அர்ஜுன் கட்டும் அனுமன் கோயில்

கத்திரி வெயிலில் கால் சுட நடப்பவரோ, ஏசி காரில் இதமாக செல்பவரோ எவரானாலும் சரி, சென்னை போரூருக்கு அருகில் உள்ள கெருகம்பாக்கம் வழியாக  சென்றால், உஷ்ணத்தையும் மறந்து ஒரு நிமிடம் ஓரமாக நின்று ஒரு விஷயத்தை விழிகள் விரிய ஆச்சரியமாக பார்ப்பார்.
அங்கே அழகுற உருவாகி கொண்டிருக்கும் அனுமன் ஆலயம் தான். அந்த வியப்பான விஷயம். பால வயதிலேயே வானம் தொட்டு பறந்தவர் வாயுமகன் என்பதாலோ என்னவோ ஆகாயம் தொடுவது போல் மிகப்பெரிதாக அமைந்திருக்கிறது அனுமனின் சிலை.
இன்னொரு வித்தியாசமான விஷயம். அங்கே இந்த கோயிலை கட்டுவர் ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் என்பதுதான். ஷேர் மார்க்கெட், கல்யாண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இப்படியெல்லாம் முதலீடு செய்வது தானே சினிமாக்காரர்களின் வழக்கம். இவர் ஏன் கோயில் கட்டுகிறார்? இந்த கேள்வியோடு  அவரையே சந்தித்தோம்.
ஜப்பான்ல ஒரு பொன்மொழி இருக்கு உன்னோட பேர் நீண்டகாலம் நிலைச்சு இருக்கணும்னா, ஒரு வீடு கட்டு. அல்லது கல்யாணம் பண்ணிக்கோ அதுவும் இல்லைன்னா, ஒரு புத்தகம் எழுது. அப்படின்னு, ஏன்னா இவை தான் காலபம் கடந்து நிற்கும். உரிமையாளர் பெயரை சொல்லும்  அப்படின்னு அவங்க நம்பறாங்க. ஆனா இந்து மதம், நிலையாக இருக்க ஒரே மார்க்கமா பத்தியை தான் சொல்லுது. அதனால தான் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே மன்னர்கள் கோயில்களை கட்டுறதையே முக்கிய திருப்பணியாக செய்திருக்காங்க.
என்னோட பேர் நிலைக்கணும்கறதுக்காக மட்டுமே நான் இந்த கோயிலை கட்டலை. அதுக்கு இன்னொரு காரணம் என்னோட பாஸ் மேல எனக்கு இருக்கற பக்தி. (யார் அந்த பாஸ்? நமக்குள் கேள்வி எழுந்தாலும் அவரது  பேச்சுக்கு நடுவே குறுக்கிடாமல் காத்திருக்கிறோம்.
இன்னிக்கு நான் ஆக்ஷன் ஹீரோவா நல்ல பேர் வாங்கி இருக்கேன்னா, அதுக்கு முக்கிய காரணமே என் பாஸோட வீரதீரங்களை பற்றி சின்ன வயசுலயே நான் படிச்ச, கேட்ட விஷயங்களால என் மனசுல பதிஞ்ச தைரியம் தான். என் பாஸுக்கு ஏதாவது செய்யணும்கற ஆசை எனக்கு ரொம்ப நாளாவே உண்டு. அது தான் கோயில் கட்டற அளவுக்கு என்னை கொண்டு வந்திருக்கு. கொஞ்சம் நிறுத்தினார்.
கோயில் கட்ட நினைச்சீங்க சரி, இவ்வளவு பெரிய சிடத வைக்கணும்னு எப்படி தோணிச்சு?
இங்கே தான் கோயில் கட்டணும் இவ்வளவு பெரிய சிலை வைக்கணும்னெல்லாம் ஆரம்பத்துல தீர்மானிக்கலை. கோயில் கட்ட இடம் தேடினப்ப, வாஸ்துபடி இந்த இடம் தான் சரியானதா இருந்துச்சு. ஆனா இந்த நிலைத்தோட சொந்தக்காரர் இதை விற்க முடியாதுன்னுட்டார். சரி வேற இடம் பார்க்கலாம்னு நானும் விட்டுட்டேன். அந்த சமயத்துல இடத்தோட சொந்தக்காரர் வந்து என்னவோ தெரியலை  இந்த இடத்தை உங்களுக்கு வித்துடம்னு தோணுது. வாங்கிக்ங்குன்னார். நம்ம பாஸ் தான் அவருக்குள்ள அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கணும்னு எனக்கு புரிஞ்சுது. உடனடியா இடத்தை வாங்கிட்டேன். இடத்தைவாங்கின பிறகு தான் தெரிஞ்சுது இந்த கெருகம் பாக்கத்துலதான் சென்னை நவகிரக கோயி“கள்ல கேது கிரகத்துக்கு உரிய கோயில் இருக்குங்கறது. கேதுவை ஞானக்காரகன்னு சொல்வாங்க. என் பாஸ் அனுமனும் ஞானத்துலயும், கல்வியிலயும் சிறந்தவராச்சே. கோயிலுக்கு இது தான் சரியா இடம்கறது மேலும் உறுதியாச்சு.
