சந்திர பிரசன்ன பூஜை

வகிரகங்களில் அழகிய ரூபமான சந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்கி அருள்பெற்ற தலம், சந்திரசேகரபுரம்.
விநாயகரை அவமதித்தது, தட்சனுடைய யாகத்திற்கு உறுதுணையாக இருந்தது, தன் 27 மனைவியரில் இருவரிடம் மட்டும் அதிக பிரியம் செலுத்தியது என மூன்று காரணங்களுக்காக, சாபத்திற்கு ஆளானார் சந்திரபகவான்.

இறுதியில், இச்சாபங் களுக்கு விமோசனம் பெறும் பொருட்டு கயிலைநாதனை சரணடைந்தார்.

ஈசன் சந்திரனிடத்தில், ``நீ 64 கலைகளையும், இழந்த பதவி, அழகு எல்லாவற்றையும் பெற 64 சிவாலய மூர்த் தங்களைத் தரிசித்து வருவாய். அவ்வாறு வரும்போது, ஒவ்வொரு சிவாலயத்திலும் ஒரு கலை வீதம் 64-ஐயும் பெறுவாய் என்றார்.

அதன்படி சந்திரன்  63 கலைகளையும் சேர்த்துக் கொண்டு கடைசியாக சந்திர சேகரபுரம் வந்து சேர, இங்கே ஈசன் அருளால் 64வது கலையையும் பெற்று வசீகர முகத்துடன் மிளிர, ஈசனே மகிழ்ந்து அவரைத் தன் சடாமுடியில் சூடிக் கொண்டார்.

சந்திரன் அடைக்கலம் பெற்ற காரணத்தால் இவ்வூருக்கு சந்திரசேகரபுரம் எனப்பெயர் வந்தது.

சோழர்காலத்து அரச னான கோட்செங்கசோழன் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.

சந்திரனுடைய சாபம் நீங்க விநாயகர் உதவியதால் இத் தலத்தில் சங்கடஹர சுந்தரராஜ கணபதியாக கணேசப் பெருமான் விளங்குகிறார். தம்பிமுருகன் உபதேச கோலத்தில் ஞானஸ்கந்த மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.

மனக்கவலையோடு வந்த சந்திரனைத் தன் வாக்கினால் தேற்றிய சக்தி மனோன்மணி அம்பாளும், சூலினி துர்க்கையும் இரு சக்திகளாக சன்னதி கொண்டுள்ளார்கள்.

குபேர திக்கில் காமாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அலைமகளும் மலைமகளும் சேர்ந்த இச்சக்திகள் சந்திர னுக்குத் தாய்போல பல பேறுகளைத் தந்ததாக ஐதிகம்.

சந்திரனுக்கு அருள்செய்த இறைவனாகிய சந்திரசேகரர் எழுந்தருளியிருப்பதால் இது ஒரு சந்திர பரிகாரத்தலமாகவும், சாபம் போக்குகிற தலமாகவும் திகழ்கிறது.

கருவறையில் ஈசன் லிங்க வடிவாக வீற்றிருக்க,  கோஷ்டத்தில் விநாயகர், தென்முகக் கடவுள், திருமால், பிரம்மா, எட்டுக்கரங்களோடு கூடிய துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.

மகாமண்டபத்தருகே தென்முகமாக சௌந்தராம் பிகை அபய வரத முத்திரை யோடு நின்றருள்கிறார். மண்டபத்தின் வடக்குப் பாகத்தில் சுவரின் மேல் தெற்கு நோக்கியவாறு கார்த்திகை, ரோகிணி தேவியுடன் சந்திரன் புடைப்புச் சிற்பமாக குடும்பச் சந்திரனாக உள்ளார்.

ஆலயத் திருச்சுற்றை வலம் வரும்போது மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கௌசிகரிஷி, லிங்கோத்பவர், பிரம்மதேவர், மனோன்மணி, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சனிபகவான், அதிகார நந்திதேவர் ஆகியோர் உள்ளனர்.

புகழுக்கும், பணி உயர்வு மற்றும் சமூக அந்தஸ்துக்கும் அருள்தரும் மூர்த்தியாக விளங்குபவர் சந்திரபகவான். இவருக்கு அருள்தந்த ஈஸ்வ ரனை திங்கட்கிழமை, செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் சந்திரனுக்குப் பிரியமான பொருட்களால் பூஜை செய்து யாகவழிபாடுகள் செய்வதால் குடும்பத்தில் நற்பெயர், ஒற்றுமை, பணியில் உயர்வுகளை பெற்று நலம் பெறலாம்.

பௌர்ணமியன்று இரவு ஏழு மணிக்கு மேல் சந்திரன் உதிக்கின்ற நேரத்தில் அவருக் குரிய பரிகாரப் பொருட்கள், மலர்கள், நிவேதனங்களைக் கொண்டு சந்திர பிரசன்ன பூஜை என்னும் சக்தி வாய்ந்த பூஜையைச் செய்வார்கள். அப்போது இறைவனும் சந்திரனும் பார்த்துக் கொள்வதாக ஐதிகம்.

இந்த பூஜையின் போது வாழ்வில் தடைகள் உடையவர்கள், கோர்ட் வழக்குகளில் தேவையின்றி சிக்க வைக்கப்பட்டவர்கள், பழிச்சொல்லுக்கு ஆளாகி துயர்படுவோர்கள் அதற் குரிய நிவாரணம் கிடைக்க வேண்டுதல் செய்து, அர்ச்சனை செய்து பலன் பெறுகிறார்கள்.

பஞ்ச கோஷ்டத்தில் அருளும் கல்யாண சுப்ரமண் யரை சஷ்டிநாளில் வழிபட்டு வர வாரிசு விருத்தி பெறலாம். இத்தலத்திலுள்ள சூலினி துர்க்கையை சரபபட்சியின் இறக்கையிலிருப்பது போலச் சந்திர பகவானே ஸ்தா பித்ததாக ஐதிகம்.

தலவிருட்சமாக சந்தி ரனுக்குரிய வெள்ளைஅலரி செடியும், மூன்று தள வில்வ மும் திருச்சுற்றில் வளர்கிறது. நாடக, நாட்டியக் கலையில் சிறக்க விரும்புவோருக்கு சிறப்பான பிரார்த்தனைக் கோயிலாகவும் இது திகழ்கிறது.

கும்பகோணத்திலிருந்து பாபநாசம் செல்லும் வலங்கைமான் வழியில் சந்திரசேகரபுரம் உள்ளது. வலங்கைமானிலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

Comments