காவல் தெய்வங்களை மறவாதீர்!

அமாவாசை, பௌர்ணமி,
செவ்வாக்கிழமைகள், வெள்ளிக் கிழமைகள் போன்ற தினங்களில் காளி தேவியை வழிபடுவது சிறப்பு. இத னால், எதிரிகள் தொல்லை, வழக்குகள் பிரச்னை, பில்லி சூன்யம், வியா பாரத் தடை, திருமணத் தடை போன்ற பலவற்றில் இருந்தும் விடுபடலாம்.
‘காளி’ என்றாலே, பெரும்பாலான வர்களுக்கு பயம்தான். காரணம், காளியின் உருவத் தோற்றம் அப்படி. நாக்கைத் தொங்கப் போட்டபடி இருப்பாள். கண்களில் கோபம் கொப்பளித்த படி இருக்கும். கைகளில் சூலத்தை ஆவேசமாகப் பிடித்திருப்பாள். காலின் கீழே ஒரு அசுரன் மிதிபட்டுக் கிடப்பான். கழுத்தில் மண்டை யோட்டு மாலை தொங்கும். எத்தனை கைகள் இருக்கின்றனவோ, அத்தனை கைகளிலும் ஆயுதங்கள் காணப்படும்.
தோற்றத்தில் இத்தனை முரட்டுத் தனம் இருந்தாலும், தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள்வதில்காளி மிகவும் சாந்தசொரூபி.
அதர்ம வழியில் அட்டகாசம் செய்து வரும் அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கென்று பராசக்தியின் அம்ச மாக அவதாரம் செய்த காளி, மிகுந்த வரப்ரசாதி! அவளிடம் இருக்கின்ற ஆயுதங்கள் எல்லாம், துஷ்டர்களை சம்ஹாரம் செய்து, தன்னை அண்டி வரும் பக்தர்களைக் காப்பதற்காகவே!
காளியின் அவதாரம் பற்றி தேவி மஹாத்மியம், ‘தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையூறு விளைவித்த அசுரர்களை அழித்தொழிக்கவே காளி அவதாரம் செய்தாள். தான் கொண்டிருக்கும் பத்து திருக்கரங்களில் வாள், சக்கரம், கதை, அம்பு, வில், இரும்பாலான தடி, சூலம், குத்துவாள், வெட்டப் பட்ட அசுரன் தலை, சங்கு ஆகியவற்றைத் தாங்கி மிக பயங்கரமான தோற்றத்துடன் அசுரர்களை காளிதேவி சம்ஹாரம் செய்தாள். தீயவர்கள் நசுக்கப் பட்டார்கள்’ என்று சொல்லும்.
இன்றைக்கும் கிராமங்களுக்குச் சென்று பாருங்கள்... எத்தனையோ சிவ - விஷ்ணு ஆலயங்கள் இருந்தாலும், காளி கோயில் என்கிற ஒன்று எங்கோ ஒரு மூலையில் இருக்கும். தன் சன்னிதி தேடி உள்ளூர் கிராமவாசிகள் வருகின்றார்களோ, இல்லையோ... ஆனால் காளியாகப்பட்டவள், எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தான் சார்ந் திருக்கின்ற கிராமத்தைக் காப்பாற்றி வருகிறாள். அவளது சக்தியும் சாந்நித்தியமும் இன்றைக்கும் அந்தப் பகுதியைக் காப்பாற்றி வருகிறது.
எல்லைகளைக் காத்து, விவசாயத்தைக் காத்து, தவறு செய்பவர்களைக் கண்டித்து வருகிறாள்காளி.வனகாளி, பத்ரகாளி, சுந்தரமாகாளி, செல்லம்மா காளி, மதுரகாளி, வக்ரகாளி, பெட்டிக்காளி - இப் படி அமைந்த காளி அம்மன்கள்தான் அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை தன்னை அண்டிய பக்தர் களைக் காத்து வருகின்றனர். பக்தர்களும் வருடத்துக்கு ஒருமுறை விமரிசையான விழா எடுத்து காளியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.
கோபம் இருக்கின்ற இடத்தில்தானே குணமும் இருக்கும்? அதுபோல் பார்ப்பதற்கு ஆவேசமான கோலம் கொண்டிருந்தாலும், அருள்வதில் இவள் அமுதசுரபி. கவிச் சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், வீர சிவாஜி, தெனாலிராமன் - இப்படி காளியின் அருளால் வீரம் பெற்றவர்களும், விவேகம் பெற்றவர்களும், காவியம் படைத்தவர்களும் ஏராளம்.
கல்கத்தாவில் காளி குடிகொண்ட கதையை
சென்ற இதழில் பார்த்தோம். ராமகிருஷ்ண பரம ஹம்சர், மகானாக உருவெடுத்தது இவளது சன்னிதியில்தான். எப்படி காளமேகப் புலவரை திருவானைக் காவலில் அன்னை தயார் செய்தாளோ, அதுபோல் பரமஹம்சர் என்ற ஒப்பற்ற ஆன்மிகவாதியை நமக் குத் தந்தவளும் இந்த காளிதேவி என்ற அன்னையே!
