பிரம்மஹத்தி தோ௸ம் நீக்கும் ஐராவதேஸ்வரர்!

ஒரு கோயிலில் ஒரு கருவறையைத்தான் பார்த்திருப்போம். அதிலும் ஒரு மூலவரைத்தான் தரிசித்திருப்போம். ஆனால், ஒரே கோயிலில் இரண்டு கருவறைகளையும், அவ்விரண்டிலும் இரு மூலவர்களை, அதுவும் அம்பாள் சமேதராக தரிசிக்கும் திருத்தலம் ஓசூருக்கு அருகே உள்ள அத்திமுகம் திருத்தலத்தில். காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண் டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் மற்றொரு கருவறையிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சிவலிங்கத் திருமேனி மீது உருவங்கள் பொறிக்கப் படுவது வெகு அபூர்வம். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் திருமேனி மீது யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம்... விருத்தாசுரன் எனும் அசுரன், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருந்திய தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர்.
இந்திரன் தமது வாகனமான ஐராவத யானை மீதேறிச் சென்று விருத்தாசுரனுடன் போரிட்டு அவனை வதைத்தான். இதனால் இந்திரனுக்கும் ஐராவதத்துக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. செவதறியது திகைத்த அவ்வேளையில், ‘அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்’ என்று அசரீரி வாக்கு கேட்டது. அதன் படியே அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இருவரும் தோஷம் நீங்கப் பெற்றனர். ‘ஹஸ்தி’ என்றால் யானை எனப்பொருள். இந்திரனோடு அவனது யானை ஐராவதமும் தோஷ நிவர்த்தி பெற்றதால் இத்தலம், ‘ஹஸ்திமுகம்’ என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அத்திமுகம் என வழங்கலாயிற்று. இத்தலத்தில் ஐராவதம் சிவ பெருமானை வழிபட்டதால் அந்த யானையின் முகம் சிவ லிங்கத்தின் மீது அமையப்பெற்றுள்ளது தனிச் சிறப்பு.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, தம்மை வழிபடுவோரின் அகங்காரத்தை அழித்து ஞானத்தை வழங்குவதால் இப்பெருமான், ‘சம்ஹார தட்சிணாமூர்த்தி’ என அழைக்கப்படுகிறார். வெளிப் பிராகாரத்தில் வடக்கு நோக்கி விநாயகப்பெருமான் அட்சர மாலை அணிந்து அருள்பாலிக்கிறார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியத்துக்காகவும் பக்தர்கள் பெருமளவில் இங்கு வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேம் செதும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் வாரத்தில் சூரியன் தன் பொன்னொளிக் கதிர் களால் இறைவனை பூஜிக்கிறார். ஆதியில் இப்பூஜைக் காகவே இறைவன் முன்பு உள்ள நந்தி சற்று விலகி யிருப்பதாகத் தல புராணம் கூறுகிறது. நவக்கிரக தலை வன் சூரியன், சிவபெருமானை இத்தலத்தில் பூஜிப்ப தால், மற்ற கிரகங்கள் அமைதி காத்து, அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. தினசரி பூஜைகளோடு, மகாசிவராத்திரி, திரு வாதிரை மற்றும் விசேஷ தினங்களில் அம்பாள் பெரு மானுக்கு சிறப்பு வழிபாடுகள் செயப்படுகின்றன. செல்லும் வழி: ஓசூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உண்டு. தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.


 

Comments