சித்தர் வழியில்…., சிவசாமி சித்தர்(ctd)

நாளை நடக்கப்போவதை இன்றே சொல்லும் தீட்சண்யமும் சித்தரிடம் இருந்தது. ஒருமுறை அவரது சிஷ்யர் இராமலிங்கத்தின் வீட்டில் திருடு நடக்க இருப்பது,பெண்கள் மானபங்கப்படுவதாக இருப்பதும், இராலிங்கத்தை கரு நாகம் தீண்ட இருப்பதையும் முன் கூட்டியே சொல்லிவர் அந்த குறிப்பிட்ட நாளில் அப்படியொரு திருடு நடக்க இருந்தபோது திருடனை வீட்டின் மேலேயே சுய நினைவில்லாமல் உட்கார வைத்து திருட்டைத் தடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சித்தர் சொன்னது போலவே குறிப்பிட்ட நாளில் பட்டப்பகலில் இராமலிங்கத்தின் கடையின் வாயில்படியிலிருந்து ஒரு கருநாகம் கீழே விழுந்து அவர் கால்களைச் சுற்றிக் கொண்டது .அவர் தனது சித்தர் பகவானை சுற்றிக்கொண்டது.அவர் தந்து சித்தர் குருவை நினைந்து வணங்க,…அந்த கருநாகம் தரையில் கொத்திவிட்டு அவரது காலைவிட்டு நகர்ந்து… மறைந்திருக்கிறது.

“சித்தர் சொன்னது சொன்ன மாதிரியே நடக்கும். விதியை மாத்த முடியாது. ஆனால் அந்த விதியை மாற்ற முடியாது. ஆனால், அந்த விதியிலிருந்து காப்பாறுவதுதான் இறைத்தன்மை என்று சித்தர் சொல்வார்.அப்படி விதியினால பயங்கர நோய்க்கு ஆளானவங்களை சித்தர் தன்னோட இறையருளால் குணப்படுத்துவார்” என்கிறார் இராமலிங்கள்.

செங்கல்பட்டைச் சேர்ந்த ராணி என்கிற பெண் கருமேகம் என்கிற நோயால் உடல முழுவதும் செதிள் போன்ற படையால் அவதிப்பட்டு வந்தார். சித்தரைப் பற்றி அறிந்து காஞ்சிபுரம் வந்திருக்கிறாஅர். சித்தரைத் தேடி எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தவர், ஏகாம்பரநாதர் கோயில் குளக்கரையருகே பார்த்தும் முகம் மலர்ச்சியாய் சித்தரின் அருகே சென்றிருக்கிறார். தனது அமானுஷ்ய சக்தியால் அப்பெண்ணின் பிரச்சனையை உணர்ந்து கொண்ட சித்தர்.., சட்டென்று யாரும் எதிர்பாராவிதமாக அப்பெண்ணைத் கட்டி அணைத்து உருண்டிருக்கிறார்.

தூரத்திலிருந்தவர்கள் ‘என்ன இது சித்தருக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா? என்று பார்க்க…., சற்று தூரம் உருண்டு விட்டு சித்தர் அப்பெண்ணை விட்டு எழுந்திருக்க…., அப்பெண் அதிர்ச்சியான நிலையில் தன் உடலைப் பார்க்க, இப்போது அவர் உடலில் இருந்த செதில் போன்ற படையெல்லாம் கீழே உதிர்ந்துவிட்டு சாதாரண உடல் போல இருந்தது. அப்பெண் ஆச்சரியமாய் சித்தரை கரம் கூப்ப சுற்றியிருந்தவர்களும் சித்தரை வணங்கினர்.

இதுபோல் பைத்தியம் பிடித்த பெண்னை ஒரு நொடியில் தெளிய வைத்தது, புற்று நோயாளியை அதிசயிக்க வைக்கும் விதத்தில் குணப்படுத்தியது, பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்த பெண்ணுக்கு நல்ல வரன் அமைய அருளியது என எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

1989–ம் ஆண்டு சமாதி நிலையடைந்த சித்தரின் சமாதி ஆஸ்ரமம் பெரிய காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் அருகே கங்கையம்மன் கோயில் தெருவில் இருக்கிறது. சித்தரின் ஆஸ்தான சீடரான கெளரீசன்ஆஸ்ரமத்தைப் பராமரித்து வருகிறார். “சித்தர் காலையில் ஏகாம்பரநாதர் கோயிலிருந்து புறப்பட்டு ரிக்‌ஷாவில் கோரிகைங்கிற இடத்துக்குப் போவார். அங்கிருந்து பதினாறுகால் மண்டபத்தில் உட்கார்ந்து விட்டு, மறுபடியும் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு வருவார். வழியில் அவரை நெருங்கி தங்களோட பிரச்சனைகளைச் சொல்லி அவருடைய அபூர்வ சக்தியால் நிறையப் பேர் பயனடைந்துள்ளார்.

நானே கூட மஞ்சல் காமாலை நோய் முற்றி டாக்டர்களால் கைவிட்டப்பட்ட நிலையில் சித்தரால் காப்பாற்றப் பட்டேன். என் மகன் மூர்த்தி முளையில் ஏற்பட்ட பாதிப்பால் பேச முடியாமல் போய்விட்டான். அவனையும் பேச வைத்தார். இந்த மகா சித்தர்தான் இப்போதும் அவர் சமாதியில் உயிரோடுதான் இருக்கிறார். சென்ற மாதம் பைபாஸ் சர்ஜரி என உறுதி செய்யப்பட்டு சிகிச்சிகை முன்பு இங்கே வந்து சித்தரிடம் வேண்டிக்கிட்டுப் போன் நோயாளிக்கு இதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்களே சொல்லும் விதமான அதிசயத்தை நடத்தினார்’’ என்கிறார் கெளரீசன்.
--------------------------------------------------------------------------------------------------------- நிறைவு ------------------------------------------------------------------
[நன்றி: சித்தர்கள் பூமி,தமிழ்நாட்டு சித்தர்கள்]

Comments