ஷீர்டி நாதா சரணம்!

'குலானாம் குல கோடீனாம் தாரகஸ் தத்ர தத்க்ஷணாத்
அதஸ்தம் ஸத்குரூம் ஜ்ஞாத்வா த்ரிகாலம் அபிவாத யேத்'

- குரு கீதை
பொருள்: குருவானவர், குலங்களை... குலங்களின் கோடி எல்லை வரை ஒரே கணத்தில் காப்பவர்; ஆகவே, ஸத்குருவை அறிந்து, முக்காலமும் அவரை நமஸ்கரிக்க வேண்டும்!
"நான் கல்லறைக்குள் இருந்தாலும் உயிருடனும் வீரியத்துடனும் இருப்பேன். என் மகா சமாதிக்குப் பிறகும், நீ என்னை எந்த இடத்தில் இருந்து நினைத்தாலும், அங்கு உன்னுடன் இருப்பேன்'' என்பது சாயிபாபா அருளியது! இதை மெய்ப்பிக்கும் ஓர் அற்புத சம்பவம்... சாயிபாபா மகா சமாதி அடைந்து 38- ஆண்டுகள் கழித்து நடந்தது!
1956-ஆம் ஆண்டு! கோலாப்பூரில் லட்சுமிபாய் எனும் ஆசிரியை வாழ்ந்தாள். கணவனை இழந்த இவளுக்கு ஒரே மகன்!
ஒருநாள்... மெட்ரிகுலேஷன் இறுதித் தேர்வை எழுதி விட்டு, வீட்டுக்குத் திரும்பினான் மகன். வந்ததுமே சுருண்டு படுத்துக் கொண்டான். காரணம்- கடும் ஜுரம்! மகனது நிலை கண்டு மருகி னாள் லட்சுமிபாய்.
பின்னர், அவசரம் அவசரமாக கோலாப்பூர் மருத்துவமனையில் மகனைச் சேர்த் தாள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறினான் மகன். இருப்பினும், பாரிச வாயுவின் தாக்கத்தால், இடுப்புக்குக் கீழே பாதிக்கப்பட்டுக் கால்கள் செயல் இழந்தன.

தன் 16 வயது மகன், நடக்க முடியாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்க்கும் சக்தி எந்த தாய்க்குத்தான் இருக் கும்? இது, லட்சுமியை ரொம்பவே பாதித்தது. வெளியில் மட்டுமின்றி, வீட்டில்கூட எந்தக் காரியத்துக்கும் அவனைத் தூக்கியே செல்லும் நிலை! சுற்றாத கோயில்கள் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை! மனம் உருகி பல தலங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தாள். ஆனால், மகனது கால்களில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. பார்ப்பவரிடம் எல்லாம் அழுது புலம்பினாள் லட்சுமிபாய்.

இந்த நிலையில், இவளுடன் பணிபுரிந்த ஆசிரியை ஒருவர், ஆறுதல் கூறுவதற்காக வீட் டுக்கு வந்தாள். நெருங்கிய தோழியைக் கண்டதும், பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள் லட்சுமிபாய். ''கணவனை இழந்தேன். இப்போது என் மகனது நிலையும் இப்படி ஆகிவிட்டதே? படிக்க வேண்டிய வயதில், இப்படி முடங்கி விட்டானே... நான் என்ன செய்வேன்?'' என்று கதறினாள்.

அவளை அணைத்து ஆறுதல் கூறிய தோழி, ''ஒரே ஒரு பரிகாரம் உண்டு லட்சுமி. அதையும் முயன்றுதான் பாரேன். நிச்சயம் உன் மகனுக்கு விடிவு காலம் பிறக்கும்'' என்றாள் உறுதியுடன்! ''என்ன பரிகாரம்னு சொல்லு... எதுவானாலும் செய்யறேன்'' என்றாள் லட்சுமி.

