செட்டிப்புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர்


பிரசித்திபெற்ற செட்டிப்புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் சந்நிதியில் இந்த ஆண்டின் ஸ்ரீ வித்யா தோஷ நிவர்த்தி அர்ச்சனை சிறப்பாக நடைபெற உள்ளது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோக  ஹயக்ரீவர் விக்கிர திருமேனி மிகவும் புராதனமானது. அதன் சக்தி அளவற்றது. இப்பெருமானின் திருவருளின் சக்தியை தமிழக மக்கள் - அதிலும் முக்கியமாக மாணவ,  மாணவியர் நன்கு அறிவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி கல்விச் செல்வத்தை அளித்தருளும் கிரகம் புதன். இக்கிரகத்தின் அதிதேவதை பகவான் ஸ்ரீமந் நாராயணன். இப்பெருமானின் அவதார  அம்சம்தான் ஸ்ரீ யோகஹயக்ரீவர். வேதங்களையும், அவற்றின் உட்பொருள்களையும் சிருஷ்டி கடவுளான பிரம்மதேவருக்கு உபதேசித்தருளிய பெருமாள் ஸ்ரீ ஹயக்ரீவர்.

பகவானின் நாபிக் கமலத்திலிருந்து அவதரித்த பிரும்மதேவர், தனது படைப்புத் தொழிலுக்கு அவசியமான திவ்ய ஞானத்தைப் பெற்றது 
ஸ்ரீ ஹயக்ரீவரிடம்தான்! இப்பெருமானின் தெய்வீகப் பெருமை, சக்தி ஆகியவற்றை புராதன நூல்கள் அற்புதமாக விளக்கியுள்ளன. ஜெனனகாலத்தில் வித்யாகாரகரான புதன்  பலவீனமடைந்திருந்தாலும் அல்லது பாவக்கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் அதற்குப் பரிகாரமாக ஸ்ரீ ஹயக்ரீவரைப் பூஜித்து வருதல் அவசியம் என ஜோதிட  நூல்கள் விளக்கியுள்ளன.

மனதில் குழப்பம் (Confusion), பாடங்களில் மனது செல்லாமலிருத்தல் (Diversion), கவனக்குறைவு (Lack of Concentration),  சகவாச தோஷம் (Bad association), ஞாபகத்திறன் குறைவாக இருத்தல் (Loss of Memory), கிரகிப்புத்திறன் இல்லாமை (Lack of Grasping power), கல்வி முன்னேற்றத்தில் தடை (obstacles) போன்ற குறைகளுக்கும், நரம்பு சம்பந்தமான குறிப்பிட்ட சில மனநிலை  பாதிப்புகளுக்கும், ஸ்ரீ யோக ஹயக்ரீவரை நெய்தீபம் ஏற்றிவைத்து பூஜிப்பது அளவற்ற நன்மைகளை அளிக்கும்.

சில ஆயுர்வேத கிரந்தங்களில்கூட இதுபற்றி குறிப்புகள் தென்படுகின்றன. முக்கியமாக, நமது மனநிலைகளைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவது  ஸ்ரீ யோக ஹயக்ரீவரின் சக்தியாகும். பண்டைய பாரத புண்ணியபூமியில் பிரசித்திபெற்ற நாலந்தா கலாசாலை, தட்சசீலம், காசி வித்யாபீடம் ஆகியவற்றில்  மாணவமாணவியருக்கு உபாசனாமூர்த்தியாக விளங்கியவர் ஸ்ரீ ஹயக்ரீவர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

செட்டிப்புண்ணியம்!
காலமனைத்தையும் கடந்து, நாம் செய்துள்ள அளவற்ற புண்ணிய பலத்தின் காரணமாக சென்னையை அடுத்த செட்டிப்புண்ணியத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ  யோகஹயக்ரீவர் அளவற்ற சக்திகொண்ட பெருமானாவார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத பேரழகுப் பெருமானான இந்த யோக ஹயக்ரீவர் எக்காலத்தில் இத்திருத்தலத் திற்கு எழுந்தருளினார் என்ற விவரம் நமக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆங்கிலேயர்களுக்கும், ஆற்காடு நவாபிற்கும் நடந்த பல போர்களின்போது இங்கு எழுந்த ருளிய பெருமான் நமக்குக் கிடைத்துள்ள அரிய பொக்கிஷமாகும்.

இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானுக்கு தமிழக மாணவ, மாணவியரின் கல்வி நலன் கருதி சிறப்பு ஸ்ரீ வித்யா  தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை நடைபெற உள்ளது. மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்வில் வெற்றி பெறவும், தங்கள் விருப்பத்திற்கேற்ப  உயர்கல்வி பெறவும் இந்த சிறப்பு அர்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் : காலை 4.30 மணி.

ரக்ஷை சமர்ப்பிப்பது, அர்ச்சனை : காலை 6.30 மணி இச்சிறப்பு அர்ச்சனைக்கு சங்கல்பம் செய்துகொள்ள விருப்பமுள்ள அன்பர்கள் ரூ.50/- செலுத்தி, நிர்வாக அதிகாரி, ஸ்ரீ தேவநாதப் பெருமாள் திருக்கோயில் செட்டிப்பு ண்ணியம் - 603 204, காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு எழுதி முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளவும். 

தொலைபேசி எண்கள் : 8675127999 / 9841393770 / 9841809162.

Comments