லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் ஆலயம்







உலகின் அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால்,ஏழு என்பீர்கள். ஆனால் உலகின் எட்டாவது அதிசயம் என்று மெச்சப்படுவது எது தெரியுமா?

அழகி டயானா, டோனி ப்ளேர் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் சமய வேறுபாடுகள் எதுவும் இன்றி வழிபட்ட கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

ஐரோப்பிய கண்டத்தில் இந்தியப் பாரம்பர்யத்தில் வந்த முதல் கோயில் எது?

கின்னஸ் புத்தகத்தில் இருமுறை இடம்பெற்ற முதல் அயல்நாட்டு இந்துக் கோயில் எது?

இவற்றுக்கெல்லாம் விடை காண,நாம் இங்கிருந்து மேற்கு நோக்கி உலகின் ஒரு பெருநகரத்திற்குச் செல் லப் போகிறோம்.

அதற்கு முன் ஒரு கேள்வி.

தேம்ஸ் நதி, மணிக்கூண்டுக் கோபுரம், வெஸ்ட்மினிஸ்டர் பாலம், பாதாளத் தொடர் வண்டி, டயானா, சமீப த்தில் நடந்த ராயல் திருமணம் இவற்றோடு தொடர்பு உடைய ஒரு நாட்டைச் சொல்லுங்கள்?

ஆம்... லண்டன் மாநகரத்திற்குதான் நாம் இப்போது செல்லப் போகிறோம்.
பெருநகரமான லண்டனில்தான் இருக்கிறது அந்த இந்துக்கோயில். அது, ஸ்வாமி நாராயண் மந்திர்.

கோயிலுக்குள் நுழையும் முன்,ஏன் ஸ்வாமி நாராயண் மந்திர் என்ற பெயர் வந்தது என்று பார்த்து விடலாமா?

ஸ்வாமி நாராயண் சம்பிரதாயம் என்பது பக்தி மார்க்க வழிபாட்டைச் சார்ந்தது. பகவான் ஸ்வாமி நாராயண் என்பவரால் டிசம்பர் 1801ல் தொடங்கப்பட்ட இந்து வழிபாட்டு முறை இது.

வைணவ வழியில் வந்த இவ்வழிபாட்டு முறை, கடவுளின் மேல் வைக்கும் தூய்மையான பக்தியே முக்தியை அடையும் வழி என போதிக்கிறது.



1781ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் பகவான் ஸ்வாமி நாராயண் பால்ய பருவத்தை அயோத் தியாவிலும் சப்பையா என்னும் கிராமத்திலும் கழித்தார். 11 வயதிலிருந்து இந்தியா முழுதும் இறைவனைத் தேடி அலைந்து, 18 வயதில் குஜராத் மாநிலத்தை வந்தடைந்தார். 21வது வயதிலேயே ஸ்வாமி நாராயண் சம்பிரதாயத்தை உருவாக்கினார். சதித் திட்டம், பலியிடுதல் ஆகிய மூட நம்பிக்கைகளை ஒழித்தார். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர். அவர் வழி வந்த பரமஹம்சர்களே இன்று வரை ஸ்வாமி நாராயண் சம்பிரதாயத்தின் குருமார்களாக இருக்கின்றனர்.

ஸ்வாமி நாராயண் திருக்கோயில்கள் இன்று உலகெங்கிலும் பரவி இந்து மதத்திற்குத் தனிச் சிறப்பை அளிக்கின்றன என்றால் அந்தப் பெருமை முழுக்க பகவான் ஸ்வாமி நாராயண் வழி வந்த ஆச்சார்ய பு ருஷர்களையே சாரும்.

பகவான் ஸ்வாமி நாராயண் கோயில்களே பக்தி மார்க்க வழிபாட்டுக்கு ஏற்றவை எனக் கருதினார். அதோடு கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டுமல்ல; ஏழை எளியோர்க்கு சேவை செய்யும் இடமாகவும், பக்திப் பாடல்கள், வேதங்கள் கற்கவும், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என நினைத்தார்.

பக்தி வழிபாட்டை வலியுறுத்தியதால் ஸ்வாமி நாராயண் கோயில்களில் இறைவனுடன் பக்தனையும் மூர்த் தியாகக் காணலாம்.

குஜராத் மாநிலத்தில்தான் முதன் முதலில் ஸ்வாமி நாராயண் கோயில்கள் பகவான் தலைமையில் கட்டப்ப ட்டது.

இறைவனை வழிபட கோயில் கட்டுங்கள் எனச் சொல்லி விட்டு பகவான் ஓய்வெடுக்கவில்லை. அவரே கற்களைச் சுமந்து உதவியிருக்கிறார். இம்மாதிரிப் பணிகள்தான் இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு, முக்தியடையும் வழி என பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இங்கே லண்டனில் “நேஸ்டன் டெம்பிள்” என்றே இக்கோயிலை அழைக்கிறார்கள்.

பணம், புகழ், பதவி, வெளிநாட்டு சுக வாழ்க்கை என்று எவ்வளவுதான் இருந்தாலும் தாய்நாட்டைவிட்டு அயல் நாட்டில் தொடர்ந்து வாழ நேர்கையில் ஒரு வித சலிப்பு ஏற்படும். அந்த மனதுக்கு இதமாக, நம் பாரம்பா¢யக் கோயில்கள் தரும் அமைதியை நினைத்தே நாங்கள் இங்கு விடா முயற்சியுடன் கோயில் கட்ட ஒத்துழைப்பு அளித்தோம் என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் லண்டன் வாழ் இந்திய பக்தர் ஒருவர்.

பிரமுக் ஸ்வரூப் யோகிஜி மஹராஜ் என்பவர் பகவான் ஸ்வாமி நாராயண் வழியில் வந்த நான்காவது குரு. 1970ல் தமது லண்டன் பயணத்தின் போது ஸ்வாமி நாராயண் கோயிலை இஷ்லிங்க்டன் என்னும் இடத்தில் சிறிதாகக் கட்டினார்.

அதனைத் தொடர்ந்து இங்கு ஒரு பெரிய இந்தியக் கோயிலை நிறுவ வேண்டும் என்றும் தன்னுடைய ஆவலைத் தெரிவித்தார். அதன்படியே யோகிராஜ் ஸ்வாமிகளின் வழி வந்த பிரமுக் ஸ்வாமி மஹராஜ் 1995ல் இக்கோயிலை கட்டி முடித்து தமது குருவின் கனவை நிறைவேற்றியிருக்கிறார்.

கோயிலின் பிரமாண்டத்தையும் கம்பீரத்தையும் பார்க்கும்போதே அங்கே நிகழ்த்தப்பட்டிருப்பது சாமான்ய வேலை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. ஒவ்வொரு கல்லிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள். அனை த்தும் இந்தியாவில் சிற்பிகளால் வடிக்கப்பட்டு இங்கு வந்திருக்கின்றன என நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது!

இரும்பு, ஸ்டீல் கம்பிகள் அறவே தவிர்த்து கட்டப்பட்ட கோயில் என்பதும் கூடுதல் சிறப்பு.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சார்ந்த கைதேர்ந்த சிற்பிகள் இரவு பகலாக கற்களில் வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள். பின்னர் கடல் வழியே லண்டன் வந்தடைந்திருக்கின்றன.

மொத்தமாக 26,300கற்கள் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு லண்டன் வந்தடைந்திருக்கின்றன.

கோயிலைச் சுற்றிலும் பச்சைப் பசேல் புல்வெளி. எங்கும் அப்பழுக்கற்ற சுத்தம்.

கோயிலின் ஒவ்வொரு அடியிலும் அழகிய வேலைப்பாடுகள் கண்களை நிறைக்கிறது.

2828 டன் பல்கோ¢ய லைம்ஸ்டோன் மற்றும் 2000 டன் இத்தாலிய மார்பிள் கற்களால் ஆன இக்கோயிலைக் கட்ட சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் செலவானதாம். பிரிட்டனின் முதல் இந்துக் கோயில் என்ற சிறப்பும் இக்கோயிலையே சேரும்.கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுமே பளிங்குக் கற்களில் வட நாட்டு பாணியில் செதுக்கப்பட்டவை.
நிகாந்த வர்னி, பகத்ஜி மஹராஜ், சாஷ்த்ரிஜி மஹராஜ், யோகிஜி மஹராஜ், பிரமுக் ஸ்வாமி மஹராஜ் என்று ஸ்வாமி நாராயண் வழிபாட்டைச் சார்ந்த எல்லா ஆச்சார்ய மகானுபாவர்களுக்குமே தனித் தனி சன் னதிகள்.அவர்களை நேரில் பார்ப்பதைப் போலவே மிக அழகிய வேலைப்பாடு.

கணபதி, ராமர், சீதை, உமையுடன் சிவன், அனுமன் ஆகிய கடவுளருக்கும் தனித் தனி சன்னதிகள். உடைகள்,நகைகள் கூட வித்தியாசமாக இருக்கின்றன.ஸ்வாமி நாராயண் வழி வந்த சாதுக்களே கோயில் பூஜைகளைச் செய்கின்றனர்.

பொழுது விடியும் முன்னரே மங்கள ஆரத்தி தொடங்கி விடுகிறது. பின்னர் கோயில் நடை சாற்றப்பட்டு சங்கர் ஆரத்தி என்னும் வைபவத்திற்கு 9 மணிக்குத் திறக்கப்படுகின்றது.

ராஜபோக் ஆரத்தி எனப்படும் பல வகையான தீபாராதனைகளை கண்டிப்பாக நாம் தவற விடக்கூடாது. பகல் 11.45 மணியிலிருந்து 12.15 வரை நடக்கும் இந்த ஆரத்தி உள்ளத்திற்கும் மனதிற்கும் மிக அமைதியான அனுபவத்தினை நிச்சயம் கொடுக்கும்.

