பூஜை அறை அவசியமா?

பாரத நாட்டு மக்களின் இல்லங்களில் பூனைக்கென்று ஓர் அறை இருக்கும். இங்கு ஒவ்வொரு நாளும் திருவிளக்கு ஏற்றப்படுகிறது. இறைவழிபாடு நடைபெறுகிறது.மேலும் ஜபம் (இறைவன் திருநாமத்தை பலமுறை துதித்தல்) பாராயணம் (ஆன்மிக நூல்களை படித்தல்) பக்தி பாடல்களை பாடுதல், ஸ்தோத்திரங்களை கூறுதல், ஆகியவையும் இந்த அறையில் நடைபெறும்.நல்ல நாள், விரத நாள், பண்டிகை நாட்கள் மங்கள நாட்களில் விசேஷமான வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களில் குடும்பத்திலுள்ள சிறியவர், பெரியவர் அனைவரும்ஒன்று கூடி கடவுளை வழிபடுகின்றனர்.

இறை வழிபாட்டிற்கு இப்படி தனி அறை இருப்பது ஏன்?
படைப்பில் உள்ள அனைத்திற்கும் இறைவன் காரணகர்த்தா அவரே அதற்கு உரிமையாளன். எனவே நாம் வசிக்கும் வாழும் இல்லதற்திற்கும் உன்மையில் இறைவனே சொந்தக்காரர். வீட்டில் உள்ள பூஜை அறை தான் இறைவனான அந்த எனமானின் அறை. இவ்வுலகில் வாழும் நாம் எல்லோரும் அந்த இறைவனுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் தான். இந்த எண்ணம் நம்மிடமுள்ள தவறான செருக்கையும் எனது என்று சொந்தம் கொண்டாடும் எண்ணத்தையும் துடைத்து எறிந்து விடும்.

இறைவன் தான் நமது இல்லங்களில் உண்மையான உரிமையாள். நாம் அனைவரும் அவருடைய இல்லத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பேற்று கொண்டவர்கள் என்கிற மனப்பான்மை தான் அதி உன்னதமானது. இவ்வாறான சிந்தனை எளிதல்ல. எனவே இறைவனை நம் வீட்டிற்கு வருகை தந்திருக்கும் நம் மனதிற்கும் உகந்த இனிய விருந்தாளியாகவாவது நாம் கருதலாம்.

முக்கிய விருந்தாளிக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுப்பது போல் நம் வீட்டில் எழுந்தருளியிருகு“கும் இறைவனுக்கு நாம் நன்கு அலங்கரிக்கப்பட்ட தூய்மையான பூஜை அறையை அளிக்கிறோம்.
எங்கும் நிறைந்துள்ள அந்த இறைவன் நம் வீட்டினுள்ளும் குடிகொண்டுள்ளான் என்பதைநாம் நம் உள்ளத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.

இறைவனின் திருவருள் அன்றி எவ்வித செயலையம் வெற்றிகரமாகவோ, எளிதாகவோ செய்து முடிக்க இயலாது. னெவே தான் விசேக நாட்கள் மட்டுமன்றி ஒவ்வொரு நாளுமே நாம் பூனை அறையில் இறைவனின் அருளை வேண்டி அவனுடன் தொடர்பு கொள்கிறோம்.வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையும் குறிப்பிட்ட ஒரு தேவைக்காக ஒதுக்கப்படுகிறது. படுக்கை அறை ஓய்வுக்கும், உறங்கவும், வரவேற்பறை வந்தவர்களுடன் அமர்ந்து பேச, கலந்துரையாட , சமையலறை உணவு தயாரிக்கவும் பயன்படுகின்றன. அறையின் வடிவம், சூழ்நிலை, அங்குள்ள பொருட்கள் ஆகியவை அவ்வறையின் பயனுக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன.
தூய்மையான எண்ணங்களும்,ஒலி அதிர்வுகளும் பூஜை அறை முழுவதும் நிறைந்து பரவி, அங்கு அமர்ந்திருப்பவர்களின் மனதில் தெய்வீக எண்ணங்களை உண்டாக்குகின்றன.

பல நாட்கள் முறையாக செய்யப்பட்ட தியானம், பூஜை மற்றும் மந்திரம் ஜபித்தல் ஆகிவற்றினின்று வெளிப்படும் பக்தி எண்ண அலைகளும், இறை அதிர்வுகளும், பூஜை அறையில் நிறைந்திருக்கும். எனவே நாம் களைப்படைந்த நிலையில் இருக்கும் பொழுதோ அல்லது மன அமைதியற்றுள்ள பொழுதோ பூஜையறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் நம் மனம் அமைதியடைகிறது.நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம். உயர்ந்த ஆன்மிக நிலையை அனுபவிக்கிறோம்

Comments