வினைகள் தீர்ப்பாள் ஸ்ரீவிசாலாட்சி!

கங்கையில் நீராடி, காசியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித் தால், நம் பாவங்கள் யாவும் அகலும்; புண்ணியங்கள் பெருகும் என்கின்றன புராணங்கள்!

தீபாவளித் திருநாளில் எல்லா நீர்நிலைகளிலும் கங்காதேவி உறைந்திருப்பாள். எனவேதான் அன்று, 'என்ன... கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று பரஸ்பரம் ஒருவருக்கொருவர், விசாரித்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிற வழக்கம் வந்தது! தீபாவளியில் கங்கா ஸ்நானம் மட்டுமல்ல, தெய்வ தரிசனமும் பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

தீபாவளியில் கங்கையில் குளித்த பலனோடு, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வரரைத் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றவர்கள், திருப்பூர் மக்கள்!

ஆமாம்... திருப்பூர் பழைய பேருந்து நிலையத் துக்கு அருகில் உள்ள பூ மார்க்கெட் வீதியில், மலர்களின் வாசத்துக்கு மத்தியில் கோயில்கொண்டு அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீவிசாலாட்சி.

மாசி மகா சிவராத்திரி, வைகாசியில் தேர்த் திருவிழா, ஆனியில் திருமஞ்சனம், புரட்டாசியில் நவராத்திரி விழா, மார்கழியில் திருவாதிரைப் பெரு விழா என வருடம் முழுவதும் விழாக்கள் விமரிசை யாகக் கொண்டாடப்படுகிற இந்த ஆலயத்தில், தீபாவளித் திருநாளின்போது எண்ணற்ற பக்தர்கள், குடும்பத்துடன் இங்கு வந்து, ஸ்ரீவிசாலாட்சியையும் ஸ்ரீவிஸ்வேஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

இந்தக் கோயிலில் உள்ள அம்பிகைக்கு இன்னுமொரு சிறப்பு... வருடம் முழுவதும் தினமும் ஒரு புத்தாடை அணிந்து காட்சி தருகிறாள் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள். தீபாவளித் திருநாளுடன் வருகிற கேதார கௌரி நோன்பு எனப்படும் மாங்கல்ய நோன்பு, இங்கே சிறப்புற அனுஷ்டிக்கப் படுகிறது என்கிறார் ஜெய்சங்கர் சிவம் குருக்கள்.

தீபாவளித் திருநாளில், காசிக்கு நிகரான திருப்பூர் ஸ்ரீவிசாலாட்சியையும் ஸ்ரீவிஸ்வேஸ்வரரையும் தரிசியுங்கள்; தீப மாய் ஒளிரட்டும் உங்கள் வாழ்க்கை!

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment