காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்(தொடர்ச்சி)

ஏகாம்பரநாதர் கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஒன்பதுநிலைகளுடன் எடுப்பான தோற்றம் கொண்டது.கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் நாம்காண்பது சரபேசர் மண்டபம்,நடராசர் நந்தவனம்,கம்பைத் தீர்த்தம்,ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை.பல்லவ கோபுர வாசலில் உள்ள விகட சக்கர விநாயகர் புராணங்களால் புகழப்படுவர்அவரே தல விநாயகம்.
இங்குள்ள துவஜஸ்தம்ப மண்டபத்தில் நந்தி,கொடி மரம், பலிபீடம் ஆகியவை உள்ளன.மண்டபத்தின் வெளியே ஒரு பெரிய நந்தி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.பவித்ரோத்ஸவமண்டபத்திற்கு எதிரில் 'பிரளய கால சக்தி' சந்நிதி உள்ளது.பிரளயம் ஏற்பட்டாலும்.காஞ்சியை அழியாது அரவணைத்துக் காக்கும் அருட்சக்தி இவளே. பிரளய காலசக்திக்கு நவராத்திரி நன்னாட்களில் பெரும் ஆராதனைகள்,அபிஷேகங்கள்,அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.
வலப்புறம் அமைந்துள்ள சபாநாயகர் மண்டபத்தில் ஏகாம்பரநாதனின் உற்சவத் திருமேனியானசோமாஸ்கந்தத் திரிமேனி உள்ளது.திருவிழாக் காலங்களில் அபிஷேகம்,அலங்காரம் ஆகியவைஇம்மண்டபத்தில் நடைபெறும்.காஞ்சி திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகத் திகழ்வதுமாவடியாகும்.மாமரம் இத்தல விருட்சம் ஆகும். காமாட்சி அன்னை தவம் இருந்த்போது இந்தமாமரத்தின் மூலத்தில் இருந்து முகிழ்த்து முக்கண் முதல்வன் வெளிப்பட்டதாகப் புராணம்புகல்கின்றது.
மாமரத்தின் வயது 3500 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்று தாவர இயல் வல்லுநர்கள்கணக்கிட்டுள்ளனர். இங்குள்ள பீடத்தின் கீழே பஞ்சக்ரம் நடுவில் அம்மானின் அருந்தவம்,லிங்கோத்பவ சிவலிங்கத்தைத தழுவிய சிற்பங்கள் சிறப்புற உள்ளன.பிள்ளைப்பேறு வேண்டுவோர் இந்த மாமரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டு வணங்கினால் விரைவில் அவர்கள்வீட்டில் தொட்டில் ஆடும் என்று நம்பப்படுகிறது.
வேதஸ்வரூமான இம்மாமரத்தின் நான்கு கிளைகளும் வேதங்கல் நான்கினைக் குறிப்பதாகக் கூறுவர். தானாகவே கனிந்து விழும்போது,நான்கு கிளைகலின் பழங்கள் நான்கு வகைசுவை கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவடி மனக்குறை மாய்க்கும் பிரார்த்தனைஇடமாக விளங்குவதால் மரத்தை வலம் வந்து பக்தர்கள் வழிபடுவர்.
வலப்பக்கப் பிராகாரத்தில் படியேறிச் சென்றால் உற்சவராய் விளங்கும் ஏலவார்குழலின் எழில்மிகு தோற்றத்தைக் காணலாம். மூலவர் மண்ணால் உருவாக்கப்பெற்றவர் எனபதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது.ஆனால் சிவன்'அபிஷேகப்பிரியன்' ஆயிற்றே! அதனால்,சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளியிருக்கும்ஏகாம்பரநாதனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.மூலவருக்கு வெள்ளிக்கவசம்அணிவிக்கப்படுகிறது.
மூலவர் மண்ணால் அமைந்திருப்பது காஞ்சி பஞ்ச பூதங்களில் 'மண்ணை'க் குறிக்கும்மகத்துவம் மிக்க தலம் என்பதை உணர்த்துகிறது.'ரதசப்தமி' அன்று சூரிய ஒளி சுவாமியின் திருமேனியின் மேல்படுவது,இத்தலத்தின்இணையற்ற அற்புதமாகும்! பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டுங் கண்டும் களித்திகாண் நெஞ்சமே வண்டு லாமலர்ச் செஞ்சடை ஏகம்பன் தொண்டனாய் திருயாய் துயர் தீரவே! -திருநாவுக்கரசர்-
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காஞ்சி மண்டலம் முழுமைக்கும் தேவி காமாட்சி

அம்மையே ஆவாள்.அதனால் காஞ்சியில் உள்ள சிவன் கோயில்களில் அம்பாளுக்குத்தனியான 'சந்நிதியோ' 'கோயிலோ கிடையாது.எனினும் ஒவ்வொரு கோயிலிலும்வழிபாட்டிற்கும், உற்சவத்தின் போது புறப்பாட்டிற்கும் அம்மனில் அம்சம் உற்சவச்சிலைவடிவில் அமைந்திருக்கும்.ஏகம்பத்தில் அமைந்துள்ள இறைவியின் அழகுத்திருப்பெயர்,''ஏலவார் குழலி'' என்பதாகும்.நிலமாய் நிலைத்திருக்கும் நீலகண்டன்

Comments