துர்க்காஷ்டமி

துன்பங்களும், துயரங்களும் விலக அன்னை துர்க்கையைத் துதிப்பது நல்லது என்கின்றன புராணங்கள்.

அதிலும் நவராத்திரி நாட்களின் நடுவே வரும் அஷ்டமி நாளில் வழிபடுவது, பலமடங்கு நற்பலன் தரும் என்பது ஐதிகம். அதனாலேயே அந்த நாளை, துர்க்காஷ்டமி என்று சிறப்பித்துச் சொல்லியுள்ளனர்.

துர்க்கை தனிச் சிறப்பு பெற்றுத் திகழும் சில தலங்களைப் பற்றி இதோ தரப்பட்டிருக்கிறது.

அந்தந்த தலத்து துர்க்கையை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும், மனதார நினைத்துக் கும்பிடுங்கள். மங் களங்கள் யாவும் உங்களுக்குக் கிட்டச் செய்வாள் அந்த மகிஷமர்த்தினி.

கதிராமங்கலத்தில் ராகு துர்க்கை

இந்த துர்க்கை வனப்பகுதி யில் இருப்பதால் வன துர்க்கை என்றும், சாந்தமாக இருப் பதால் சாந்த துர்க்கை என்றும் அழைக்கப்படுகிறாள்.

இந்த வனதுர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது, அரிதான காட்சி. இவள் தினமும் காசி சென்று வருவ தாக ஐதிகம்.

எனவே கோபுரத்தில் துர்க்கையின் மேற்புறம் சதுர வடிவ துவாரம் அமைத்துள்ளனர். இவளை ஆகாச துர்க்கை என்றும் அழைப்பார் கள். இந்த துர்க்கையை முன் புறம் பார்த்தால் அம்மன் உருவமாகவும், பின்புறம் சர்ப்பம் படம் எடுத்திருப்பது போன்றும் தெரிவது ஓர் அதிசயம்!

அம்பாளுக்கு அர்ச்சனை செய்யும்போது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துகள் வெளிப்படுவது மற்றோர் அதிசயம்! இங்கு ராகுகால வழிபாடு மிகவும் சிறப்பாகப் பின்பற்றப்படுகிறது. இவ்வாலயம் கும்பகோணத்தி லிருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் வடமேற்கில் 6 கி.மீ.யில் உள்ளது.




பட்டுக்கோட்டை பாலத்தளி துர்க்கையம்மன்

இந்த ஆலயத்தில் துர்க்கை தான் மூலவர். மேற்கு நோக்கிய இந்த விஷ்ணு துர்க்கை அபரிமிதமான சக்தி படைத் தவள். இந்த சாந்த துர்க்கைக்கு நான்கு கரங்கள் உண்டு. உளி படாத வடிவினள் (சுயம்பு) ஆனதால் கைகள் சிலையுடன் இணைந்தே காணப்படும். அலங்காரம் செய்தபின் வலதுகரம் மட்டும் தெரியும் இவள் நவகிரக தோஷத்தை நீக்குபவள்.

இந்த அதிசய சுயம்பு விஷ்ணு துர்க்கையின் பாதத்தின் கீழ் சயன துர்க்கை அருளுகிறார். இப்படி ஒரே கர்ப்பகிரகத்தில் இரு துர்க்கைகள் உள்ளது வேறு எந்த ஆலயத்திலும் இல்லையாம். இரு கோலங்களில் காட்சி தரும் இவளை வணங்கினால் நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும்.

திருச்சக்கரப்பள்ளியில் சிவதுர்க்கை

அல்லியம் கோதை சமேத பசுபதிநாதர் ஆலயத்தென்புறச் சுவரில் வடக்கு முகமாக நின்ற கோலத்தில் வலதுகரத்தில் திரி சூலத்துடன் காட்சி தருகிறாள், சிவதுர்க்கை. இவளை குங்கிலிய தூபம் இட்டு வணங்கினால் யமபயம் நீங்கி தீர்க்காயுள் கிடைக்கும். பாபநாசம் ஐயன் பேட்டையருகே இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஆடுதுறை விஷ்ணு துர்க்கை

ஆடுதுறையில் அஷ்ட புஜங்களுடன் கையில் சங்கு சக்கரத்துடன் உள்ளாள் விஷ்ணு துர்க்கை. ராகுகால பூஜை இங்கும் விசேஷம். இவ்வன்னைக்கு பாலாபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாகும் அதிசயம் காணலாம்.

ஒரே ஆலயத்தில் ஒன்பது துர்க்கைகள்

சென்னை மேற்கு மாம்பலம் வாழைத்தோப்புப் பகுதியில் உள்ள இளங்காளியம்மன் ஆலயத்தில் நவதுர்க்கையரின் சுதை வடிவங்களை நவகோண வடிவ மண்டபத்தில் எண் திசை நோக்கியபடியும் மேலே ஒன்றுமாக அமைத்துள்ளனர். கீழே பத்ம பீடத்தில் நவதுர்க்கையின் வரிவடிவம் செதுக்கப்பட்டுள்ளது.

Comments