ஈசனுக்கு உதவிய சப்தமாதர்!

இன்றைக்கு பெரிய பெரிய சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கு ஒரு சன்னிதி இருக்கிறதோ இல்லையோ... கிராமங்களில் இன்றும் காவல் தெய்வமாக இந்த தேவியர்கள் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிராமத்துப் பூசாரிகள் இந்த சப்தமாதர்களுக்கும் விசேஷமான வழிபாடு செய்வதைப் பார்த்திருக்க முடியும்.
சப்தமாதர் என்றும் சப்தகன்னி என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலான கிராமத்து ஆலயங்களில் காவல் தெய்வமாக வரிசையாக ஏழு பெண்களின் திருவுருவங்கள் காணப்படும். சில ஆலயங்களில் ஏழு கற்களையோ... இன்னும் சில ஆலயங்களில் ஏழு குழிகளையோகூட ‘சப்தமாதர்’ என்று வணங்கும் முறை இருந்து வருகிறது.
யார் இந்த சப்தமாதர்?
பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்தமாதர்.
யோகேஸ்வரி என்கிற தெய்வத்தையும் சேர்த்து ‘அஷ்டமாதர்’ என்றும் சில ஆலயங்களில் சொல்வதுண்டு. அதாவது, எட்டுப் பெண் தெய்வங்கள்.
சப்தமாதர்களுக்குக் காவலாக வீரபத்திரர் மற்றும் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். இடப்புறத்தில் விநாயகர் திருமேனி காணப்படும். சில ஆலயங்களில் வலப்புறத்தில் வீரபத்திரருக்குப் பதிலாக யோக சிவனோ, சாத்தனோகூட இடம் பெற்றிருக்கலாம்.
தொல்லியல் துறை ஆய்வாளர்களின் கருத்துப்படி சப்தமாதர்களுக்குத் தனியாக சிறு கோயில்கள் அமைந்திருந்தன என்றும், காலப்போக்கில் அவை சிதைந்துவிட்ட படியால், அங்கிருந்த விக்கிரகங்கள் எடுத்து வரப்பட்டு, அதே ஊரில் உள்ள சிவன் ஆலயத்திலோ, கிராமப்புற தெய்வங்களுக்கான ஆலயத்திலோ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சப்தமாதருக்கு இருந்து வந்த முக்கியத்துவத்தை இடைக்கால தமிழ் இலக்கியமான ‘கலிங்கத்துப் பரணி’யும் குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அவனுக்குத் தளபதியாக இருந்தவன் கருணாகரத் தொண்டைமான். வரலாறு சிறப்பித்துக் கூறும் கலிங்கத்தை வெற்றி கொண்டான் இந்தத் தளபதி.
இந்த வெற்றியைச் சிறப்பித்து ‘கலிங்கத்துப் பரணி’ பாடினார் சயங்கொண்டார். இந்த நூலுக்கான கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், திருமால், பிரம்மன், சூரியன், விநாயகர், ஆறுமுகன், சரஸ்வதி, கொற்றவை ஆகிய தெய்வங்களைப் போற்றிய பின் இறுதியாக சப்தமாதர்களுக்கும் தன் போற்றிகளைத் தெரிவிக்கிறார். இதிலிருந்து சப்தமாதர் வழிபாடு எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது என்பதை உணர முடியும்.
நமக்குப் பலவித ஆற்றல்களை வழங்கும் அதீத சக்தி கொண்டவர்களாக இந்த சப்தமாதர் விளங்கி வருகிறார்கள்.
திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிவாலயத்தில் இந்த சப்தமாதர் விசேஷமான கோலத்தில் எழுந்தருளி உள்ளனர். சொல்லப்போனால், இந்த ஆலயத்தில் முதலில் எழுந்தருளியவர்கள் சப்தமாதர்கள்தான். அவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து அம்பாளும், பின்னாளில் சிவபெருமானும் இங்கே எழுந்தருளியதாக தல புராணம் சொல்கிறது.
சப்தமாதர் என்று சொல்லப்படும் இந்த ஏழு பெண்களும் திருச்சிக்கு அருகில் உள்ள திருப் பைஞ்ஞீலி திருத்தலம் வந்து அம்மனைக் குறித்து தவம் செய்தனர்.
அம்பாளும் அவர்களின் தவத்துக்கு இரங்கி காட்சி தந்து ஆசிர்வதித்தாளாம்.
தங்களுக்குக் காட்சி தந்து ஆசிர்வதித்த அம்பாளை இந்தத் திருத்தலத்திலேயே எழுந்தருளும்படி சப்தமாதர் கேட்டுக் கொள்ள... அதன் பின் அம்பாளாகப்பட்டவள் இங்கு எழுந்தருளினாள் என்று திருப்பைஞ்ஞீலி தல வரலாறு கூறுகிறது.
தங்களின் வேண்டுகோளின்படி எழுந்தருளிய அம்பாளிடம், ‘நாங்கள் இந்தத் திருத்தலத்திலேயே என்றென்றும் விளங்கி, உன் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் தாயே... திருமணப் பிரார்த்தனையோடு இங்கு வரும் பக்தர்களுக்கு அந்த வேண்டுதல் பலிக்க நீ அருள் புரிய வேண்டும் தாயே’ என்று கேட்டுக் கொண்டனராம்.
அதற்கு இரங்கிய அம்பாளும், ‘நீங்கள் வாழை மர வடிவில் இதே தலத்தில் என்றென்றும் விளங்கி, என் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டே இருப்பீர்கள்’ என்று அருளினாள்.
அதன்படி சப்தமாதர்கள்தான் இந்தத் தலத்தில் வாழை மரங்களாக எழுந்தருளி உள்ளார்கள் என்கிறது தல புராணம். இங்கு தல விருட்சமே வாழைதான் என்பது குறிப்பிடத்தக்கது (இதன் பின்னர்தான் இங்கு சிவபெருமானே சுயம்பு வடிவில் எழுந்தருளினாராம்).
திருமண தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள வாழை மரங்களுக்குத் தாலி கட்டி பரிகார பூஜைகள் செய்து, தோஷம் நீங்கப் பெறுகிறார்கள்.
திருமண வரம் மட்டுமல்ல... வீரத்தின் வடிவ மாகவும் இந்த சப்தமாதர் விளங்கி வருகின்றனர்,
சப்தமாதர்களின் அவதாரக் கதை இதை விளக்கும்.
இரண்ய வம்சத்தில் பிரகலாதனுக்குப் பின் அந்தகாசுரன் என்பவன் ஆண்டான். அசுரர் குல வழித்தோன்றல்தானே! எனவே, பிரம்மனைக் குறித்து தவம் இருந்து எண்ணற்ற விசேஷ வரம் பெற்றான்.
என்ன வரம் தெரியுமா? தன்னை எவராலும் கொல்ல முடியாது என்கிற வரத்தை!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி.சுவாமிநாதன்

Comments