காஞ்சிபுரம் காமாட்சி

நகரங்களில் தனி சிறந்தது காஞ்சி. இங்கே அருளாட்சி புரிவது அன்னை காமாட்சி. கயல்கண்ணி காமாட்சி வீற்றிருக்கும் திருக்கோயில் தலையாய சக்தி பீடங்களில் ஒன்று இத்திருக்கோயில் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் பெருமை கொண்டது என்பது கூடுதல் சிறப்பு.


பின்னணியில் பிரமிக்க வைக்கும் வரலாறுகள் பல.
பிரம்மதேவன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்துபட்ட அசுரர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரங்களை அள்ளிதர ஆசை கொண்டான்.அருந்தவம் இயற்றி அளப்பரிய சக்தியை அடையும் நோக்கில் காஞ்சியை வந்தடைந்தான்.
நான்முகன்னின் தவத்துக்கு காவல் இருக்க மதுகைடபர் எனும் இரு அரக்கர்களைத் தோற்று
வித்தான்.bநாராயணன். கொடிய அரக்கர் குலம் மீண்டும் உயிர் பெற்று விட்டால் அண்டத்துகே அபாயம் என்று கவலை கொண்டாள் பராசக்தி.
தனது மாயையினால் மஹாவிஷ்ணு வடிவமேற்றாள்.மதுகைடபர் அவளைத் திருமால் என

எண்ணிப் பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவினாள்.அது மதுகைடபரின் சிரங்களை அறுத்தது.
பிரம்மதேவனின் தவம் கலைந்தது.அவன் கோபம் கண்டு,மஹாவிஷ்ணுவின் தோற்றத்தில் இருந்த பராசக்தி பயந்து ஓடுவதைப் போல் தென்திசையில் ஓடினாள்.பிரம்மதேவன் அந்த விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மா ஸ்திரத்தை பிரயோகிக்க முயன்றான்.விஷ்ணுமூர்த்தியாக இருந்த தேவி,
,''பிரம்ம தேவனே, உன் காவாளிகளின் உயிர்களைக் கொய்தவர் உருத்திர மூர்த்தியே! உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார்'' என்று இரு கரங்களையும் எதிரில் நீட்டிக் கூவினாள்.
பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள், பராசக்தி உருத்திரமூர்த்தியின் வடிவம் தாங்கி வடக்குத் திசையில் ஓடினாள். பிரம்மன் ஓடோடிச் சென்று உருத்திர மூர்த்தியின் நெருங்கினான். உருத்திர மூர்த்தி வடிவம்,பிரம்மனின் தவம் கலைந்தற்குத் தானும் காரணம்ல்ல என்று பகர்ந்தது. பிரம்மன் குழம்பினான்.
உருத்திர மூர்த்தியாகிய பராசக்தி அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்.பிரம்மன் மேலும் திகைத்து விஷ்ணுமூர்த்தி இருந்த திசை பக்கம் திரும்ப, அன்னை அந்த வடிவையும் மறைந்து போகச் செய்தாள். அந்த நாள் முதல் வடக்கு திசையில் காட்சி தந்த சிவ வடிவானது ஆம்பர விருசா(மாமரம்) ரூபமாய் மாறி ஏகாம்பரம் ஆனது. அங்கே ஏகாம்பரநாதனுக்கு ஒரு கோயில் எழுந்தது.தென் திசையில் காட்சி தந்த திருமால் வடிவு வரதராஜ மூர்த்தியாகக் கோயில் கொண்டது.இந்த இரண்டுருவாகக் காட்சி தந்த பராசக்தியோ இருவருக்கும் இடையில் காமாட்சி

தேவி என்ற திருநாமத்துடன் பிரகாசிக்கத் தொடங்கினாள்.
இன்னொரு புறம்.பந்தகாசுரன் என்ற அரக்கன் பத்தாயிரம் யானை பலம் கொண்டிருந்தான்.'ஐந்து வயதுப்பெண் குழந்தையால் மட்டுமே என் உயிர் போக வேண்டும்'' என்று ஈசனிடம் வித்தியாச வரத்தையும் பெற்றிருந்தான்.அவனால் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தபட்ட முனிவர்கள், தேவர்கள் மீது, ஈஸ்வரன் கருணை கொண்டான். சில உத்தரவுகள் இட்டான்.ஆண்டவன் பணித்தபடி தேவர்கள் கயிலை அருகிலிருந்த கோமுகத்தில் ஒரு சுரங்கப் பாதையில் ஒளிந்தனர்.அந்தப் பாதை காஞ்சியில் வந்து முடிவடைந்தது.
அந்த இடத்தில், ஒரு மண்டபம்.அதன் பீடத்தில் அமர்ந்திருந்தாள்,ஓர் அன்னை.அவர்கள் பார்வை பட்டதும்,மறைந்தாள்.உருவம் அருவம் ஆன போதிலும் கூட,கண்ணில் கண்ட உருவத்தை

தேவர்கள் நெஞ்சில் இருத்தி வணங்கினர்.பந்தகாசுரன் மாயமான தேவர்களையும் முனிவர்களையும் தேடித்தேடிக் களைத்தாள்.உரிய நேரத்தில், அன்னை ஐந்து வயது பாலகியாக உருவெடுத்தாள்.பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு காலையும், மார்பில் ஒரு பாதத்தையும் பதித்தாள்.பந்தகாரன் பார்க்கையில்,அப்பெண் குழந்தை, பதினெட்டு கரங்களும் அவற்றில் பயங்கர ஆயுதங்களையும்கொண்ட பைரவியாய் மாறினாள். பந்தகாரனை வதம் செய்தாள் தேவர் முதலானோரிடம் அந்த ஐந்து வயதுப் பாலகி உத்தரவிட்டாள்.
''அரக்கனின் உடலைப் புதைந்து, அதன் மேல் ஒரு வெற்றி கம்பம் நடுங்கள்.சுரங்க மண்டபத்துக்கு

நேர் மேலே இருபத்து நான்கு காயத்ரி மந்திரங்களே இருபத்து நான்கு தூண்களாக விளங்கும் வண்ணம் ஒரு மண்டபம் கட்டுங்கள். எனக்கொரு விக்கிரம் செய்து மையத்தில் ஒரு மாணிக்க சிம்மாசனத்தில் அமர்த்துங்கள். வெளியில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.விடிந்தவுடன் நான் யார் என்பது உங்களுக்குத் தெரியும்

Comments