நீயும் ஓர் அர்ஜுனன்தான்! .........

பகவானை அடையும் வழிகளில் எளிதானதும் அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமான பக்தி வழிபாடு குறித்தும், தனக்கு விருப்பமான பக்தர்கள் குறித்தும் அர்ஜுனனுக்கு விளக்கினார் ஸ்ரீகிருஷ்ணர்.

அவரிடம், ''இயற்கைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு, ஆத்மாவைப் பற்றிய அறிவு, ஞானத்தின் இறுதி ஆகியவை பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்... விளக்குவாயா?'' எனக் கேட்டான் அர்ஜுனன்.

அர்ஜுன உவாச ப்ரக்ருதிம் புருஷம் சைவ «க்ஷத்ரம் «க்ஷத்ரக்ஞமேவ ச
ஏதத்வேதிதுமிச்சாமி ஞானம் ஞேயம் ச கேசவ ஸ்ரீபகவானுவாச
இதம் சரீரம் கௌந்தேய ஷேத்ரமித்யபிதீயதே
ஏதத்யோ வேத்தி தம் ப்ரமஹு: ஷேத்ரக்ஞ இதி தத்வித:

ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு விளக்கினார்:

''அர்ஜுனா, இந்த உடலே கோயில் எனப்படும் «க்ஷத்திரம். இது குறித்து முழுமையாக அறிபவனை '«க்ஷத்ரக்ஞன்' என்பர் ஞானிகள். கோயிலுக்குள் இறைவன் குடியிருப்பது போல, உடலுக்குள் குடியிருக்கிறது ஆத்மா.

பந்து விளையாடுபவனுக்கு மைதானத்தைப் போலவும், கழைக் கூத்தாடிக்கு கயிறைப் போலவும் ஆத்மாவின் செயல்களுக்கு உடல் தேவைப்படுகிறது. இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றுதான் என்றாலும், உடல்- ஆத்மா இரண்டும் வேறு வேறு.

கர்மத்தால் கட்டுண்ட ஆத்மாவின் செயலுக்கு உடல்- வெறும் களம்; அவ்வளவுதான்.

'உடல் அழியக் கூடியது; ஆத்மா நிலையானது!' எனும் உண்மையை உணர வேண்டும். எல்லா உடல்களிலும் நானே ஆத்மாவாக உள்ளேன். எனவே, ஆத்மாவை அசைத்துப் பார்க்கும் எந்தச் செயலை யும் செய்யக் கூடாது. உடல் சம்பந்தமான லாப- நஷ்டங்களைக் கணக்குப் பார்க்காமல், ஆன்மாவின் முன்னேற்றத்துக்கு முயற்சிக்க வேண்டும்!''



அந்தப் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்று மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கேட் டார்.

இன்ஜினீயர்... டாக்டர்... வக்கீல்... என மாணவர் கள் தத்தமது விருப்பத்தைக் கூறினர். நரேந்திரனின் முறை வந்தது. அவன், ''நான் குதிரைக்காரன் ஆவேன்!'' என்றான். இதைக் கேட்டு மற்ற மாணவர் கள் சிரித்தனர். 'மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவ னான இவன், குதிரைக்காரன் ஆகப் போகிறேன் என் கிறானே' என்று ஆசிரியருக்கு வியப்பு!

ஆனால், நரேந்திரன் அப்படிச் சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு. அவனின் தந்தை அடிக்கடி குதிரை வண்டியில் பயணிப்பது உண்டு. அப்போதெல்லாம்

குதிரைக்காரனின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பது நரேந்திரனின் வழக்கம். குதிரை வண்டிக்காரரது கம்பீரத்தையும் அவரது கட்டளைக்குக் குதிரை கீழ்ப்படிவதையும் பார்த்து வியந்தவனுக்கு குதிரைக்காரரை மிகவும் பிடித்துப் போனது. எனவே, தானும் குதிரைக்காரன் ஆக வேண்டும் என ஆசைப் பட்டான் அவன்.