மாலையில் ஏழு மணிக்கு சந்தியா ஆரத்தி நடைபெறும். பின்னர் இரவு சயன ஆரத்தி வேளையில் மூர் த்திகளுக்கு இரவு உடை அணிவித்து கடவுளரைத் தூங்கச் செய்வதோடு நித்தியப் பணிகள் கோயிலில் முடிவடைகின்றன.

மேற்கு துருவத்தில் மார்பிள் கற்களால் ஆன பெரிய கோயில் என்பதாலும் ‘அன்னகூட்’ என்ற 1247 சைவ வகை உணவுகளை கடவுளருக்கு பிரமாண்டப் படையலாக நைவேத்தியம் செய்யப்படும் கோயில் என் பதாலும் லண்டனின் ஸ்வாமி நாராயண் கோயில் இருமுறை கின்னஸில் இடம் பெற்றிருக்கிறது.

இந்து வழிபாட்டுத் தலமாக மட்டும் அல்லாமல் பல நாட்டு மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது இக்கோயில். மற்ற மதத்தைச் சார்ந்தோர் நம் கலாசாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் புகை பிடிக்கக் கூடாது, உணவருந்தக் கூடாது, காமரா, செல்போன் கொண்டு செல்லக் கூடாது, கோயில் சுவர்களைத் தொட்டுப் பார்க்கக் கூடாது என்பது முதல் ஏகப்பட்ட விதிமுறைகள். அவற்றையெல் லாம் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டு அவ்வாறே செயல்படும் வெளிநாட்டினரை மெச்சத்தான் வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் தாமாகவே வீல்சேரை செலுத்திக் கொண்டு செல்லும் வகையில் ‘ராம்ப்’ மற்றும் லிஃப்ட் வசதி. கழிப்பிடம் கூட அவர்களுக்கு வசதியாக உள்ளது. வீல் சேர் அவர்களே தந்து விடுகின் றனர்.அதனைக் காண்கையில் நம்மூரிலும் இப்படி இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு நன்றாக தரிசனம் கிடைக்கும் என்ற ஆதங்கம் தோன்றுகிறது.

கோயில் பார்க்கிங் இடத்தை ஒட்டி பெரிய இந்திய உணவகம் தென்படுகிறது.உள்ளே நுழைந்தால் விதவிதமான இந்திய வகை உணவுகள். இந்தியாவின் ஒரு உணவைக் கூட விட்டு வைக்கவில்லை. அத் தனை பதார்த்தங்களையும் அங்கேயே சமைத்து விற்பனை செய்கின்றனர்.

சனிக்கிழமை தோறும் நடைபெறும் சத்சங்குகளில் 14 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு பிரிவிலும், 15 முதல் 23 வயது வரை, 24 முதல் 40 வரை, 41 வயதுக்கு மேல் மற்றொரு பிரிவாகவும் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கோயில் நிர்வாகத்தினரால் குழந்தைகளுக்குக் கல்வியும் வழங்கப்படுகிறது. இந்து மதக் கலாசாரத்தையும் சேர்த்து சொல்லிக் கொடுக்கும் இப்பள்ளி லண்டனில் மிகவும் பிரபலம்.

எல்லா ஸ்வாமி நாராயண் கோயில்களுமே பாப்ஸ் என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் விரிவாக்கம் ‘போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’. 90 வயதான பிரமுக் ஸ்வாமி மஹராஜின் தலைமையிலான இத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமே பல பக்திமார்க்க சன் மார்க்கக் கோயில்கள் உலகெங்கிலும் உருவாகி அருள் பொழிகின்றன.

எங்கு எப்பெயரில் இருந்தாலும் பக்தரைத் தேடிவந்து அருள்பவை நம் தெய்வங்கள் என்பது நம்பிக்கை. அதற்கு லண்டன் சுவாமிநாராயணன் ஆலய தெய்வங்களும் விலக்கு அல்ல.



எப்படிப் போகலாம் லண்டன் ஸ்வாமி நாராயண் கோயிலுக்கு?

ஸ்டோன்ப்ட்ஜ் பார்க்கிங்க் ஸ்டேஷனிலிருந்து ஸ்டாப்பியில் பஸ் பிடித்து ப்ரன்ஃபீல்ட் ரோடில் இறங்கிக் கொள்ளலாம். கோயில் எதிரிலேயே பேருந்து நிற்கும்.

கோயில் நேரம்:வாரத்தின் எல்லா நாட்களிலுமே கோயில் திறந்து இருக்கும்.

தினமும் காலை ஒன்பது மணி முதல் இரவு 6 மணி வரை கோயில் திறந்தே இருக்கும். காலை 11 மணி முத 11:45 வரை “ராஜ்போக் தால்” என்னும் நைவேத்தியம் செய்யப்படுவதால் பார்வையாளர்களுக்கு மூல மூர்த்திகளைப் பார்க்க அனுமதி இல்லை.

Comments