கடுவெளி சித்தர்

சித்தர் முனியாண்டி ஆத்ம சக்தியை, ஆன்ம சக்தியை உணரும் சக்தியோடு… தன்னை நாடிவரும் அன்பர்களின் வியாதிகளைத் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தியிருக்கிறார். அவர் நிகழ்த்திய
அற்புதங்களை அவரது சீடர் ஓய்வு பெற்ற டெப்டி கலெக்டர் கொ.வே. விஸ்வநாதன் கூறுகிறார்.
ஸ்ரீ முனியாண்டி சித்தர் ஒரு மகான். அவரால் நல்ல வாழ்க்கையும், நோய்களிலிருந்து

விடுதலை அடைந்தவர்கள் ஏராளம். அதில் நானும் ஒருவன்.

ஒருமுறை நான் சேடப்பட்டி வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அது ஒரு

பின் தங்கிய வட்டமாக இருந்தது. அந்த சூழலில் ஐந்து மைல் நீளமுள்ள குண்டும், குழியாகவும் சின்ன கட்டளை சாலை இருந்தது. இதனால் மக்கள் மறியலில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அந்த சாலை சப்தல மான்ய திட்டத்தின் கீழ் எடுத்து உடனே சாலை சீர் செய்யும்படி சொன்னார்.

உடனே நான் பதிவு செய்ய ஒப்பந்தக்காரரிடம் அப்பணியையை ஒப்படைந்தேன். வேலையும் ஆரம்பித்தது.

அந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அங்கே வந்திருக்கிறார். நான் அங்கு இல்லை. முனியாண்டி

சித்தர் சுவாமியை தரிசிக்க சென்றிருந்தேன். காலையில் ஜல்லி மட்டுமே போட்டப்பட்டு அப்போதுதான் வேலை ஆரம்பித்திருந்தது.

அவசர கதியில் முடிக்க சொன்ன வேலையை மெத்தனமாக செய்கிறேன் என கலெக்டர் என்

மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். நான் அங்கு சென்ற போது ஒப்பந்தக்காரர் இந்த தகவலை சொல்லி விடிவதற்குள் வேலை முடிந்திருக்க வேண்டும், அப்போதுதான் மந்திரியை இந்த வழியாக அழைத்து செல்ல முடியும்… என்று கலெக்டர்

சொன்னதாக கூறினார்.

அது ஒரு பொட்டல் வெளி, கும்மிருட்டு நேரம்.. எப்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை அமைக்க முடியும்? அந்த நேரத்தில் அங்கே வேலை பார்த்த ஒரு இளைஞனுக்கு அடிபட்டு அவனை மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டிய சூழ்நிலை… அவ்வளவு தான்

நாம் மெமோ வாங்க வேண்டியதுதான்…, மானம் போகப்போகிறது என்று வேதனைப்பட்ட போது

என் காதில் முனியாண்டி சித்தர் “கவலைப்படாதே நான் பார்த்துக்கறேன்” என்று சொல்வது

போல் கேட்க அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன். விடிந்த போது என் முன்னே கார் ஒன்று

வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய கலெக்டரும், மந்திரியும் பிரமாதமாக சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்து விட்டீர்கள் நன்றி எனப் பாராட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை! இது எப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நேர்த்தியாக தார்

சாலை அமைந்தது எப்படி என வியந்தேன். எல்லாம் அந்த சித்தரின் மகிமை என்றறிந்து

அவரிடம் ஓடிச் சென்று நன்றி சொன்னேன்.

அதேபோல் ஒருநால் நான் முனியாண்டி சித்தரை தரிசிக்க சென்றிருந்த போது “சதுரகிரிக்கு போகமாமா? என்று கேட்டார். அதற்கு நான் “ சாமி இப்போழுதே இருட்டிவிட்டது.இங்கிருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலையடிவாரம்

சென்று அங்கிருந்து மலைக்கு செல்ல நேரமாகிவிடும். இங்கிருந்து எப்படியும் எழுபது கிலோ

மீட்டர் தூரமிருக்கும். அங்கிருந்து நாலாயிரம் அடி உயரத்திற்கு மலை ஏறிச்செல்ல வேண்டும்? “ என்று நான் சொல்லிக்கொண்டே இருக்க.., சித்தர் என்னைப்பார்த்து அதற்கு நீங்களே ஏன் கவலைப்படுகிறீகள். நான் உங்களை உடனே அழைத்துச் செல்கிறேன் என்றார். கண்களை ஒரு
நொடி மூடித்திறங்கள் என்றார். நானும் கண்களை மூடித்திறந்தேன். நாங்கள் இருவரும் சதுரகிரி
மலை மீது இருந்தோம்.

ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் என் உடல் சிலிர்க்க.. நான் சித்தரை பார்த்தேன்.அவர் மெல்ல சிரித்துக்கொண்டே… “என்ன சதுரகிரியை பார்த்து பார்த்திட்டீர்களா” என்று கேட்டார். நான் அவர் கையைப் பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். மறுவினாடி நாங்கள் அங்கிருந்து மீண்டும்
கே.ரெங்கபாலையம் வந்தடைந்தோம்.

இந்த அற்புதம் மட்டுமல்ல இதுபோல் நிறைய அனுபவம். ஒருநாள் சித்தர் என்னை ஒரு மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.அது இரவு வேளை. சித்தர் என்னைப் பார்த்து,” உங்களுக்கு பயமாக இருக்கிறதா?” என்று கேட்டார். உடனே நான் “நீங்கள் என்னுடன் இருக்கும் போது எனக்கென்ன பயம்?” என்றேன்.

சித்தர் முனியாண்டி உடனே மயானத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். சிறிது நேரத்தில்
அவரது உடலிருந்து கை,கால்,தலை எல்லாம் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் விழ..

எனக்குள் ஆச்சரியம் அதிகமானது. இது எப்படி? உயிருள்ள ஒரு மனிதரின் உடல் பாகங்கள்

தானே உதிர்வது போல் கீழே பிரிந்து விழுமா? என்று யோசித்தேன்.அதற்குள் மீண்டும் அவரது

உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக ஒன்று சேர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சித்தர் முழூ

உருவமாகி தியான நிலையிருந்து கண் திறந்தார். என்னை பார்த்து புன்னகைத்தவாறு...,
“ என்னை வேடிக்கை பார்த்தீர்களா? ’’ என்று கேட்டார்.

எவ்வளவு மனோ தைரியம் உள்ளவரென்றாலும் மயானத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படி

ஒருகாட்சியை பார்த்தால் ஆடிப்போவார்கள். ஆனால் எனக்குள் எந்த பயமோ, அச்சமோ

இல்லாமல் சித்தரின் சித்து வேலையை பார்க்க முடிந்தது.

சித்தர் முனியாண்டி மிகவும் சக்தி வாய்ந்தவர்.அவர் உடல் பாகங்கள் பிரிந்து சேருவதைப்

போலவே அவர் உடல் அமைப்பு மினுமினுப்பான நிலையில் இருக்கும். ஒரு சொட்டு தண்ணீர்

கூட அவர் உடல் மீது நிற்காது.அவர் கிணற்று நீரில் குதித்து மேலே வந்தால் அவர் உடலில்

ஒரு சிறு துளி நீரைக்கூட பார்க்க முடியாது. தலைமுடி உலர்ந்தது போலவே இருக்கும்.

சித்தர் முனியாண்டிக்கு மூலிகைகளைப் பற்றி இரகசியமும் தெரியும். காசநோய், புற்றுநோர்,

தீராத வயிற்று வலி என பல நோயாளிகளுக்கு கண்ணில் படும் மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கியிருக்கிறார். மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமையை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார். இது போல் தன்னை நாடிவரும் அன்பர்களை எப்போதும் கைவிடாமல் காப்பாற்றுவார்.

எனது வாழ்க்கையில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ”ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் பள்ளத்தில் உருண்டு விழ… எங்களுக்கு ஒரு சிறு அடி,காயம்

இல்லாமல் காப்பாற்றியது சித்தர் முனியாண்டிதான் “ என்று பெருமிதாய் கூறுகிறார் டெப்டி

கலெக்டர் கொ.வெ. விஸ்வநாதன்.

சித்தர் முனியாண்டி இவரைப் போன்றஏ பலருக்கும் பலவித அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
1989 –ம் ஆண்டு சமாதி நிலை அடைந்த சித்தரின் சமாதி கே. ரெங்கபாளைத்தில் அவரது

நிலத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதிக்கு சென்று மனதார தொழுதால் நினைத்தது

நடக்கும் என்கிறார்கள் அவரின் பக்தர்கள்.

Comments

  1. எல்லாம் அந்த சித்தரின் மகிமை

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நிறைய தமிழில் எழுதுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment