ஸ்ரீதேவி, பூமாதேவி வந்தது ஏன்?


திருப்புட்குழிக்கு வட மொழியில் க்ருத்ர ÷க்ஷத்திரம் என்று பெயர். வாமன மூர்த்தி தவம் செய்த ஊர் இதுதான் என்றும், கௌசிக முனிவரும், தேவர்களும் பகவானின் அருள் வேண்டி இங்கே யாகம் செய்தார்கள் என்றும் இத்தலத்தில் சிறப்பு பற்றி "க்ருத்ர புஷ்கரணி ÷க்ஷத்ர மகாத்மியம்' கூறுகிறது. பரத்வாஜ முனிவர் பாரதமெங்கும் புனித யாத்திரை சென்றுவிட்டு வரும்போது திருப்புட்குழியில் இருந்த பிருகு முனிவரை தரிசித்தார்.
அப்போது பரத்வாஜர், தான் சென்று நீராடிய தீர்த்தங்களைப் பற்றியெல்லாம் பிருகுவிடம் சொல்லி, "உலக வாழ்க்கை என்ற பெருங்கடலில் நீந்திக் கரை காண மூடியாமல் தவிக்கும் மக்கள், துன்பம் நீங்கி, இன்பம் அடைவதற்கு அவர்கள் எந்தத் தீர்த்தத்தில் நீராட வேண்டும்?' என்று கேட்டார்.
அப்போது பிருகு முனிவர், "எல்லா தீர்த்தங்களிலும் சிறந்தது இந்த ஜடாயு தீர்த்தம்தான்' என்று சொல்லி, ராமனின் கதை, ஜடாயுவின் கதையை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார். அப்போது ஓர் ஆச்சர்யம் நிகழ்ந்தது.
ராமபிரானால் இறுதிக் காரியம் செய்யப்பட்ட ஜடாயு, சொர்க்கலோகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவருக்கு பிருகு முனிவர் சொன்ன திருப்புட்குழியின் சிறப்பும், ராமனின் மகிமையும் காதில் விழுந்தது. ராமனின் பெயர் காதில் விழுந்ததால், சொர்க்கம் செலவதைக்கூட தாமதப்படுத்திக் கொண்டு, மீண்டும் திருப்புட்குழிக்கே பரவத்துடன் வந்தார் பெரிய உடையார் ஜடாயு.
எதற்கு வந்தார் தெரியுமா? உலக மக்களை உய்விக்கும் சிறந்த தீர்த்தம் இதுதான் என்று முனிவர் சொன்னதால், மக்கள் நற்பலன்களை முழுமையாகப் பெற வேண்டும் என்று விரும்பி, இங்கே வந்து ராமபிரானை வேண்டினார்.
என்ன வேண்டினார் தெரியுமா?
"பகவானே, தாங்கள் சீதாதேவி, பூமா தேவியோடு இந்தத் தலத்தில் அர்ச்சாரூபத்தில் எழுந்தருள் வேண்டும். தீர்த்தத்தில் நீராடி வரும் பக்தர்கள் உங்களை தரிசித்தால் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் முழுமையாக் கிடைக்கவேண்டும்!' என்று வரம் கேட்டார்.
ராமபிரான் நெகிழ்ந்து போனார். சொர்க்கம் செல்லும் நேரத்திலும் என் பெயரைக் கேட்டதும், திரும்பி வந்ததும் அல்லாமல், பக்தர்கள் நலம் பெற வேண்டும் என்று யாசிக்கும் ஜடாயுவுக்கு சொர்க்கத்தை விட சிறந்ததாக எதைத் தருவது என்று யோசித்தார்! ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பகவான் அங்கே காட்சியளித்தார். அதுவும் ஜடாயுவுக்கு இறுதிக்காரியம் செய்தபோது எப்படி இருந்தாரோ அதேபோல, அதாவது தனது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக் கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவனையில் சிலை உருவம் கொண்டார். ஆம், தன் அருகிலேயே ஜடாயுவையும் நிரந்தரமாக அமர்த்திக் கொண்டார்.

Click Here

Comments