ஏழையின் சிரிப்பில்...

நமது தோட்டத்தில் விளையும் பயிர்களில் முதல் அறுவடையை உள்ளூர் இறைவனுக்கு அளிப்பது வழக்கம். அதன்படி வாழைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்தில் விளைந்த முதல் வாழைத்தாரை சற்று தொலைவில் இருந்த முருகன் கோயிலுக்கு வேலையாள் மூலம் அனுப்பியுள்ளார். தூக்கிச் செல்லும் வழியில் அவருக்கு பசிக்க, அதிலிருந்து நான்கு பழங்களை தின்றுவிட்டார். பின்னர் கோயில் அர்ச்சகரை பண்ணையார் சந்தித்தபோது விவரம் அறிய, உடனே வேலையாள் தண்டிக்கப்பட்டார். அன்று இரவு பண்ணையார் கனவில் வந்த முருகன், ‘நீ அனுப்பிய நான்கு வாழைப் பழங்களும் நன்றாக இருந்தன’ என்று கூறியதை கேட்ட பண்ணையார் திடுக்கிட்டு எழுந்து வேலையாளிடம் மன்னிப்புக் கேட்டாராம். ஏழையின் பசிக்கு உதவும் உணவே இறைவனுக்கு அளிக்கும் உணவாகும் என்பதே இதன் பொருளாகும்.
- குன்றக்குடி அடிகளார் சொற்பொழிவிலிருந்து... சாந்தி, திருவாரூர்
விடக் கூடாதது
உத்திரப்பிரதேசத்தில் கயா என்ற புனித கே்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு வருவது வழக்கம். ஒரு தம்பதியர் அவ்வூருக்குச் சென்றார்கள். தர்ப்பணம் செய்யும்போது பண்டா (குருக்கள்) கணவனிடம், நீங்க எதை விடப் போறீங்க?" என்று கேட்டார்.
அவருக்கு எதையும் விட மனமில்லை. யோசித்துக் கொண்டே இருந்தார். கத்தரிக்காயை விடறீங்களா?"
எனக்கு அது ரொம்பப்பிடித்தது" என்றார்.
மீண்டும் கேரட்" என்றார்.
அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் ‘ஏ’ சத்து இருப்பதை விடமாட்டேன்" என்றார்.
சரி, தக்காளியையாவது விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டால் கால் உளைச்சல் வரும்னு சொல்றாங்க."
அதுதான் இருப்பதில் விலை குறைவானது. அதை விடமாட்டேன்" என்றார்.
அப்படியென்றால் உருளைக் கிழங்கு" என்றார்.
பூரி மசால்னா எனக்கு உசிறு. உருளை இல்லாமல் எப்படி மசால் செய்வது. அதையும் விட மனமில்லை."
பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. சரி, நீங்களே ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்க" என்றார்.
கணவன் ரொம்ப யோசித்தார்.
ஐயா, காசு பணம் செலவழிக்காமல், உடம்பைக் கெடுத்துக்காமல் ஒண்ணே ஒண்ணை விடுறேன்."
என்ன அது?" பண்டா அவசரமாகக் கேட்டார்.
மானம்."
பண்டா, தலையில் அடித்துக் கொண்டே, அம்மா! நீங்க எதை விடுறீங்க?" என்று மனைவியிடம் கேட்டார்.
குருக்களே! இந்த புருஷனை விட்டுடறேன்" என்றார்.
ஏம்மா?"
மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழறது?" என்றார் மனைவி.
- வாரியார் சொற்பொழிவிலிருந்து...

Comments