காவிரியில் நீராடும் கங்கை

பஞ்சபூதங்களுமே நம் வாழ்வோடு ஏதோ வகையில் பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றன. அவற்றுள்ள நீர் ஒரு படி மேலாக தீர்த்தம் என்ற பெயரில் உயர்வுபடுத்தப்பட்டு போற்றப்படுகிறது.

புராணங்களிம் தண்ணீருக்கு பல வகையிலும் பெருமை சேர்க்கப்ட்டிருப்பதோடு, குறிப்பிட்ட கால கட்டங்களில் நீராடுவதும் கூட மிகச் சிறப்பான புண்ணிய பலன்களை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐப்பசி மாத அமாவாசை அன்று மயிலாடுதுறையில் காவிரி நீரில் நீராடுவது புனிதமாக கருதப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்து இறைவன் மயூர நாதர் அம்பாள், அபயாம்பிகை, தலமரமாக மாமரமும், வன்னிமரமும் உள்ளன. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தேவார திருத்தலம். காசிக்கு சமமான ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று. இதனால் தான் இத்தலத்திற்கு ஆயிரம் ஆனாலும் மயூரம்ஆகாது என்ற பழமொழி ஏற்பட்டது.

அம்பாள் மயில் வடிவில் இறைவனை வழிபட்ட தலம். மயில் வடிவம் கொண்டு கௌரி தாண்டவம் ஆடியதால் இத்தலம் கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டது.

இத்தலத்தில் இந்திரன், பிரம்மன், குருபகவான், அகத்தியர், சப்தமாதர்கள் ஆகியோரும் வழிபட்டுள்ளனர்.இத்தலத்து தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், ரிஷிப தீர்த்தம், காவிரி ஆறு தீர்த்தம ஆகியவைஉள்ளன. காவிரி தீர்த்தமே இவற்றுள் முக்கிமயானது. இந்தகாவிரி ஆற்றின் துறையில் தான். துலாமாதமாகிய ஐப்பசி மாதத்தில் துலா நீராடுதல் மிகவும் சிறப்பான ஒன்றாக கூறப்பட்டு உள்ளது. ஐப்பசி மாத இறுதி நாளான கடை முழுக்கு நாளன்று இங்குள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ள மூர்த்திகளும் இஙண்கே எழுந்தருளி மயூரநாதரோடு தீர்த்தம் கொடுக்கும் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

ஐப்பசி மாதத்தில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவேரியில் கலப்பதால் இந்த மாததத்தில் காவிரி தீர்த்தத்தில் நீராடுவது, சிறந்த பண்ணியம் ஆகும்.ஏறு தலைமுறை பாவத்தை போக்கும் கங்கை நதியும் வருடம் தோறும் தன் மீது படிந்த பாவங்களை போக்க ஐப்பசி மாதத்தில் இந்த காவிரி தீர்த்தத்தில் நீராடுவதாக ஐதீகம்.

முடவன் ஒருவன் ஐப்பசி மாதத்தில் முழுக முடியாமல், கார்த்திகை முதல் தேதி நீராட அவனுக்கு மோட்சம் கிடைத்தது. எனவே கார்த்திகை மாதம் முதல் தேதிமுழுகுபவர்களுக்கும் அந்த புண்ணியம் உண்டு. இந்த கார்த்திகை மாத முதல் தேதி நீராடலை முடவன் முழுக்குஎன்று அழைக்கிறார்கள். எனவே ஐப்பசி மாதத்தில் நீராட முடியாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி இந்த காவிரி தீர்த்தத்தில் நீராடி இந்த பலனை பெறலாம்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் சென்று நீராடி நற்பலன்கள் பெறுவோம்.

Comments