சித்தர் வழியில்…, குருதேவ சித்தர் (தொடர்ச்சி)

அன்னையிலிருந்து இவ ஒரு மாதிரி இருக்கா.. ஒரு மாசமா காய்ச்சல் வேற. பெரிய பெரிய

ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட கூட்டிக்கிட்டு போனோம். அவளுக்கு காய்ச்சல் குணமாகலை.

தானாக பேசறதும் சரியாகலை. நீங்கதான் ஐயா என் புள்ளையைக் காப்பாத்தணும்” என்று

கண்ணீரோடு சொல்லி முடிக்க, சித்தர் கண்மூடி சிறிது நேரம் தியானித்து விட்டு, மெல்ல

எழுந்தார். ஒரு கூரிய கம்பியோடு, பாறையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் சம்பூரணத்தை

நெருங்கினார்.

சித்தர் தனது சீடரிடம் சைகை காட்டிவிட்டு, மெல்ல அந்தப் பெண்ணின் அருகே அமர்ந்து,
அவள் இடுப்புப் பகுதியிலிருந்து மெல்லத் தடவி விட்டுக்கொண்டே வந்தார். அந்த பெண்

கூச்ச உணர்வோடு நெளிய, மெல்ல தோள்பட்டையைக் கடந்து, கழுத்துக்கும் முதுகுப்

பகுதிக்கும் இடையிலான பகுதிக்கு வந்தார். சட்டென்று அவருக்குள் ஏதோ உணர்ந்த

அவரிடமிருந்த கூரிய கம்பியை கழுத்துக்குக் கீழே இருந்து இடைவெளிப் பகுதியில்

சூரீர் என குத்தியெடுத்தார்.

பலமான வலி உணர்ந்து சம்பூரணம் அலறினாள். சித்தர் அவள் கழுத்தை மேல் நோக்கிப்
பிடித்தவாறு இரத்தம் கசியும் இடத்தில் அழுத்தி வர உள்ளிருந்து மூன்று அங்குல

புழுவொன்று வெளியே வந்து வீழந்தது. இரத்தம் கசிந்த இடத்தில் மூலிகைக் களிம்பை

அழுத்தியவாறு அந்தப் பெண்ணைப் படுக்க வைத்துவிட்டு குடிலுக்குள் நுழைந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில்,தெளிவான உணர்வோடு சித்தரின் அருகே வந்த தெளிந்த

சம்பூரணம் நன்றியுணர்ச்சியுடன் வணங்கி, “ஐயா இத்தனை நாளா எனக்குள்ளிருந்த பாரமெல்லாம் இறங்கிவிட்டமாதிரி மனசு இருக்கிறது.. இனி எனக்கு இதுபோல் மீண்டும் ஏதாவது நிகழுமா?... என்றாள்.


“கண்டிப்பாக நிகழாது. இனி நீ தையரிமாக வாழலாம்” என்றவர், தாயைப்பார்த்து.
” உன் மகளுக்கு இனி எந்தப்பிரச்சனையும் இல்லை..ஆனால், உங்கள் ஊர் ஆற்றில்
மட்டும் அவளை இனி குளிக்க அனுப்பவேண்டாம்”... என்றார்.
“ஐயா,ஆற்றில் குளிப்பது தீமை உண்டாகுமா” என்று கேட்டாள்.
இனி தீமை உண்டாவது இருக்கட்டும். இப்போது உருவான தீமையே அந்த ஆற்றில்
குளித்ததால்தான் ஏற்பட்டது”
தாய் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
அவள் ஆற்றில் குளிக்கும் போது அவளின் மூக்கின் வழியாகவோ,வாயின் வழியாகவே,
மலத்துவாரத்தின் வழியாகவோ ஒரு ஊசிப் புழு ஒன்று மெல்ல மெல்ல உள்ளே சென்று
இரத்த நாளங்களில் ஊர்ந்து அவள் பின்னங்கழுத்து பகுதி வரைக்கும் வந்துவிட்டது.
இரத்த நாளத்தில் அடைப்பு உண்டாகி, அவளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த புழுவை அகற்றிவிட்டேன். இனி பிரச்சனை வராது இருக்க அந்த ஆற்றில்

குளிக்காமல் இருக்க வேண்டும். புரிந்ததா?

