பன்னாட்டு தீபத் திருநாள் தீபாவளி - உலகெல்லாம் மகிழ்ந்திடும் உற்சாகக் கொண்டாட்டம்

தீபத் திருநாள் தீபாவளி, ஒரு அகில இந்திய திருநாள் மட்டுமல்ல உலக அளவில் பல வெளிநாடுகளிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இதனை ஒரு பன்னாட்டு தீபத் திருநாள் எனலாம்.
ஜப்பான் நாட்டில் தீபாவளி திருநாள் மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் மிக முக்கியமான தினமாகும். அதை அவர்கள் சுகசம்ருத்தி தினமாக அதாவது சுகம் - செல்வம் நிறையும் ஒரு தினமாக கொண்டாடுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அந்த மூன்று தினங்களிலும் அவர்கள் விளக்குமாற்றை கையால் கூட தொடுவதில்லை. மாறாக. நீராலும், கையாலும் அல்லது துணியாலும் மட்டும் அழுக்கு - குப்பை கூளங்களை துடைத்து சுத்தம் செய்கின்றனர்.

நேபாளத்தில் தீபாவளி சமயத்தில் வெக சிறப்பான ஆரவாரம் நிலவுகிறது. அந்நாட்டில் ஐந்து நாட்களுக்கு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் வெவ்வேறு ஏற்பாடு!

முதல் நாள் காகங்களும், இரண்டாம் நாள் நாய்களும் சிறப்பிடம் பெற்றுப் பூஜிக்கப்படுகின்றன. யமனுடைய கோபத்திலிருந்து தப்புவதற்காக இவ்விதம் அவற்றைப் பூஜித்துச் சாந்தப்படுத்துகின்றனர். மூன்றாம் நாள், நம் நாட்டில் உள்ளதைப் போன்றே, முக்கியப் பண்டிகை தினமாகும். அன்றைய தினம் அதிகாலையில் பசுமாடு அதாவது “கோபூஜை’யும், மாலை சந்தியா காலத்தில் ஸ்ரீலக்ஷ்மி பூஜையும் செய்யப்படுகின்றன. மத்தாப்பு கொளுத்திப் பட்டாசு வெடிப்பது, நமது நாட்டைப் போன்றே முக்கிய இடம் பெறுகிறது. நான்காவது தினம் கோவர்த்தன பூஜை நடைபெறுகிறது. அப்போதும் நம் நாட்டைப் போன்றே, குன்றெடுத்துக் குடைபிடித்துக் கோகுலவாசிகளைக் கடும் மழையிலிருந்து காத்த கோவிந்தனுக்கு 54 வகைத் தின்பண்டங்கள் கொண்ட “சப்பன் போஜன்’ படைக்கப்படுகிறது. சப்பன் என்றால் 54. விளக்குகள் ஏற்றப்படுவதும் உண்டு. ஐந்தாம் நாள் அங்கும் நம் நாட்டைப் போன்றே “பையாதூஜ்’ அதாவது சகோதரர் - சகோதரிகள் நலன் பேணும் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஸ்ரீலங்காவில் தீபாவளி தினத்தன்று பலவிதமான உணவுகள் தயாரித்துப் படையல் செய்வது நல்ல சுபச் செயலாகக் கருதப்படுகிறது. அன்று இரவு வீடுகளில் தீபாலங்காரம் செய்யப்படுகிறது. விரிவான அளவில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளும் உண்டு.

சீனாவில் இந்தப் பண்டிகை “நயி மஹுவா’ என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டைப் போலவே தீபத் திருநாளுக்கு சில நாட்கள் முன்பே வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வண்ணங்கள் பூசப்படுகி“னறன. வாயிற்படியின் இருபுறமும் சீன மொழியில் “சுப லாபம்’ என்று எழுதி வைக்கின்றனர். இருபுறமும் ஒவ்வொரு மனித உருவம் செய்து வைக்கின்றனர். அவ்வுருவங்களை “மேன்-ஷைன்’ என்கின்றனர். அவை வெற்றியின் அடையாளம் என்று நம்புகின்றனர். இந்தப் பண்டிகையை ஒட்டிக் கலாசாரப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பரிசளிப்பும் உண்டு. தலை நகரம் “பீஜிங்’கில் 100 அடி உயரச் சக்கரம் அமைக்கப்பட்டு அதில் தீபங்கள் ஏற்றிவைத்து அலங்கரிக்கின்றனர்.

ஃபிஜித் தீவில் தீபாவளி ஏற்பாடுகளைப் பெரிய அளவில் உற்சாகத்துடன் செய்கின்றனர். ஏற்பாடுகளும் கொண்டாட்டங்களும் ஏறத்தாழ நமது நாட்டில் கொண்டாடப்படுவது போலவே அமைந்துள்ளன. இங்கு “ராம்லீலா’ நிகழ்ச்சி பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
மொரீஷியஸ் நாட்டினர் அன்றைய தினம் நெய்தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சி புதுமணத் தம்பதிகள் மற்றும் திபருமணத்துக்குத் தயாராக இருப்பவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அன்று ஸ்ரீலஷ்மி பூஜையுடன் கூட, ஸ்ரீராமன் பூஜையும் சிறப்பிட் பெறுகிறது.

மலேஷியாவில் தீபாவளி பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக அனுசரிக்கப்பட்டு, பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் தீபாலங்காரம் செய்யப்படுவதோடு, அன்று இரவு வாணவேடி“கைகளும் சிறப்புற நிகழ்த்தப்படுகின்றன. பெரிய அளவில் ராம்லீலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர். சீதையை மீட்டப் பிறகு, ஸ்ரீராமன் ஊர் திரும்பிய மகிழ்ச்சிக்கு அடையாளமாகவே மலேஷியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீலஷ்மி வெளிப்பட்டுத் தோன்றிய நிகழ்ச்சியை அவர்கள் தீபாவளியோடு எவ்விதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. அந்த நாட்டுக்கு என்று தனியான ராமாயணமே உண்டு. “ஹிகாயத் சிறீராம்’ என்று பெயர்.

தாய்லாந்து நாட்டில் இத்தீபாவளி “கிரான்சோங்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தாய்லாந்தினர் வாழை இலைகளால் சிறுசிறு கிண்ணங்கள் - அதாவது, தொன்னைகள் செய்து, அதனுள் எரியும் மொழுகுவர்த்தியை வைத்து அதை நதிப் பிரவாகத்தில் மிக்க விடுகின்றனர்.

மேலே கூறப்பட்ட நாடுகளைத் தவிர மியானமர், லாவோஸ், வியத்நாம், இந்தோனேஷியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்த தீபாவளித் தினத்தன்று “ராம்லீலா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுத் திபாலங்காரத்துடன் இந்தத் தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

Comments