வகுப்பில், தோழர்களால் கிண்டலுக்கு ஆளான வருத்தத்துடன், வீட்டுக்கு வந்த நரேன் தன் தாயாரிடம் நடந்ததைக் கூறினான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டறிந்த நரேனின் தாயார், ''ரொம்ப சரி மகனே! நீ குதிரைக் காரன் ஆவதையே நானும் விரும்பு கிறேன். உனது விருப்பமே எனக்கு முக்கியம். உனக்கு நல்ல குதிரைக்காரன் ஒருவனது படத்தை பரிசாகத் தருகி றேன்!'' என்று குதிரைகள் பூட்டிய தேரில் கண்ணன் பயணிக்கும் ஒரு படத்தைத் தந்தார்.

'நீயும் இந்த குதிரைக் காரன் மாதிரி ஆக வேண்டும்!' என்று தன் மகனைத் திசை திருப்பினார்.

ஆம், நரேந்திரன் பிற்காலத்தில் ஆன்மிக ஞானியாக... விவேகானந்தராக மாறிய கதைதான் உங்களுக்குத் தெரியுமே!

ஆன்மாவை அசைத்துப் பார்க் கும் நிகழ்ச்சிகள் பல நமது வாழ்க்கையிலும் நடக்கும். உடம்பா... உயிரா..? எது முக் கியம் என்ற குழப்பம் வரும்.

சந்தேகமே இல்லை; உயிரே முக்கியம். உயிர்தான் ஆத்மா.

உயிர் உறவாடும் வெறும் களம்தான் உடல். 'உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்ற வரிகள் உடல்- உயிர் இரண்டையும் சேர்த்துப் போற்றுவதன் அவசி யத்தை உணர்த்துகிறது. அதே நேரம் நாம், உடம்பையும் ஆத்மாவையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அந்த மனிதர் ஆன்மிகத்தில் திளைப்பவர். அடிக்கடி ஆசிரமம் சென்று, தன் குருவின் உபதேசங்களைக் கேட்பார். சில நாட்களில் அங்கேயே தங்கியிருந்து ஆசிரம வேலைகளில் ஈடுபடுவார். சில நாட்கள் ஆசிரமத்தின் பக்கமே வர மாட்டார்.

ஒரு நாள் இவரிடம், ''நீங்கள் ஆசிர மத்திலேயே தங்கினால் என்ன? இனி, உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் இனிதே நிறைவேற்றி விட்டீர்கள். வாழ்வின் மிச்ச நாட்களை இங்கு கழிக்கக் கூடாதா?'' என்றார் குருநாதர்.

உடனே நம்மவர், ''என்ன சுவாமி இப்படிச் சொல்லி விட்டீர்கள்? நான் இல்லாமல், வீட்டில் எதுவும் நடக்காது. என் மனைவி என்னைப் பிரிந்து ஒரு கணம்கூட இருக்க மாட்டார். மகனும் என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளான். அவனால் தனியாக குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க முடியாது. இந்தப் பிறவியில் இப்போது உள்ளது போலவே, ஆசிரமத்துக்கு வந்து செல்கிறேன். அடுத்த பிறவியில் இங்கேயே தங்கியிருக்க முயற்சிக்கிறேன்!'' என்றார்.

உடனே, ''சரி... நீங்கள் சொல்வது சரிதானா என்பதை அறிய சிறு பரி சோதனை. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு, வீட்டில் படுத்துக் கொள்ளுங்கள். பிறகு நடப்பதைப் பாருங்கள்!'' என்று இரண்டு மாத் திரைகளைத் தந்து அவரை அனுப்பி வைத்தார் குருநாதர்.

நேரே வீட்டுக்கு வந்தவர் மாத்திரை களை சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். உடல் அசைவற்றுப் போனது. ஆனா லும் மற்றவர்கள் பேசுவதை அவரால் கேட்க முடிந்தது.

சற்று நேரத்தில் சாப்பிட எழுப்பினாள் மனைவி. அசைவே இல்லை என்றதும் இவர் இறந்து விட்டதாக முடிவு செய்தாள். மகனை அழைத்தாள். அவனிடம், ''அப்பா நோய்- நொடி எதுவும் இன்றி நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துட் டார். உயிரோடு இருந்தபோது வீட்டுக்குப் பின்புறம் உள்ள, பலா மரத்தை முறித்து, அந்த விறகுகளை வைத்தே தன்னை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனவே, அந்த பலா மரத்தை முறிக்க ஏற்பாடுகள் செய்!'' என்றார்.

