ஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை!’


ந்த வனத்தில், எண்ணற்ற மயில்கள் சூழ்ந்திருந்தன. அந்தப் பகுதிக்குக் கிழக்கில், பரசலூரி எனும் இடத்தில், பார்வதிதேவியிடம் அடைக் கலமாகி இருந்தன அந்த மயில்கள்.
தட்சனின் யாகத்தை நிர்மூலமாக்கிக் கொண்டிருந் தார் வீரபத்திரர். அந்த யாகத்தில் கலந்துகொண்ட மயில்கள், வீரபத்திரரின் ஆக்ரோஷத்துக்குப் பயந்து எங்கு செல்வதென்று தெரியாமல் ஓடோடி வந்து அன்னையிடம் அடைக்கலம் புகுந்திருந்தன. ஏற்கெனவே தன் பேச்சையும் மீறி தட்ச யாகத்துக்குச் சென்றதால் தேவியின் மீது ஈஸ்வரன் கொண்டிருந்த கோபம், இப்போது இன்னும் அதிகமானது.
அம்பிகையை மயிலாக மாறும்படி சபித்தார்!
மயிலாக மாறிய அம்பிகையும், மணாளனை நினைத்து கடும் தவம் புரிந்தாள். இதில் மகிழ்ந்த சிவனார், ஆண் மயிலாக வந்து நடனமாடினார். பிறகென்ன... இறைவனின் அருளுக்குப் பாத்திரமானாள் தேவி. அதுவே மயிலாடுதுறை எனும் திருத்தலமானது! இங்கே, அருளும் இறைவனின் திருநாமம் - ஸ்ரீமயூரநாதர். அம்பாள் - ஸ்ரீஅபயாம்பிகை.
ஸ்ரீசந்தன விநாயகர், ஸ்ரீதங்க முனீஸ்வரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீஆலிங்கன சந்திரசேகர் மற்றும் எமன், வாயு ஆகியோர் பூஜித்த சிவலிங்கத் திருமேனிகள் ஆகியவற்றைத் தரிசிக்க லாம். ஸ்ரீபைரவர், ஸ்ரீஅஷ்டலட்சுமி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீபிரம்மா ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில்...'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ எனும் முதுமொழிக்கு ஏற்ப, சுமார் 160 அடி உயரத்தில், 9 நிலைகளும் 9 கவசங்களும் கொண்டு ஓங்கி உயர்ந்து, கம்பீரமாகக் காட்சி தருகிறது ராஜகோபுரம். 'நாதசர்மா- அநவித்யை தம்பதி, 'மறுபிறவியே வேண் டாம்’ என வேண்டி வர... அவர்களை சிவனார் ஆட்கொண்ட தலம் இது! அநவித்யை சிவலிங்கத்தோடு ஐக்கியமானதால், லிங்கத் திருமேனிக்கு தினமும் புடவை சார்த்தப்படுகிறது.
கோயிலின் தீர்த்தம்- பிரம்ம தீர்த்தம். ஐப்பசி மாத அமாவாசையில், காவிரியில் நீராடி, அம்பாள்- ஸ்வாமியை அர்ச்சித்து, அநவித்யையும், தனிச் சந்நிதியில் உள்ள ஸ்ரீநாத சர்மாவையும் வழிபட, மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்!    

Comments