சித்தர் வழியில்.., தேரையார்.

“மன்னா நீ தூங்கும் போது மிகமிகச் சிறிய தேரைக்குஞ்சு உன் மூக்கினுள் புகுந்துவிட்டது.
நீ மூச்சுக் காற்றை இழுத்தபோது அந்த தேரைக்குஞ்சு மூளைக்குள் போய் தங்கிவிட்டது.
ஆகையால்தான் உனக்கு தீராத தலைவலிக்குக் காரணம். இதனை கேட்ட மன்னன்
பேயறைந்தது போல் ஆனான்.

நிகழாது என்பதற்கு எந்த நிகழ்வுமே இந்த உலகத்தில் முன்னுதாரணமில்லை. கவலை
வேண்டாம். உன் தீராத தலைவலியைப் போக்குகிறேன் என்றார் அகத்தியர். மூலிகை
சாறு கொண்டு மன்னனை மயக்கத்தில் ஆழ்த்தினர்.அறுவை சிகிச்சை மூலம்
கபாலத்தை திறந்தார்.அங்கே திரவப்பகுதியில் தேரை இருந்தது. இடுக்கியைக்
கொண்டு எடுக்க முனைந்தால், தேரை மூளைப்பகுதிகளுக்குள் இங்குமங்கும்
தாவி மூளையை சேதக்கி விடுமே என்று அஞ்சினார்.

அருகில் அமர்ந்திருந்த தேரையர் உடனே எழுந்துபோய் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில்
தண்ணீர் கொண்டு வந்து பக்கத்தில் வைத்து, தண்ணீரில் அலை எழுப்பி ஓசைப்படுத்தினார்.
உடனே அந்தத் தண்ணீர் பாத்திரத்தில் தாவிக் குதித்து நீச்சலடித்தது. உடனே சட்டென
அகத்தியமுனி ‘சந்தான கரணி’ என்னும் மூலிகையால் மன்னனின் மண்டை ஓட்டை
மூடிவிட்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த மன்னனுக்குத் தலைவலி இருந்ததற்கான
சுவடே தெரியவில்லை. தேரையரின் நுட்பமான அறிவாற்றல் அகத்திய முனிவரை அளவற்ற
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தேரையர் என்று அதன் பின்னரே அழைக்கப்பட்டார். காசி
மன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கோ அளவில்லை.

**********************************
பாண்டிய மன்னன் ஒருவனுக்கு நீண்ட நாள் இடுப்பு வலி இருந்து.அதனால் அரண்மனையில்
இராஜ வைத்தியம் செய்யப்பட்டது.அதன் காரணமாக அந்த மன்னனுக்கு முதுகில் கூன்
விழுந்துவிட்டது. நாட்டையாளும் வாலிப மன்னனுக்கு கூனலோடு இருந்தால் அவமானம்
அல்லவா?

அகத்தியர் ஆசிரமத்திற்கு மன்னன் வந்து சேர்ந்ததான்.மன்னனை பரிசோதித்துவிட்டு
தேரையரிடம் சில ஆபூர்வ மூலிகைகளைக் கொண்டு வரும்படி அகத்தியர் கொண்டு
வர பணித்தார். அந்த அபூர்வ மூலிகைகளின் இடம் தேடி கொண்டு வந்து சேர்த்தார்.
அகத்தியர் அந்த மூலிகை இரசத்தை பாத்திரத்தில் ஏற்றி அடுப்பில் கொதிக்க
வைத்தார்.

‘’ தேரையரே.., நான அவசரமாக வெளியே செல்ல வேண்டும். தைலம் பதம் வந்ததும்
கவனமாகப் பார்த்து இறக்கி வைக்கவும்.”
--- என்று கூறி சென்றுவிட்டார்.
அடுப்பு தகதகவென காந்தலாய் எரிந்து கொண்டிருந்தது.
தைலம் பதம் வரும் நேரத்திற்காக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் தேரையர்.
வெடி வைத்து மலையை உடைத்தார் போல மேல் கூரையில் சத்தம் பலமாகக்
கேட்டது. தேரையர் நிமிர்ந்து பார்த்தார். எரியும் அடுப்புக்கு நேர் மேலாக ஆசிரமக்
கூரையில் பல்லக்கிற்காக வளைந்த மூங்கில் ஒன்று…, அடுப்பின் அனலில்
கொதித்துக் கொண்டிருந்த மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு, வளைந்திருந்த மூங்கில்
படீரென நிமிர்ந்திருக்கிறது. அந்தச் சத்தம்தான் அது என்பதைப் புரிந்துக்
கொண்டார்.

வில்லாக வளைந்திருந்த மூங்கில் நிமிர்ந்த நிலைதான் மூலிகைச் சாற்றினை இறக்க
வேண்டிய பதமான நிலை என்பதை உணர்ந்தார் தேரையர் உடனே அடுப்பிலிருந்த
தைலத்தை இறக்கி வைத்தார். வெளியில் சென்றிருந்த அகத்தியர் அடுப்பிலிருந்த
மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்படிருப்பததைப் பார்த்து அவருக்கு கோபம்
வந்துவிட்டது.


’’தேரையரே.., என்ன காரியம் செய்தாய்.
அதற்குள் மூலிகை ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கி விட்டாயே.பதம் வரும்
முன் இப்படி செய்து விட்டாயே’’ ‘ என கடிந்தார்.

’’ குருநாதரே, மன்னிக்கவேண்டும். நான் சரியான பக்குவத்தில்தான் இறக்கியுள்ளேன்.
பல்லாக்கு மூங்கிலைப் பாருங்கள். தைல ