நவபாஷாண பெருமாள்

நவபாஷாணத்தில் அமைந்த பெருமாளை
சிவகாசிக்கு அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு மார்கழி மாதத்தில், திருவோண நட்சத்திரத்துக்கு முன்பு, 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க, கோரிக்கைகள் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை.

வேலை கிடைக்க...
சோலைக்கவுண்டன்பட்டியில் உள்ளது திருவேங்கடமுடையான் திருக்கோயில். இக்கோயிலில் நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தமது தேவியர்களுடன் உட் கார்ந்த நிலையில் காணப்படுவது சிறப்பு. அதுமட்டு மின்றி, நவக்கிரகங்கள் ராசிக் கட்டங்களில் உள்ளவாறும் அமைந்திருக்கின்றன. வேலை தேடுவோர் இவற்றை வழிபட தகுதிக்கேற்ற பணி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆதிசேஷனே மலை வடிவில்...
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில். ஆதிசேஷனே மலை வடிவில் எழுந்தருளி இருப்பதாகக் கருதப்படும் இம்மலைக் கோயில் ‘தென் திருப்பதி’ என அழைக்கப்படுகிறது. திருப்பதியில் பத்மாவதி தாயாருக்காக எழுந்தருளியிருப்பதுபோல், கோதை நாச்சியாருக்காக இங்கு பெருமாள் கோயில் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கு விநாயகப்பெருமான் 12 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்டு காட்சியளிப்பது சிறப்பு.
 
 

Comments