நடராஷர் செல்லும் கிரிவலம்!

ரூர் அருகில் உள்ளது புகழிமலை வேலாயுதம்பாளையம். இங்கு உள்ள ஸ்ரீபால சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா விசேஷமாக நடைபெறும். மலை அடிவாரத்தில், ஸ்ரீநடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு தம்பதி சமேதராக கிரிவலம் வருவர். இந்த வேளையில், ஸ்ரீநடராஜரை தரிசித்தால், திருமண பாக்கியம் கிட்டும்.

தாண்டவ தீபாராதனை!

டராஜருக்கு உரிய பஞ்ச சபைகளில் திருக்குற்றாலம் சித்திரசபையும் ஒன்று! திருக்குற்றாலநாதர் திருக்கோயிலுக்கு சற்று அருகிலேயே தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார் சித்திரசபை நடராஜர். இங்கே... திருவாதிரை நாளில், தாண்டவ தீபாராதனை வெகு பிரசித்தம்.
நடராஜர் நாட்டியமாடினால் எப்படி இருக்குமோ, அதேபோல் தீபத்தட்டினை மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக ஆட்டியபடி நடராஜருக்கு தீபாராதனை காட்டுவார்கள்! ஜோதி சொரூபமான சிவனார், தானே அக்னிப் பிழம்பாக தாண்டவமாடி, உலகை இயக்குவதை உணர்த்துவதற்காக, இந்த தாண்டவ தீபாராதனை வைபவம் என்கின்றனர்!

பரிசலில் பவனிவரும் நடராஷர்!
மார்கழி திருவாதிரைத் திருநாளில், ஸ்ரீநடராஜ பெருமான் திருவீதியுலா செல்வார் என்பது தெரியும். அவர் பரிசலில் ஏறி ஆற்றில் பவனி வரும் ஆலயம் தெரியுமா? ஈரோடு அருகில் உள்ள காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலில்தான் பரிசலில் பவனி வரும் வைபவம் நடைபெறுகிறது.
காவிரியாற்றின் நடுவே தானாகவே தோன்றிய பாறை மீது எழுந்தருளியுள்ளார் சிவனார். இதனால் இவருக்கு நட்டாற்றீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானதாம்! பொதிகைக்குச் சென்ற அகத்திய முனிவருக்கு சிவ பெருமான் காட்சி தந்த தலமாம் இது!
திருவாதிரை நாளில், ஸ்ரீநடராஜரும் ஸ்ரீசிவகாமியம்மை யும் பரிசலில் எழுந்தருள்வர்; இன்னொரு பரிசலில் மேள-தாளங்கள் இசைக்க... ஆற்றிலேயே கோயிலைச் சுற்றி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி!

பஞ்சநதன நடராஜர்
திருச்சி சமயபுரத்துக்கு அருகில் உள்ளது ஊட்டத்தூர் திருத்தலம். இங்கேயுள்ள ஸ்ரீசுத்தரத்தி னேஸ்வரர் கோயிலில், 'பஞ்சநதனம்' எனப்படும் அரிய கல்லில் வடிக்கப்பட்ட நடராஜரை தரிசிக்கலாம்.
சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்படுவோர், இவருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, அதை தண்ணீ ரில் ஊற வைத்து அந்த தீர்த்தத்தை அருந்தினால், விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை!
திருவாதிரை நாளில், இங்கேயுள்ள ஸ்ரீநடராஜ பெருமானை தரிசித்தால், ஏழேழு பிறவியிலும் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!

தீர்த்தப் பிரசாதம்
சென்னை திருவள்ளூர் அருகில், திருவாலங்காட்டில் உள்ளது ஸ்ரீவடாரண் யேஸ்வரர் கோயில். நடராஜ பெருமானுக்கு உரிய பஞ்ச சபைகளில் இது முதலாவது தலம். இந்த சபை... ரத்தின சபை; ஆகவே ஸ்வாமிக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம்! சிவதாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தினமும் காணும் பேறு பெற்ற தலமும் இதுதான்!
நடராஜர் சந்நிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜரின் திருவுருவம் அமைந்திருப்பதும் சிறப்பு என்கின்றனர்.

Comments