''உடனே உன் மகனை ஷீர்டிக்கு அழைத்துச் செல். அங்கு சில நாட்கள் தங்கி, சாயிபாபாவின் சமாதியைத் தினமும் சுற்றி வா. உனது வேதனை மொத்தத்தையும் அவரிடம் சொல்லி முறையிடு. பாபாவின் அருளால், உன் மகன் பழைய நிலைக்கு நிச்சயம் வருவான். நன்றாக நடப்பான்; ஓடுவான்'' என்றாள் தோழி. அதன்படி, மகனுடன் ஷீர்டிக்குச் சென்றாள் லட்சுமிபாய். அங்கு, கூலியாள் ஒருவர் மூலம் தன் மகனைத் தூக்கி வைத்துக் கொள்ளச் செய்து, பாபாவின் சமாதியை தினமும் பிரதட்சணம் செய்ய வைத்தாள். சமாதிக்கு வந்தவர்களில் பலரும் அவனையே பார்த்தனர். 'நம்மை ஏளனமாகப் பார்க்கின்றனரே...' என வேதனைப்பட்டான் மகன்.
பிறகு தன் தாயாரிடம் தயங்கி தயங்கி, ''எல்லோரும் என்னையே பார்ப்பது, அவமானமாக இருக்கிறது. ஆகவே, நாளை முதல் எனக்காக நீயே பாபாவை பிரதட்சணம் செய்'' என்றான் தேம்பியபடி. அவனது வேதனையை புரிந்து கொண்ட லட்சுமிபாய், அடுத்த நாள் முதல்... அவனுக்காக சாயிபாபாவின் சமாதியை வலம் வந்து வேண்டலானாள். அதேநேரம்... அறை யில் இருந்தபடியே மனம் உருக பாபாவை பிரார்த் தித்தான் மகன்.
ஒரு நாள்! வழக்கம் போல் மந்திருக்குப் புறப்பட்டு வந்தாள் லட்சுமிபாய். அறையில் தனியே இருந்த மகன், அங்கு இருந்த பாபாவின் திருவுருவப் படத்தைப் பார்த்தபடியே, ''ஆண்டவா! நான் பழையபடி நடப்பேனா? நின்று போன எனது படிப்பைத் தொடர முடியுமா? என்னிடம் இரக்கம் காட்ட மாட்டீர்களா? ஏன் இந்தத் தயக்கம்?'' என்று கண்கள் பனிக்க, மனம் குமுறி அழுதான்.

அப்போது அந்த அறை முழுவதும் திடீரென ஒளி படர்ந்தது. இதைக் கண்டு வியந்தவன், ஒளி வந்த திசையைக் கவனிக்க... அங்கு புன்னகைத்தபடி நின்றிருந்தார் சாயிபாபா. மெய்சிலிர்த்தவன், இரு கரங்களையும் உயர்த்தி அவரை வணங்கினான். சாயிபாபா அவனை நெருங்கினார்; தன் கையால் அவனை அப்படியே தூக்கிக் கொண்டு சமாதியை அடைந்தார். அங்கு இருந்த தூண் அருகில் சிறுவனை நிற்க வைத்தார். தூணைப் பற்றிக் கொண்டு நின்றவன், திரும்பிப் பார்த்தான். பாபாவைக் காணோம்!
சமாதியில்... கண்ணீருடன் பிரார்த்தித்துக் கொண் டிருந்தாள் லட்சுமிபாய்.
''பாபா! நாளை ஊருக்குக் கிளம்புகிறோம். உனது கருணைப் பார்வை எங்கள் மீது விழாதா? என் மகனின் எதிர்காலம் அவ்வளவுதானா?'' என்று வேண்டியபடியே, சமாதியை விட்டு வெளியே வந்தவள், தூணில் சாய்ந்து நிற்கும் மகனைப் பார்த்து அதிர்ந்தாள்.

குழப்பமும் குதூகலமுமாக ஓடி வந்து, மகனை வாரி அணைத்துக் கொண்டாள். ''மகனே... என்ன நடந்தது? எப்படி இங்கே வந்தாய்? சொல்... சொல்'' என்று அவனைப் பிடித்து ஆர்வமுடன் உலுக்கினாள்.
''பாபா நமக்குக் கருணை காட்டி விட்டார் அம்மா. அழுது கொண்டிருந்த என்னைத் தேற்றியதுடன், அவரது திருக்கரங்களால் என்னைத் தூக்கி வந்து, இந்த தூணில் சாய்த்து நிற்கச் செய்து விட்டுச் சென்றார் அம்மா. என் கண்களால் பாபாவை நான் தரிசித்தேன்'' என்றான் உற்சாகத்துடன்!
இதைக் கேட்டதும் சாயிபாபாவின் சமாதியை நோக்கி ஓடிய லட்சுமிபாய், ''பாபா... எங்கள் குலத்தைக் காக்க வந்த குருவே... எங்கள் வாழ் வில் ஒளியேற்றி வைத்து விட்டாய். உன் திருப் பாதங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்'' என்று கரம் கூப்பி வணங்கினாள்.

பிறகு, இருவரும் மன நிறைவுடனும் மகிழ்ச்சி யுடனும் ஷீர்டியில் இருந்து கோலாப்பூருக்குப் புறப்பட்டனர். 'நீ என்னை நோக்கினால் நான் உன்னை நோக்கு வேன். குருவைப் பூரணமாக நம்பு. அதுவே ஒரு சாதனை. குருவே எல்லா கடவுளும் ஆவார்...'
_ சாயிபாபாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது

Comments