சொக்க நாச்சியம்மனை

திருமணத் தடையா? குழந்தைப்பேறில் குறைபாடா? விரும் பிய வேலை கிடைக்க வில்லையா? உடல்நலப் பிரச்னையா?
உங்கள் சோகங்கள் எதுவாக இருந்தாலும், கேசரிமங்கலம் சொக்கநாச்சி யம்மனை மனமுருகி வழிபட் டால், அவை விரைவில் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த சொக்கநாச்சியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம்.

திருமணத் தடை உள்ள வர்களும், குழந்தை வரம் கேட்பவர்களும், வேறு எந்தக் கோரிக்கைகளை வைப்ப வர்களும் அந்த சமயத்தில் அதிகாலையில் குளித்துவிட்டு, ஈர உடையோடு தூய்மையான நீரை ஒரு செம்பில் நிரப்பி அதில் வேப்பிலை செருகி இந்த அம்மனின் ஆலயத்தை மூன்று முறை சுற்றி வந்து பூசாரியிடம் செம்பை தந்து அன்னையைக் குளிர்விக் கிறார்கள்.இப்படிச் செய்வதால்,அவர்களது பிரார்த்தனை வெகுவிரைவில் நிறைவேறுகிறதாம்.

ஆடிப்பூரம், ஆடி அமாவாசை நாட்களிலும், ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி தினங்களிலும் இங்கே விசேஷ வழிபாடுகள் நடப்பதால் பக்தர்களின் வருகையும் அதிக மிருக்கும்.

சொக்கேஸ்வரி என்றும் அழைக்கப்படும் இந்த அன்னையின் சிரசில் பூ வைத்து வாக்குக் கேட்பது ஒவ்வொரு வெள்ளிக் கிழமை யும் நடைபெறுகிறது. சிலர் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததும், ஜாதகத்தைக் கொண்டு வந்து அம்மனின் காலடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கிறார்கள்.

அதற்குக் காரணம், திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, ஜோதிடர் களுக்கும் தெரியாமல் ஏதேனும் தவறுகள் நேர்ந் திருந்தாலும் அதை இந்த அன்னை சரிசெய்து அருளாசி வழங்குவதே என்று நம்பப்படு வதுதான்.

 ஈரோட்டிலிருந்து பவானி வந்து, அங்கிருந்து சித்தார் சென்றால் கேசரிமங்கலம் சுமார் இரண்டு கி.மீ.யில் இருக்கிறது.

-மேவானி கோபாலன், ஈரோடு.

வாழ்க்கை ஒரு சக்கரம் என்று கேள்விப்பட்டிருக் கிறீர்கள் அல்லவா? அந்தச் சக்கரம் உருளும் பாதை எது தெரியுமா?

உறவு என்கிற பாலத்தின் மீதுதான் உருண்டு சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கைச் சக்கரம். அந்தப் பாலத்தை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்ற விஷ யம்தான், நம் பயணம் சீராக இருக்குமா, சிரமமாக இருக் குமா என்பதைத் தீர்மானிக்கிறது.

அதாவது, எவரோ அமைத்து வைத்த பாதையில் நீங்கள் பயணிப்பது கிடை யாது. உங்களுக்கு உரிய பயணப்பாதையை தீர்மானிப் பவர் நீங்கள்தான். ஆனால் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதை சீராக இல்லாமல் போவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

பாதையை, அதாவது உறவுகளிடையேயான பாலத் தினை அமைக்கும் போது அடிப்படையான ஆழ்மனதின் ஆலோசனையைக் கேட்க மறந்து மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதுதான்.

இது எப்படிப்பட்டது தெரியுமா? உரிய வழிமுறை களைக் கையாளாமல் மேம்போக்காக சாலை அமைப்பதைப் போன்றது. அது, வெகுகாலம் சீராக இருக்காது. எப்போது எங்கே பள்ளமாகும், எந்த இடத்தில் விரிசல் விழும் என்றெல்லாம் தெரியாது.

உண்மையாகச் சொல்லுங் கள்; உங்களில் எத்தனைபேர் எல்லா உறவினர்களிடமும் அன்பாகப் பழகுகிறீர்கள்? அல்லது உங்களில் எத்தனை பேரிடம் உறவினர்கள் எல் லோரும் பாசத்தோடும் ஒற்றுமையோடும் இருக்கிறார்கள்?

யாரோ ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே கொஞ்சம் கூச்சமாக, சிறிது தயக்கமாக, `அப்படி இல்லை' என்றுதான் சொல்கிறீர்கள்... சரியா?

யாரால் பிரச்னை உங்களுக்கு?

இந்தக் கேள்வியை நான் கேட்டால்.... `என் கணவர் - மனைவி என்மீது பாசமாக இருப்பது இல்லை!' `என் அம்மா - அப்பா எப்போதும் திட்டிக்கொண்டே இருக் கிறார்கள்.' `ஏனோ தெரிய வில்லை, என் மாமியாரை - மருமகளைப் பார்த்தாலே எனக்குக்கோபம் வருகிறது!' `நானும் அந்த உறவினரும் பேசி ஏழு வருடங்கள் ஆகிறது!'

இப்படி ஆளுக்கு ஒன்றாக அடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சரி எதனால் அப்படி? என்றால், `ஐந்துவிரலும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?' `ஏனோ தெரியவில்லை...' `எப்போதோ ஒருசமயம் எங் களுக்குள் சண்டை வந்தது...!' என்றெல்லாம் காரணமே இல்லாத காரணங்கள்தான் பலரும் சொல்வீர்கள்.

