மன நலம் பாதித்தாலும் சிவ ஜபமே!

'என்னுடைய ஈஸ்வர பக்தி உண்மையானதா? ஈஸ்வரன் திருவடிகளில் உண்மையிலேயே நான் பக்தி செலுத்துகிறேனா? சிவநாமம் என் உள்ளத்தில் ஊன்றி இருக்கிறதா? எப்போதும் அது வெளிப்படுமா? எந்த நிலை யிலும் அது என்னை விட்டு நீங்காதிருக்குமா?
இப்போது புத்தியுடன் இருக்கும்போது சர்வ காலமும் சிவ நாமம் ஜபிக்கிறேன். ஒருவேளை... நான் மன நலம் பாதிக்கப்பட்டாலும், சிவ நாமத்தை ஜபிப்பேனா?'
_ இப்படி யோசித்தார் ஒரு சிவ பக்தர்!
இவர் மதுரை நாயக்கர் மன்னரிடம் அமைச்சராக இருந்தவர். வடமொழியில் பாண்டித்யம் பெற்றவர். எந்நேரமும் சிவ நாமத்தை ஜபிப்பவர்.மன நலம் பாதிக்கப்பட்ட நிலை யிலும் தன்னால் சிவ நாமம் ஜபிக்க முடியுமா என்பதைக் கண்டறிய ஒரு விஷப் பரீட்சையில் இறங்கினார்! புத்தியை பேதலிக்கச் செய்யும் ஊமத்தங்காயைச் சாப்பிட்டாராம்.இதன் விளைவு? அவர் விரும்பியபடியே மன நலம் பாதிக்கப்பட்டார். சுய நினைவை இழந்தார். ஆனால், அந்த நிலையிலும் இவர் சிவ நாமம் ஜபிக்கத் தவற வில்லை.

அது மட்டுமா? மன நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அருமையான சிவ ஸ்துதி ஒன்றை இயற்றினாராம்!
பிறகு, மாற்று மருந்து கொடுக்கப்பட்டு பூரண குணம் பெற்றவர்... தான் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் சிவ ஸ்துதியை இயற்றி, சிவ சிந்தையில் ஆழ்ந்து இருந்ததை எண்ணி மகிழ்ந்தாராம்!
யார் இவர்? புகழ் பெற்ற சிவ பக்தரான அப்பய்ய தீட்சிதரின் வழித் தோன்றலான நீலகண்ட தீட்சிதர்!
வரும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் சம காலத்தவர்கள். மதுரையில் ஸ்ரீராகவேந்திரர் இயற்றிய நூல் ஒன்றை, மன்னரின் பட்டத்து யானை மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து சிறப்பித்தவர் நீலகண்ட தீட்சிதர்.

Comments