குடும்பப் பகை நீங்க...

அந்த இளைஞர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அக்கோயிலின் ரம்மியமான சூழலையோ, அதன் தெய்வீக அமைதியையோ அனுபவிக்கும் நிலையில் அவர் மனம் இல்லை. சிறுவயது முதலே, ‘சொழம்... சொழம்’ என்று தன் நாட்டின் மீது மாளாக் காதல் கொண்டு வீரம் வளர்த்தவர். மிக இளைய பிராயத்தில்களம் புகுந்து சீறிப் பாயும் இளம் சிங்கத்தைப் போலபாண்டிய வீரர்கள் நடுவே தன் வாளினை சுழற்றி சிறிய பாட்டனாரின் தலைக்கு ஈடாக வீர பாண்டியன் தலை கொண்டவர். சொழப் பேரரசின் நம்பிக்கை நட்சத்திரம், சுந்தர சொழரின் மூத்த மகனும், வடதிசை மாதண்ட நாயகருமான ஆதித்ய கரிகாலரை அவருக்கு மிகவும் பிடித்தமான காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் கண்டு பலரும் உவகை யுடன் வணங்கினர்.
ஆனால், அதை இளவரசர் ஏற்காததற்குக் காரணம் அவர் மனம் கொண்ட குழப்பம். அவர் மனம் ஈசனுடன் இடைவிடாமல் உரையாடிக்கொண்டிருந்தது. தனது தந்தைக்கு பின் சிறிய தந்தையான மதுராந்தகரை அரசனாக்க ஒரு குழு முயற்சி எடுத்து வந்தது. சிவத் தொண்டில் சிறந்த செம்பியன் மாதேவி திருவயிறு வாத்த மதுராந்தகரும் சிறந்த சிவபக்தர்தாம். ஆனால், ஒரு அரசர் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது, நாட்டைக் காக்கப் போர் தொடுக்கும் வல்ல வராகவும் இருக்க வேண்டும். சொழ நாட்டின் மீது மீளாக் காதல் கொண்ட தன்னைப் போல வீரத்தில்
சிறந்த அரசன்தானே தேவை? ஆனால், இறைவா இதனால் என் குடும்பத்தில் குழப்பம் விளைந்து விட்டதே. என்னைச் சூழும்பகை என் நாட்டுக்கு நல்ல தில்லையே. என்னுடன் வா....எனக்குத் துணையாக இரு....சொழத்துக்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என இறைஞ்சினார்.அருகிலிருந்த அவரது குதிரை மெதுவாக கனைத் தது. அந்தி சூழும் நேரம். அரண்மனைக்கு திரும்ப வேண்டும். ஆனால், இளவரசருக்கோ மனமில்லை. மெல்ல எழுந்தார். மாவடி ஈசன் இருந்த திசை நோக்கி வணங்கினார். தன் குதிரை மீது ஏறி அமர்ந்தார். குதிரை வழக்கமாகச் செல்லும் பாதையில் பயணித்தது. ஆனால், இளவரசரோ கடிவாளத்தைப் பிடித்துத் திருப்பி வயல்களின் நடுவே பயணித்தார். ஆற்றின் அருகே வருவது ஈரமான காற்றில் இருந்து தெரிந்தது.
இருள் மெல்ல மெல்ல சூழ்ந்து வந்தது. திடீரென்று காற்றின் திசை மாறி சுழன்று அடித்தது. இளவரசர் தலையை குனிந்து, கண்ணில் மண் விழாமல் இருக்க தன் மேலங்கியால் முகத்தை மூடினார். அதற்குள் குதிரை கால் இடறி கீழே விழுந்தது. இளவரசரும் விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் கரங்கள் மணல் நடுவே ஏதோ ஒரு பொருள் மேல் தட்டுப்பட்டது. எழுந்து அமர்ந்து பார்த்தார். குதிரையின் கால் இடறியது எதன் மேல் என்று. அவர் கண்கள் அதிசயத்தில் விரிந்தன. இறைவன் சுயம்பு வடிவில் மணலின் நடுவே காட்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆதித்ய கரிகாலரின் கண்களில் நீர் அருவி போல் பெருகியது. ‘வந்து விட்டாயா ? நான் அழைத்ததும் என்னுடனே வந்து விட்டாயா?’ என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
ஆதித்யரை தேடி வந்த ஈசனுக்கு அவர் இருந்த இடத்தில் விரைவில் ஆலயம் எழும்பியது. ஏகாம்பரேஸ் வரரே தன்னைத் தேடி வந்ததாக எண்ணி இறைவனுக்கு அதே பெயரை சூட்டி மகிழ்ந்தார் இளவரசர். கோயிலுக்கு பல நிவந்தங்கள் கொடுத்து அவ்வூருக்கு ‘ஏகம்பரநல்லூர்’ என்று பெயர் சூடினார். ஆனால், மக்கள் ஆதித்யர் மீது இருந்த அபிமானத்தில், ‘ஆதித்ய மகாதேவர்’ என்று இறைவனைக் கொண்டாடினர். பிற்காலத்தில் அது, ‘அணைகட்டாபுத்தூர்’ என்று வழங்கப்பட்டது.
தன் மீது உண்மையான பக்தி கொண்ட இளவரசருக் காக நேரில் வந்த ஈசன் இன்று வௌவால்கள் நடுவே வாசம் செவதைக் கண்டால் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் கண்களில் படுவது நந்தி மண்டபம். இதன் அருகே அமைந்த நாகலிங்கக் கல்லுக்குக் கீழ் நந்தி சித்தர் என்பவர் சமாதி கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். விமானத்தில் மிக அழகிய சுதை நந்தி இன்று களை இழந்து காணப்படுகிறது. உள்ளே விநாயகர், முருகன், மற்றும் கோஷ்ட தெவங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. இக்கோயிலுக்குள் சீனிவாச பெருமாளும் எப்போதோ வந்து சேர்ந்து தனி சன்னிதியில் காட்சி அளிக்கிறார். கிழக்கு நோக்கிய அப்பனையும் அழகிய இளம் பெண்போன்ற அன்னையையும் ஒற்றை வஸ்திரத்தில் பார்க்கும் போது மனம் பதை பதைக்கிறது.
குடும்பத்தினரால் ஏற்படும் பகை நீங்க வணங்கப்படும் இந்த ஈசன் தன் பொலிவினை திரும்பப்பெற அக்கறையான உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
செல்லும் வழி: அணைக்கட்டாபுதூர் சென்னையில் இருந்து 70 கி.மீ.தொலைவில் உள்ளது. அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம், சஹாய தோட்டம் அருகே அமைந்த இவ்வூருக்கு கோயம்பேடில் இருந்தும் பூந்தமல்லியில் இருந்தும் பேரம்பாக்கம் வரை பேருந்துகள் உள்ளன. அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
தொடர்புக்கு: 94447 29626 / 97502 60484

Comments