உடனே மகன், ''பலாமரம் இப்போது என்ன விலை விற்கிறது தெரியுமா? வேறு ஏதாவது மரத்தை வெட்டுவோம். இருக்கும்போது அவரை நன்றாகத்தானே கவனித் தோம். வேறு மரம் கொண்டு தகனம் செய்தால், இறந்தவருக்கு தெரியவா போகிறது?'' என்றான். அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை.

இந்த உரையாடல் முழுவதையும் கேட்ட நம்மவருக்கு மெள்ள உணர்வு திரும்பியது. எவரிடமும் எதுவும் பேசாமல், ஆசிரமத்துக்கு நடையைக் கட்டினார்!

உடலை மெய்யாக நினைப்பது தேவையற்றது. ஆனால், அதை ஆத்மா குடி கொண்டுள்ள கோயிலாக வழிபட வேண்டும். ஏனெனில், 'எல்லா உடலிலும் ஆத்மாவாக நிற்பவன் நானே' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன்.

கோயிலுக்குள் செல்வதற்கு சில நியதிகள் உண்டு. வீட்டுக்குள் செல்வது போல் சட்டென்று நுழைந்து விட முடியாது.

சபரிமலை சீசனில் எந்த கோயிலுக்குச் சென்றாலும் 'சாமியே சரணம் ஐயப்பா!' என்ற சரண கோஷம் கேட்கும். அது சிவன் கோயிலோ... பெருமாள் கோயிலோ... அம்மன் கோயிலோ எதுவாக இருந்தாலும் சரி, ஐயப்ப பக்தர்களுக்கு எல்லாக் கோயில்களிலும் ஸ்ரீஐயப்பனே காட்சி தருகிறார்.

நம் உடலில் வெறுப்பு உண்டு; விருப்பு உண்டு; தந்திரம் உண்டு. ஆனால் இதெல்லாம் உடற்கூறு அறிவியலில் இல்லை. மனிதன் சுவாசிக்கும் வாயு ஆக்சிஜன்; வெளி விடும் வாயு கார்பன்- டை- ஆக்சைடு என அறிவியல் பிரித்துள்ளது.

ஆனால், மனிதனின் 'பிராணன்' என்பது எத்தகைய வாயு? எவற்றின் கூட்டுச் சேர்க்கை? உடலில் இருந்து வெளியேறும் பிராணனை அறிவியலால் பிரித்தெடுக்க முடியுமா?

ஞானம் பற்றிய குழப்பம் ஏராள மானோருக்கு உள்ளது. கண்ணன் கீதையில் ஞானம் என்று கூறுவது எவற்றைத் தெரியுமா?

அடக்கம், எளிமை, மன்னிக்கும் இயல்பு, நேர்மை, ஆசிரியருக்கு தொண்டு செய்தல், தூய்மை, உறுதி, தன்னடக்கம், புலன் உணர்வு பொருட்களைப் பற்றிய அலட்சியம், ஆணவம் இன்மை, பிறப்பு- இறப்பு, பிணி, மூப்பு, துன்பம் ஆகியவற்றில் உள்ள தீமையை உணர்தல், பற்றற்ற மனப்பான்மை, ஸ்ரீகிருஷ்ணனிடம் மாறாத பக்தி, மக்கள் கூட்டத்தில் விருப்பமின்றி தனிமையில் இருத்தல், ஞானத்தில் உறுதி, உண்மையான ஞானத்தின் முடிவை அறிதல் ஆகியவற்றையே ஞானம் என்று கூறுகிறான்.

மேற்கண்டவற்றை பின்பற்ற முடி யுமா என மலைப்பு வரலாம். இவற்றில் சிலவற்றை பின்பற்றி அதில் உறுதியாக இருந்தாலே போதும்; உண்மையான ஞானத்தை நம்மால் அடைய முடியும்.

Comments