மூன்று கண் அம்மன்

அகத்தியர் வடக்கில் இருந்து தெற்கே வந்தபோது பல சிவாலயங்களை வழிப்பட்டிருக்கிறார். பல சிவாலயங்களில் மூலவரை நிர்மாணமும் செய்துள்ளார்.
அகத்தியர் 108 கோயில்களை பிரதிஷ்டை செய்ததாக சொல்வார்கள். வாதாபி, வில்ஹணன் என்ற அரக்கர்கள் இருவரை அழித்த பாவத்தை தொலைக்க அகத்தியர் இத்தலங்களை நிர்மாணம் பண்ணியதாக செவி வழி கதை ஒன்றும் உண்டு. அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்கள் தவிர, அவரால் வணங்கப்பட்ட பல கோயில்களுள் கிளாம்பாக்கத்திலுள்ள சிவாலயமும் ஒன்று. இங்கிருந்து அவர் புலியூர் எவன்ற கிராமத்துக்கு சென்றதாக அறியப்படுகிறது. அதன் பிறகு அவர் திருவேற்காடு சென்று வேதபுரீஸ்வரரை வணங்கியுள்ளார். கல்வெட்டுக்களில் இருந்து இது மிகவும் பழமையான கோயில் என்பது உறுதிபட தெரிகின்றது. முதலாம் ராஜராஜ சோழன் காலத்து கட்டட திருப்பணி என்று தொல்பொருள் ஆராய்ச்சி துறை தெரிவிக்கிறது. இவ்வூர் களந்தை நகர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கபெற்றி மூன்று கல்வெட்டுகளில் இருந்து கோயிலில் விளக்கெரிக்ககொடுக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றி விரிவாக அறிய முடிகிறது.
கிளாம்பாக்கத்தில் உள்ள அகிலாண்டடேஸ்வரி அம்பாள் மூன்று கண்கள் உடையவள். முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை என்பார் அபிராமி பட்டர். அந்த அம்பாளை தொழுதால், கல்வி, வீரம், செல்வம் ஆகியவை எளிதில் வசப்படும்.
இவ்வன்னைக்கு பாலாபிஷேகம் நடைபெறும்போது இந்த மூன்றாம் கணம் புலப்படும். ஆதிசங்கரரின் செசளந்தர்ய லஹரியில் அம்பாளின் இந்த கண்ணை பற்றிய வர்ணனைகள், படிக்க வேண்டிய ஒன்று.
கிழக்கு நோக்கிய கருவறையில் சதுர ஆவுடையாருடன் அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு ஈசன் அருள்பாலிக்கிறார். அது தவிர, வெளியே வேம்பின் கீழ் ஒரு லிங்க திருமேனி உள்ளது. இவர் தான் ஆதிமூலவராம். அன்னியர் படையெடுப்பின் போது, அவர் சற்று பின்னப்பட்டு விட்டதாக தெரிகிறது. கோயில் விமானம் கஜபிருஷ்டமாகவே அமைந்துள்ளது.
மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடும், பௌர்ணமி பூஜை. ஆவணியில் பிட்டு உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார வழிபாடு. மகாதீபத்தன்று சொக்கப்பானை வழிபாடும், தை மாதத்தில் மகர, சங்கராந்தியும், மாசியில் மகா சிவராத்திரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. தரிசனத்திற்காக காலை 8-10 மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
ஊரார்களின்ஒத்துழைப்பால் நந்தி மண்டபம், நடராஜர் மண்டபம், மகா மண்டபம் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பிரதிஷ்டைக்கான அனைத்து விகரகங்களும் செய்யப்பட்டு தற்போது தத்ய வாசத்தில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டரை அடி உயர பஞ்சலோக ஸ்வாமிமற்றும் அம்பாள் திருவருவங்கள் மனதை கிறங்க அடிக்கின்றன. 

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் இக்கோயில் உள்ளது.

Comments