கும்பகர்ணனை பாடிய பாவை!

நாற்றத் துழா என்கிற வார்த்தையை திருப்பாவையின் பத்தாம் பாசுரத்தில் அனைவருமே படித்திருக்கலாம். ‘நாற்றத் துழா முடி நாராயணன் நம்மால்’னு வரும். ‘துழா’ என்பதற்கு துளசி எனப் பொருள். ‘நாற்றம்’ என்கிற பதத்துக்கு வாசனை அல்லது நல்ல வாசனை எனப் பொருள். பகவான்,
துளசிக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஏற்றம் கொடுத்தார்ன்னா, தர்மத்தை நமக்குப் புரிய வைக்கணும் என்பதற்காகத்தான்" என்றார் ‘திருப்பாவை’ என்ற சொற்பொழிவில் ஸ்ரீ பாலாஜி பட்டாச்சாரியார்.
கிருஷ்ணாவதாரத்தில், மகாவிஷ்ணுவின் அம்ச மாக சுதாமரும், மகாலட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். கிருஷ்ண பக்தியை இருவருமே அதிகப்படியாகச் செது கொண்டிருந்தார்கள். ஒருமுறை ராதை, சுதாமர் மீது கோபம் கொண்டு
சாபமிட, அவர் சங்கசூடன் என்கிற அசுரனாகப் பிறவி எடுக்கிறார். ராதையும் மாதவி என்கிற பெண்ணாகப் பிறப்பெடுக்கிறாள். அந்த மாதவிக்கு பிருந்தா (துளசி) என்கிற பெண் குழந்தை பிறக்கிறது.
சிறு வயது முதலே கிருஷ்ண பகவான் மீது அதீத பக்தி கொண்ட பெண்ணாக வளர்கிறாள் பிருந்தா. தான் கிருஷ்ணனையே கணவனாக அடைய வேண்டும் என கடும் தவம் புரிந்தாள் பிருந்தா. அவளது தவத்தை மெச்சி பிரம்ம தேவர் அவளுக்கு அந்த வரத்தை அருளினார். ஆனால், வயதாக வயதாக தான் பிரம்ம தேவரிடத்தில் வாங்கிய வரத்தையே மறந்தாள் துளசி. சிவ அம்சமாகப் பிறந்த சங்கசூடனையே அவள் மணந்து கொண்டாள். அசுரனான சங்கசூடன் தேவர் களை பல விதங்களில் கொடுமைப்படுத்தி வந்தான்.
தேவர்கள் அவனை வெல்ல பகவானை சரண டைந்தார்கள். பகவான், சங்கசூடனோடு போர் புரிந்து கொண்டே இருந்தார். ஆனால், பகவானால் சங்க சூடனை வீழ்த்தவே முடியவில்லை. பிருந்தா பதி விரதையாக இருப்பதால்தான் சங்கசூடனை தம்மால் வீழ்த்த முடியவில்லை என்பதைப் புரிந்து கொண்ட பகவான், சங்கசூடனிடம் அவனது கவசத்தை தானமாகப் பெற்று, பிருந்தாவின் முன் கவசத்தோடும் சங்கசூடனின் உருவத்தில் வெற்றி மாலையோடு நின்றார். தன் கணவருக்கு பாத பூஜை செய்து முடித்த பிருந்தாவின் விரதத்துக்கு அன்று பங்கம் வந்து விடவே, அவளது கணவன் போரில் மாண்டான்.
அசுர ரூபத்தில் தன் கணவரைப் போல வந்து பகவான் கிருஷ்ணர் தம்மை ஏமாற்றி விட்டார் என்பதை அறிந்த பிருந்தா, கோபமாக பகவானோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பகவானை, கல் போன்ற உள்ளத்தோடு நீர் வந்ததால் கல்லாகவே போவீர்" என சாபமிடுகிறாள். பகவானும் அவளைப் பார்த்து, இனி நீ மரமாகப் போ" என சாபம் கொடுக்க, அப்படி பூலோகத்தில் வந்ததுதான் சாளக்ராமமும் துளசிச் செடியும்.
வேறு எந்த இலைக்கும் பூவுக்கும் இல்லாத தனியொரு ஏற்றம் துளசிக்கு உண்டு. பகவான் விஷ்ணுவுக்கு உகந்தது துளசிதான். பிருந்தாவின் உண்மையான பக்திக்கும், பதிவிரதை தர்மத்துக்கும் கிடைத்த பரிசாகத் தான் அவளை பகவானே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
‘பத்ரம் புஷ்யம் பலம் தோயம்’னு பெருமாள்
சொல்லும்போது முதல் இடத்தை அந்த பத்ரத்துக்கு தான், அதாவது துளசிக்குத்தான் தர்றார். பகவானின் திருவடியையும் திருமார்பையும் அலங்கரிப்பது துளசிதானே. பக்தனின் வாயில் அதாவது, பெருமாளின் நாமத்தை சொல்லக்கூடிய விஷ்ணு பக்தர்களின் வாயில் அது பிரசாதமாக சேரட்டும்னு தான் அதை பெருமாள் கோயில்களில் கொடுக்கிறார்கள். ‘உண்மையான பக்தி பண்ணு. நான் உன்னை ஏத்துக்கறேன்’னு தான் பகவான், பிருந்தாவின் கதை வழியா நமக்கு காண்பித்திருக்கிறார்.
இதே திருப்பாவை பாசுரத்துல பார்த்தா கும்பகர்ணனுக்கு தனியொரு ஏற்றம் கொடுத்து பாடியிருக்கா ஆண் டாள் நாச்சியார். ஏன்னா, தன் அண்ணன் அதர்ம வழிக்குப் போறான்னு தெரிஞ்சுண்டு, ‘அண்ணா இப்படி பண்ணாதே. தர்ம வழில நில்லு’ன்னு தைரியமாக ராவணனிடத்தில் அவன்தானே உபதேசம் பண்ணினான்?
‘நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனா,
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழா முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்
பண்டொரு நாள்
கூற்றத்தின் வா வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையா அருங்கலமே
தேற்றமா வந்து திறவேலோர் எம்பாவா.’
மேலே சொன்ன திருப்பாவை
பாசுரத்துல பெண்களுக்கான ஒரு முக்கிய செதியையும் சேர்த்து
சொல்லியிருக்கா ஆண்டாள். காலைல எழுந்திருக்கும்போது தூங்கு மூஞ்சியோடவே வாசல் கதவை திறக்கக் கூடாது. மூஞ்சியை அலம்பிண்டு
லேசாகவாவது அலங்காரம் பண்ணிண்டு அப்பறம்தான் கதவைத் திறக்கணும். அப்போதான் சொர்க் கத்தின் வாசல் கதவு உங்களுக்காகத் திறக்கப்படும்.
அதுக்காக மேக் அப் போட்டுண்டு தூங்கணும், எழுந்திருக்கணும்னு அர்த்தம் இல்ல. சிரிச்ச முகத்தோட, மனசுல சந்தோஷத்தை மட்டுமே நிரப்பிண்டு, வாயால் பகவானின் நாமத்தைச்
சொல்லிண்டே கதவைத் திறந்தால் நிச்சயம் பகவான் மோட்சத்தை தருவார் என்பதில் சந்தேகமே இல்லை."

 

Comments