இவைகளை கேட்டுக்கொண்டிருந்த சம்பூரணம் “ஐயா, இந்த மாதிரி எதுவும் நடக்காமலிருக்க

ஏதாவது மூலிகை கொடுங்கனேன்” என்றாள்.


உடனே, சித்தர் அருகிலிருந்த பூஜைத் தட்டிலிருந்து ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து

அதன் மீது வேகமாக மஞ்சள் நூல் ஒன்றைச் சுற்ற ஆரம்பித்தார்.எலுமிச்சை பழத்தின்

அடையாளம் தெரியாத அளவுக்கு நூல் சுற்றப்பட்டவுடன் சம்பூரணத்தின் கையில் கொடுத்து,

“ இதை ஒரு மண் பானையில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டு மூடி விடு. விடியற்காலை

நீ எழுந்திருக்கும் போது இந்த எலுமிச்சை பழம் மறைந்து நூல் மட்டும் தண்ணீருக்கு மேலே

மிதந்தால் உன் ஆயுசுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.அந்த பானையைக் கொண்டு போய்

ஒரு கிணற்றில் வீசி விடு” என்றார்

மறுநாள் காலை ஆவலாய் சம்பூரணம் திறந்து பார்த்த போது கண்கள் படபடத்தன..எலுமிச்சை
பழம் இப்போது மறைந்து நூல் மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தது.

” இனியும் ஆயுள் முழுவதும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ” என்று பூரிப்போடு அந்த

மண் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றில் வீசி எறிந்தாள்.

அதே சமயம் சீடன் ஒருவன் பவ்யமாக சித்தரிடம் கேட்டான். “குருவே, அந்த எலுமிச்சம் பழம்

மறைந்திருக்குமா?”

கண்டிப்பாக மறைந்திருக்கும்.அதற்காக நான் எந்த சித்து வேலையும் செய்யவில்லை.சாதாரணமாக
விளையாட்டு போல் ஒரு காரியம் செய்தேன். கடலில் கிடைக்கும் ஒரு பொருள் மூலம் அந்த

எலுமிச்சை பழத்தை மறையச் செய்தேன்.

குரு சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சீடன், “ ஐயா, மிகக் கொடூரமான பேய், பிசாசுகள் கூட உங்கள் குடிலை நெருங்கப் பயப்படும் அளவுக்கு அமானுஷ்ய சக்தியில் சிறந்தவர் நீங்கள்.

அந்தப் பெண்ணை நம்பவைப்பதற்காக சிறு விளையாட்டைச் செய்தீர்களா? என்றான் நெகிழ்ச்சியாக.

’’ஆமாம்.., அந்த சிறுமிக்கு தற்போது என் அமானுஷ்ய சக்தியின் மூலம் பூரண குணம் கிடைத்து விட்டாலும், எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தது. அதற்காகத்தான் அந்தச் சிறு விளையாட்டு.
இப்போது அந்தப் பெண்ணுக்கு, இனி ஆயுளுக்கும் நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்ற
நம்பிக்கை வந்திருக்கும். அந்த நம்பிக்கைதான் ஓவ்வொரு மனிதனையும் வாழ வைக்கும்
உயிர்ச் சக்தி. அது மட்டுமில்லை.இந்தத் தகவல் ஏதாவது ஒரு காலத்தில் வெளிப்பட நேர்ந்து,
அது என்ன பொருள் என யாராவது உணர்ந்து விட்டால் அடுத்தது அது போன்ற வேறு யாராவது ஏமாற்று ஆசாமிகளிடமிருந்து அவர்கள் தப்பிப்பதற்கும் இது ஒரு முன் உதாரணமாகும்’’

Comments

Post a Comment