தீபாவளித் தத்துவங்கள்

பொறுமையின் சிகரமான பூ மாதா நமக்கு உணர்த்திய பாடம்தான் தீபாவளியின் உட்பொருள்.

மகன் நரகாசுரன் மறைந்தான் என்பது வருத்தத்தைத் தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல், மற்றவர்கள் சந்தோஷமாக பண் டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் மண்மாதா.

நாம் வருந்தினாலும் பிறரை வருந்தச் செய்யக் கூடாது என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகை தீபாவளி.

தீபாவளியன்று தேய்த்துக் குளிக்க வேண்டிய எண்ணெயை, முதல்நாளே சிறிது அரிசியும் கொஞ்சம் ஓமமும் சேர்த்து காய்ச்சி வைத்துவிட வேண்டும். (ஓமத்திற்குப் பதில் மிளகு சேர்ப்பவர்களும் உண்டு.)

புராண காரணம் எதுவும் இல்லை என்றாலும் அதிகாலையில் அதுவும் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதால் ஜ §ரம் போன்ற எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணெயைக் காய்ச்சியும், நீரை சூடுபடுத்தியும் குளிக்க வேண் டும் எனச் சொல்லி வைத்துள்ளனர்.
அதே சமயம் அரிசி மகாலக்ஷ்மியின் அம்சம். எனவே அதனை எண்ணெயில் இட்டு காய்ச்சும் வழக்கம் வந்தது என்றும் சொல்வார்கள்.

ஆரோக்கியம், ஐஸ்வர்யம் இரண்டுமே முக்கியம்தானே. அதுதான் கங்காஸ்நானத்தின் தத்துவம்.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கிறோம் அல்லவா! அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியவர் ‘பாபர்’ என்கிறது வரலாறு.

பிற மதத்தவரிடம் வேற்றுமை பார்க்கக் கூடாது அவர்களது மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்ற நற்பண்பை விதைக்கிறது இது. (முகலாய மன்னரான அக்பர்கூட தீபாவளி கொண்டாடியதாக ‘அயினி அக்பரி’ என்னும் நூல் கூறுகிறது).

வெடித்தும் பூத்தும் மறைந்து போகின்றன பட்டாசுகளும் மத்தாப்புகளும். ஆனால் பார்க்கும் நம் மனமோ மகிழ்கிறது. ஜடப்பொருட்களான பட்டாசுகளும் மத்தாப்புகளும் கூட பிறர் மகிழ நாம் தியாகம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகி ன்றன.
இப்படி உயர்வான தத்துவங்களை உள்ளடக்கிய தீபாவளிப் பண்டிகையை, அதன் புனிதத்தையும் மேன்மையையும் உணர்ந்து கொண்டாடுவோம்.
பலகாரங்களை பரிமாறிக் கொள்வதோடு உள்ளத்து அன்பையும் மகிழ்வையும் பகிர்ந்து கொள்வோம். அப்புறம் என்ன?

என்றென்றும் தீபாவளிதான்... சந்தோஷம்தான்!

தீப லக்ஷ்மி

நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள்.
திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் திருமகள் மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்த அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.

அசுரர்கள் வருவதை உணர்ந்த மகா லக்ஷ்மி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள்.

தீப வடிவாக இருந்த ஜோதிலக்ஷ்மியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்கள் அசுரர்கள்.

திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பர்.
தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள் என்பது ஐதிகம்.

Comments

  1. நல்ல பதிவு.
    மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment