அறிந்த ஆன்மிகம்; அறியாத அறிவியல்!

மாவிலை கட்டுவது நம் நன்மைக்காகத் தான். ஏன்னா, பண்டிகை, விழா... இந்த மாதிரி நேரத்துல நிறைய பேர் கூடுவாங்க இல்லியா? அந்த இடத்துல காற்றுல கரியமில வாயு (Co2)அதிகமாகும்; ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும். அதனால உடல் நலம் பாதிக்கப்படும். அதை தவிர்க்கத்தான் மாவிலை கட்டறோம். ஏன்?
மாவிலை ரொம்ப நல்ல கிருமிநாசினி. அது கார்பன் - டை ஆக்ஸைடை ஈர்த்துக்கும்; ஆக்ஸிஜனை வெளியிடும். பச்சையா இருக்கற மாவிலைக்கு மட்டுமில்ல; காய்ந்து போனாலும் அதுக்கு இந்தத் தன்மை உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம், இது காய்ந்து சருகா மாறுமே தவிர அழுகிப்போகாது. தவிர, தீய சக்திகளை, தீய அதிர்வுகளை விலக்கி, நல்ல அதிர்வுகளை பரவச் செய்கிற சக்தி மாவிலைக்கு உண்டு! மாவிலை காய்ந்து போயிருந்தாலும், அதை கலசத்துல வைச்சு பயன்படுத்தறது இதனாலதான். மாவிலை மாதிரி, இளமையானாலும், முதுமையானாலும் எப்பவும் பிறருக்குப் பயன்தர மாதிரி வாழணும். அதைச் சொல்றதுக்காகத்தான் மாவிலை கட்டப்படும்."
- மாவிலை கட்றதுக்கு இப்படி ஒரு விளக்கத்தைச் சொன்னா, குழந்தை நிச்சயமா ஏத்துக்கும்; புரிஞ்சுக்கும். அதுக்கு, முதல்ல நாம தெரிஞ்சுக்கணும்.
நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் சில நாட்களாக சோர்வாகக் காணப்படுகிறான். பரீட்சை எழுதும்போது படித்ததை மறந்துவிடுவதால் குறைவான மதிப்பெண்களே பெறுகிறான். தந்தை அவனை, ஒரு மகானிடம் கூட்டிச் சென்றார். அம்மாணவனிடம், கவலைப்படாதே குழந்தாய்! நாளை முதல் அதிகாலையில் எழுந்து நீராடு; நான் தரும் விபூதியை நெற்றியில் இட்டுக்கொள். உன் வீட்டுக்கு அருகிலுள்ள விநாயகரை வணங்கி 11 முறை தோப்புக்கரணம் போடு. 11 முறை வலம் வந்து வணங்கு. பிறகு வீட்டுக்கு வந்து படிக்கத் துவங்கு தொடர்ந்து 48 நாள் இதைத் தவறாது நம்பிக்கையுடன் செய்; நல்ல மதிப்பெண்கள் பெறுவாய்" என்று ஆசீர்வதித்து அனுப்பினார் மகான். அவனும் அவ்வாறே செய்ய, பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று நற்பெயரைப் பெற்றான். இதன் ரகசியம் அதிகாலையில் துயில் எழுவதுதான்.
ஆன்மிக விளக்கம்: விடியற்காலை 4.30 முதல் 6 மணி வரையான காலம் பிரம்ம முகூர்த்தம். தேவர்கள், தெய்வங்களை ஆராதனை செய்யும் இந்த நேரத்தில் விழித்து எழுவது புத்தி தெளிவுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. மாணவர்கள் இந்த நேரத்தில் எழுந்து படிப்பது நல்ல கிரகிப்பு திறன் மற்றும் ஞாபக சக்தியை வளர்க்கும். பெரியவர்கள் பூஜை, தியானம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம் இது.
அறிவியல் விளக்கம்: விடிகாலை வேளையில் காற்றில் ஓசோன் (O3)அதிக அளவில் உள்ளது. உறங்கி எழுந்ததும் நமது உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்வுடன் திகழ்வதாலும், சுத்தமான பிராண வாயுவை சுவாசிப்பதாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இதைக் குறித்துதான் அப்படிச் சொன்னார்கள். வாழ்வில் சாதனை புரிந்த பலரும் விடியற்காலையில் விழித்து எழுவதை சாதனைக்கான முதல் படியாக வைத்திருந்தவர்கள் என்பது நிஜம்.

Comments