பரமஹம்சருக்கும் காளிக்குமான தொடர்பு மிக வும் ஆத்மார்த்தமானது. உணவைச் சுவைத்தால், தரம் தெரியும். பக்தியை அனுபவித்தால், அருமை புரியும். அதுபோல் காளிதேவியின் மீது தனக்கு இருக்கும் பக்தி எப்பேர்ப்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது அவருக்கு!
ரமஹம்சருடைய அண்ணன் ராஜ்குமார், கல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர காளி கோயிலில் பூஜகராகப் பணிபுரிந்து வந்தார். குடும்ப பொருளா தாரச் சூழல் காரணமாக கல்வியில் ஆர்வம் இல்லாத பரமஹம்சரும் தனது பதினேழாவது வயதில் வேலை தேடி கல்கத்தாவுக்கு வந்தார்.
ஒரு நல்ல உத்தியோகம் கிடைக்கிற வரை அண்ணனுக்கு உதவியாக ஆலயத்திலேயே இருந்து காளிக்குக் கைங்கர்யம் செய்து வந்தார். காளியின் சங்கல்பத்தை யார் அறிவார்கள்? பரமஹம்சருக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே, அவரது பணிகள்காளி கோயிலிலேயே தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் அண்ணன் ராஜ்குமார் இறந்ததும், பரமஹம்சரே அங்கு பூஜகர் ஆனார். ஆனார் என் பதை விட காளியால் பணிக்கப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆலயம் செல்கின்ற பக்த னுக்கு, தான் கொண்டிருக்கிற பக்தி உண்மையானது தானா என்ற சந்தேகம் வரலாம். ஆனால், பூஜை செய்கின்றவருக்கு வரக் கூடாது.
ஆம்! இந்த சந்தேகம், பரமஹம்சருக்கு வந்தது!
தாம் தினமும் பூஜை செய்து வருகிற காளி உண்மையிலேயே கடவுளா? அல்லது கல்லா என்ற சந்தேகம் வந்தது. இதை நிவர்த்தி செய்து கொள்ளும் விதமாக நித்தமும் தான் பூஜிக் கும் காளியிடமே, ‘நீ சத்திய மான தெய்வமாக இருந்தால், எனக்குக் காட்சி தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். அதோடு, காளியை மனதில் இறுத்தி தியானமும் செய்யத்துவங்கினார்.
ஆனால், காளி இவருக்குக் காட்சி தரவில்லை. ‘நான் உன்னை தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தினமும் ஆத்மார்த்தமாக பூஜித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குக் காட்சி தரவில்லை. என் முயற்சிக்குப் பலன் இல்லை. இனி நான் வாழ்வதே வீண்’ என்று காளியின் முன்னால் நின்று கதறி விட்டு, அவளது ஒரு திருக்கரத்தில் இருந்த வாளை எடுத்து தன்னைத் தானே கொல்லத் தீர்மானித்து வாளை உயர்த்தினார்.
உண்மையான பக்தனுக்கு இந்த நிலை ஏற்படகாளி அனுமதிப்பாளா? அந்த நேரத்தில் பரமஹம்
சரைத் தானே ஆட்கொண்டு அவருக்கு ஒரு மயக்க நிலையை வரவழைத்து, வாளைக் கீழே விழச் செய்து விட்டு, பேரானந்த ஒளி சொரூபத்தில் காட்சி தந்து அருளினாள்.
இதன் பிறகுதான் பரமஹம்சரது வாழ்வில் எண்ணற்ற நல்மாற்றங்கள் நிகழ்ந்தன.
இன்றைக்கு நாம் எங்கே வசித்தாலும் சரி... நமது பால்ய காலத்தில் நாம் வழிபட்ட கிராமத்துக் காவல் தெய்வங்களை அடிக்கடி சென்று வணங்க வேண்டும். கல்மிஷம் இல்லாத பால பருவத்தில் நமக்குக் கவசம் போல் இருந்த காவல் தெய்வங்கள் தான் என்றைக்கும் நமக்கு மிகப் பெரிய பாதுகாப்பு.
இன்றைக்கு நகரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் காவல் தெவங்களின் அருமை பெருமைகள் எப்படித் தெரியவரும் என்பது மிகப் பெரிய கேள்வி.
எனவே, முன்னோர்கள் இந்தக் கிராமத்துக் காவல் தெய்வங்களின் மகத்துவத்தை அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி, வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அந்த ஆலயத்தைத் தரிசிக்கச்
செல்லுமாறு அறிவுறுத்துங்கள்.
அப்போதுதான் அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இதை வலியுறுத்துவார்கள். காவல் தெய்வங்களும், கிராமத்து தெவங்களும் அனைத்து நலன்களையும் வழங்கி, இந்த தேசத்தை மட்டு மல்ல, உலகத்தையே சுபிட்சமாக வைத்திருக்க வேண்டும் என்று நாம் எல்லோருமே சேர்ந்து
பிரார்த்திப்போம்.

Comments