காரணமே இல்லாத காரணமா? என்ன சொல் கிறீர்கள்? என்று அவசர அவசரமாகக் கேட்கிறீர்கள் அல்லவா? ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். ஊருக்குப் புதிதாக ஞானியிடம் ஒரு பெண் வந்தாள். சமீ பத்தில் திருமணமானவள் அவள். திருமணம் ஆன நாள் முதல், தனக்கும் தன் மாமியாருக்கும் சண்டை வராத நாளே இல்லை.
இப்படியே போனால் வாழ்க்கையே நரகம் ஆகிவிடும் போலிருக்கிறது என்றாள், ஞானியிடம்.

``உன் மாமியார் உன் னிடம் கடுமையாக நடந் துகொள்கிறாரா?'' என்று கேட்டார் ஞானி.

``என் அம்மாவை விட அதிகமாக அன்பு காட்டுகிறார்கள்!'' என்றாள்.

``உன் கணவரிடம் ஏதாவது கோள் சொல்கிறாரா?''

``இல்லை...!''

``இப்படி நட... அப்படிச் செய் என்று கட்டுப்படுத்து கிறார்களா?''

``கிடையவே கிடையாது!''

ஞானியின் எல்லாக் கேள்விகளுக்கும் நேர் மறை யான பதில்களே வந்தன.

``அப்புறம் எப்படி உங்களுக்குள் சண்டை வரு கிறது?''

``அது என்னவோ தெரியவில்லை. அவர்கள் எவ்வளவுதான் பாசமாக நடந்து கொண்டாலும், என் மாமியாரைப் பார்த்தால் எனக்கு எரிச்சல்தான் வருகிறது. அவர்கள் செய்வ தெல்லாம் நடிப்பு என்றே தோன்றுகிறது!'' என்றாள். சொன்ன பெண்ணை, இன்னும் சில கேள்விகள் கேட்டார் ஞானி. அவள் பிரச்னை என்ன என்பது புரிந்தது அவருக்கு.

திருமணம் ஆவதற்கு சிலமாதங்கள் முன்பு அவளுக்கு யாரோ ஓர் உறவினர், எதிர் மறை சிந்தனையைத் தூண்டிவிட்டிருக்கிறார்.

``உலகத்தில் கீரியும், பாம்பும், எலியும் பூனையும் ஒற்றுமையாக இருந்ததாகக் கூட கதை உண்டு. ஆனால் மாமியாரும் மருமகளும் ஒற்று மையாக இருந்ததாக கதை கூட கிடையாது. என்னதான் பார்த்துப் பார்த்து செய்தாலும் உன் மாமியார் குற்றம் கண்டுபிடித்து விடுவாள். எச்சரிக்கையாக இரு. இல்லையென்றால் நீயும் உன் கணவனுமே பிரிய வேண்டி வரலாம்!'' என்று அந்த உறவினர் சொன்னதுதான் அவளது பிரச்னைக்கு மூல காரணம்.

புதிதாக வீட்டுக்கு வந்தி ருக்கும் மருமகள் மீது அவள் மாமியார் அளவுக்கு அதிகமாகவே பாசம் காட்டியிருக்கிறார். எல்லா வேலைகளையும் அவரே செய்திருக்கிறார்.

ஆனால் இந்தப் பெண், `தன்னை ஒரு வேலையும் செய்யவிடாமல் தடுத்து, அதையே குற்றமாகச் சொல்லி தன்னையும் தன் கணவரையும் பிரிக்கப் போகிறார்கள்!' என்று எதிர்மறையாகக் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

பாசமுள்ள மாமியார்கள் - மருமகள்கள் பலரைப் பற்றிச் சொன்னார் ஞானி. அவளது ஆழ்மனதில் இருந்த பயத்தைப் போக்கினார். மகிழ்வோடு திரும்பினாள் அவள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; இதில் அந்தப் பெண் சொன்ன காரணம் உண்மையானதா, அல்லது தவறானதா?

இப்படித்தான் உங்கள் உறவுப் பாலத்தின் விரிசலுக்கு நீங்கள் சொல்வது காரணமே இல்லாத காரணமாக இருக்கலாம்.

உங்கள் பிரச்னை எது வாகவும் இருக்கலாம். உங்கள் உறவுப்பாலத்தில் எங்கு வேண்டுமானாலும் -அதா வது எந்த உறவினரோடு வேண்டுமானாலும் விரிசல், பிரிவு இருக்கலாம்.

அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்கள் ஆழ் மனமான ஆல்ஃபா மைண்ட் உங்கள் உறவுப்பாலம் சீராக உதவும்.

விலகிப்போன, விரிசலுக் குக் காரணமான உறவினர் யாராக, எங்கே இருப்பவராக வேண்டுமானாலும் இருக்க லாம். உங்களோடு அவர் இது வரை பேசாதவராகவும் கூட இருக்கலாம்.

எப்படியானாலும் சரி... உங்கள் உள்மனம் அவரோடு பேசும். அதன்பிறகு ஒற்றுமை அலை வீசும். அங்கே பாசமும், நேசமும் பரவி, உறவுப்பாலம் சீராகும். உங்கள் வாழ்க்கைப் பாதை நேராகும்.

Comments