இடம் தயார். அடுத்தது என்னவ, பாஸுக்கு சிலை வைக்கறது தானே. ஊர் ஊராக கல் தேடினப்ப, பெங்களூருக்கு பக்கத்துல கெய்ராங்கற இடத்துல இருக்கறதா, ஸ்தபதி அசோக்குடிகார் மூலமா தகவல் கிடைச்சது. அங்கே போய் கல்லை எடுக்க முயற்சித்தப்ப அதுல விரிசல் இருக்கறது தெரிஞ்சுது. வேற கல் தேடினோம். கிடைச்சது. அது, எதிர்பார்த்ததைவிட பெரிதாகவே கிடைச்சுது. பாஸோட விருப்பம் விஸ்வரூபமா அமையறதாகஇருக்கறப்ப அதை தடுக்க யாராலமுடியும். சிலையை வடிச்சபிறகு இன்னொரு விஷயமும் தெரிய வந்து பிரமிக்க வைச்சுது. உலகத்திலேயே மிகவும் உயரமான அமர்ந்த நிலை அனுமன் சிலை (சிலையும், பீடமுமாக 35 அடி உயரம்) இது தான்கறது தான் இந்த பிரமிப்புக்கு காரணம்.
கோயில் கட்டுவதைபற்றி வார்த்தைகளால் சொல்வது இவ்வளவு எளிதாக இருந்தாலும் நிஜத்தில் அது அவ்வளவு சுலபமாக இல்லை என்பது தான் உண்மை. அதையும் அவரே சொல்கிறார்.
கோயில் கட்டுற முயற்சியை 2006 ஆம் வருஷம் ஆரம்பிச்சோம். கல் தேட ஆரம்பிச்சு. எடுத்து, பூஜை, புனஸ்காரங்கள் செஞ்சு சிலையாக வடிச்சு முடிக்கிறதுக்குள்ள ஏகப்பட்ட பிரச்னைகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் விட பெரிய பிரச்சினை, சிலை உநுருவான பிறகு வந்தது தான். சிலையும், பீடமுமா மொத்தம், நூற்றறுபது டன் எடை. அதை அலுங்காம கொள்ளாம சென்னைக்கு கொண்டு வரணுமே.  அது õதன் பிரச்னை. சிலையில சின்னதா ஏதாவது பின்னம் ஏற்பட்டா கூட, அது பூஜைக்கு உகந்ததா இல்லாம கோயிடும். அதுவரைக்கும் பட்ட கஷ்டத்துக்கும் பலன்கிடைக்கான்னுட்டாங்க. என்ன பண்ணலாம்னு யோசிச்சு, யோசிச்சு அந்த பாரத்தையும் பாஸ்கிட்டேயே ஒப்படைச்சுட்டு ஒரு வழியா டிராபிக் பர்மிஷனெல்லாம் வாங்கி சிலையை கொண்டு வந்தோம்.
. சிலை பிரதிஷ்டையை பார்க்க திரண்டு வந்திருந்த இந்த பகுதி மக்களும் ராம நாமத்தையும் அனுமன் நாமத்தையும் கோஷமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போது தான் ஒரு அதிசயம் நடந்துச்சு.
பிரம்மாஸ்திரத்துக்கு கூட கட்டுப்படாதவர் எங்க அன்புக்கு கட்டுப்பட்டவரானார். கிரேன்ல கட்டப்பட்ட கயிறு மூலமா சிலையை ஆடாம அசையாம தூக்கி சரியான இடத்துல பொருத்தினாங்க. வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் சொல்லி எங்க பாஸோட சிலையை முறைப்படி பிரதிஷ்டை செய்தாங்க.
பாஸோட உத்திரவுப்படி அநேகமா ஒரு வருஷத்துல கும்பாபிஷேகம் நடக்கும். இதுவரைக்கும் எவ்வாளவோ பணம் செலவாயிடுச்சு இனியும் தூண்கள் எழுப்பி பிராகராம் அமைக்கனும். மேற்கு நோக்கி பார்த்திருக்கற அனுமனுக்கு எதிர்ல அவரோட பாஸ் ராமருக்கு சிலை வைக்கனும். எல்லாம் முடிஞ்சு முழுமையான கோயிலாக எழும்பறதுக்கு  கோடிக்கணக்குல கூட செலவாகலாம். ஆனா எல்லாத்தையும் என் பாஸ் பார்த்துப்பார் அப்படிங்கறது தான் என்னோட நம்பிக்கை

Comments