காற்றில் கரைந்த கம்பீரக் குரல்!

ழகன் முருகனின் புகழைப் பாடுவதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பித்துக்குளி முருகதாஸ்.
** 1920ம் வருடம் ஜனவரி மாதம் 25ம் நாள், தைப்பூச நன்னாளில் கோவையில் பிறந்தவர் முருகதாஸ். இயற்பெயர் பாலசுப்ரமணியம். இவருடைய தாத்தா அரியூர் கோபால கிருஷ்ண பாகவதர், உஞ்ச விருத்தி பஜனை வித்வானாக இருந்தவர். பாட்டி ருக்மிணி அம்மாள் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். தன் இளம் வயதில், பாட்டியிடம் பல பக்திப் பாடல்களைக் கற்றுக் கொண்டார்.
** ஒருநாள், தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, அந்த வழியாகச் சென்ற பெருமாள் பக்தரும் மகாஞானியுமான பிரம்மானந்த பரதேசியார் மேல் விளையாட்டாகக் கல் எறிந்தார் இவர். கல்லடி பட்டு ரத்தம் வழிந்த நிலையில் அந்தப் பெரியவர், 'அடேய், நீ என்ன பித்துக்குளியா? ஒருநாள் நீயும் பித்துக்குளியாகத்தான் போகிறாய்’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். அவர் வாக்கு பலித்தது. பழநி தண்டாயுதபாணியின்மீது தனக்கு ஏற்பட்ட அதீத பாசம் மற்றும் பக்தி காரணமாக, பாலசுப்ரமணியம் என்ற தன்னுடைய பெயரை 'பித்துக்குளி முருகதாஸ்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.
** சிறு வயதில் விளையாடும் போது கண்ணில் அடிபட்டு, ஒரு கண்ணை இழந்தாலும், அதன் காரணமாகத் தன் மீது யாரும் பரிதாபம் கொள்ளக்கூடாது என்பதற் காகக்  கடைசிவரை கூலிங் கிளாஸ், காவி தலைப்பாகை எனத் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார்.

** தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய ஏழு மொழிகளையும் தெளிவாக உச்சரித்துப் பாடும் திறமை இவருக்கு இருந்தது. இந்த முருக பக்தர் 'அலைபாயுதே கண்ணா’, 'ஆடாது அசங்காது வா கண்ணா’ போன்ற கண்ணன் பாடல்களையும் பாடியுள்ளார்.
** பித்துக்குளி முருகதாஸும், சாண்டோ சின்னப்ப தேவரும் நெருங்கிய நண்பர்கள். தேவரின், 'தெய்வம்’ திரைப்படத்தில், 'நாடறியும் நூறு மலை, நான்  அறிவேன் சுவாமி மலை’ என்னும் பாடலை, சம்பளம் வாங்காமலே பாடிக் கொடுத்தார். அதற்கு ஈடாக, முருகதாஸ் கை காட்டிய ஒரு கிராமத்துக்கு, ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி கட்டிக் கொடுத்தாராம் சின்னப்ப தேவர். அந்த அளவுக்குப் பொதுநலனிலும் அக்கறை கொண்டிருந்தார் முருகதாஸ்.
** இவர் தன்னை ஒருபோதும் 'நான்’, 'எனது’ என்று குறிப்பிட்டுக் கொள்ளமாட்டார். 'இவன் பாடினான், இவன் முருகனை நேசித்தான்’ என்றுதான் சொல்வார். அதுபோலவே, இவரின் துணைவியார் தேவி சரோஜா இவரை 'முருகா’ என்றே அழைப்பாராம்.
** சங்கீத சாம்ராட், கலைமாமணி, மதுரகான மாமணி, சங்கீத நாடக அகாடமி விருது, தியாகராஜர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
** தைப்பூசத் திருநாளில் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதப் பிறப்பும் சஷ்டி தினமுமான கடந்த 2015 நவம்பர் 17 அன்று, தனது 95வது வயதில் முருகப் பெருமானின் திருவடிகளில் ஐக்கியமானார்.
இவ்வுலகில் காற்று தவழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும், பித்துக்குளி முருகதாஸின் முருக கானம் தமிழ்கூறும் நல்லுலகை ஆன்மிக

Comments