும் அதனையே உறுதி செய்கிறது. ‘தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்... ஆவாவென்று ஆராந்து அருள் ஏலோர் எம்பாவா...’ என்று பாடியுள்ளார் ஆண்டாள்.
பெருந்தேவித் தாயார் கிழக்கு நோக்கி தனிச்சன்னிதி கொண்டுள்ளார். இவர் படிதாண்டா பத்தினி. திருக்கோயிலின் எந்த உற்ஸவத்திலும் பெருந்தேவித்தாயார் கோயிலை விட்டு வெளியேபுறப்பாடு ஆவது இல்லை. வரதராஜப் பெருமாள் மட் டுமே வெளியே புறப்பாடு ஆகிறார். பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் பெருந்தேவித் தாயார் ஜன்ம நட்
சத்திரம். சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரம் வரத ராஜப் பெருமாள் ஜன்ம நட்சத்திரம். அன்று அதிகாலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாளுக்கு அவதார பூஜை, மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
வைகாசி பிரம்மோற்ஸவம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் பெரிய திருவிழா. சித்திரை நட்சத்திரத் தன்று கொடியேற்றம். பத்து நாட்கள் திருவிழா. ஹஸ்த நட்சத்திரத்தன்று முதல் நாள் உற்ஸவம். பத்து நாட்களும் காலை, மாலை இரு வேளைகளிலும் உற்ஸவர் வரதராஜப் பெருமாள் பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் சென்று சேவை சாதித்து, மீண்டும் திருக்கோயில் வந்தடைகிறார்.
பத்து நாட்கள் உற்ஸவத்தில் ஆறாம் நாள் மாலை ஆறு மணியளவில் உற்ஸவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீராமர் அலங்காரத்தில் தங்க யானை வாகனத்தின் மீது எழுந்தருளி, திருவீதியுலா காண்கிறார்.
இத்திருத்தலத்து பெருமாள், தன்னை நாடி
வரும் பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தந்தருள்
பவர். ஆனாலும், பக்தர்கள் கேட்கும் அத்தனை
வரங்களையும் உடனே தந்தருள்பவர் இல்லை. வரம் கேட்கும் பக்தனின் உரிய தேவை, அதன் உண்மைத் தன்மை, பிறர் நலம், தீங்கு விளைவிக்காமை போன்றவைகளை ஆராந்தே வரங்களைத் தந்தருள்கிறார். நன்மை, தீமைகளை ஆராந்தே பக்தருக்கு வரங்களை நிறைவேற்றித் தந்தருள்கிறார்" என்கிறார் திருக்கோயிலின் மிராசு அர்ச்சகர் ஸ்ரீவத்ஸ பட்டர்.
தரிசன நேரம்: காலை 6 - 12.30, மாலை 3.30 - 8.30.


யானை - துதிக்கை, தடிமனான பெரிய கால்கள், அகன்ற செவி மடல்களைக் கொண்டகாதுகள், அதன் மிகப் பெரிய மொத்த உருவத்துக்கு தொடர்பே இல்லாத மிகச் சிறிய கண்கள் என, ஒரு வித்தியாசமான விலங்குதான்! காண்பதற்கு முரடாகத் தோன்றினாலும் பரம சாதுவான விலங்கு. சொன்னதைக் கேட்கும், கேட்டதைச் செய்யும்!
காட்டில் வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக முன்னிலை வகித்து அழைத்துச் செல்லும். இந்தியாவில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் உண்டு. அதனை, ‘மக்னா’ என்கின்றனர். இது தவிர, யானையின்வால் அடிப்பகுதி மேடாக இருந்தால், அது ஆண் யானை. வால் அடிப்பகுதி ‘வி’ வடிவில் இருந்தால், அது பெண் யானை என்று பிரிப்பர். காடுகளில் தொடர்பு கொள் வதில் யானைகள் படு கில்லாடிகள். யானைகளிலிருந்து வெளிப்படும் ஒரு வித வாசனை மூலம் அவை தங் களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
பொதுவாக, யானைகள் படுத்துக் கொண்டு மட்டுமல்லாமல், நின்று கொண்டும் தூங்கும் இயல்புடையவை. மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் எமோஷன் மையம் ஒன்று போல் இருப்பதால், மனிதனைப் போன்றே யானையும் புத்திசாலியாகக் கருதப்படுகிறது.
யானைக்கு நினைவாற்றல் அதிகம். செவி மடல் களை (காதுகளை) எப்போதும் ஆட்டிக் கொண்டிருக்கும். அதன் நகப் பகுதியில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங்களில் வியர்வை சுரக்காது. அதனால் யானை தன் உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகம் உள்ள செவி மடல் களை ஆட்டிக்கொண்டே இருக்கும்.
பெரிய உருவம் கொண்ட யானை, மிகச் சிறிய அங்குசத்துக்குக் கட்டுப்படும் மர்மம் என்ன?
யானைக்கு வர்ம இடங்கள் உள்ளன. அந்த வர்ம இடங்களில் அழுத்திக் குத்தும்போது யானைகள் கட்டுப் படுகின்றன.
கோடி அர்ச்சனை!
உதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமான் திருக்கோயிலில் கடந்த மார்ச் மாதம் முதல் வரும் மே 1ம் தேதி வரை கோடி அர்ச்சனை நடைபெற்று வருகிறது. இதனை ஐம்பது நாட்கள், ஸ்ரீ சித்சபேசருக்கு தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் ஒரு வேளைக்கு இரண்டு முறை வீதம் இரண்டு வேளைக்கு இரண்டு லட்சம் அர்ச்சனை என செய்து வருகின்றனர்.
வில்வ இலைகளாலும் பல்வேறு மலர்களாலும் தெய்வத்தின் பாதங்களில் சேர்ப்பிக்கும் அர்ச்சனை அளவற்ற பலன்களைத் தரக் கூடியது. அதனைக் காண்பது பெரும் பேறு. இந்த அர்ச்சனை நிகழ்வில், மஹாருத்ரம், அதிருத்ரம் உள்ளிட்டவைகளும் நிகழவுள்ளன. தீட்சிதர்களைக்கொண்டு ஏகாதசருத்ர பாராயணம் செய்து நடவானப் பந்தலில் 2016 கலசங்கள் வைத்து ஆவாஹனம் செய்து, பின்னர் பிரதானமாக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு இரண்டு தங்கக் குடங்கள் வைத்து ஆவாஹனம் செய்து ஸ்ரீ ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் நடத்தப் பட்டுவருகிறது.
ஸ்ரீநடராஜப் பெருமான் அபிஷேகப் பிரியர். எனவே, பெருமானுக்கு விபூதி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சம் பழம், இளநீர், சந்தனம், திரவியப் பொடி முதலானவை கொண்டு மகா அபிஷேகம் செய்தும், பல்வேறு மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்தும், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நடராஜப் பெருமானுக்கு இவ்வளவு நீண்ட நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு பூஜை வைபவம் மிகவும் அபூர்வமானது. இந்த நிகழ்வில் சிவ பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆனந்த நடராசப் பெருமானின் திருவருளைப் பெற வேண்டும்!
தகவலுக்கு: 98944 06321

Comments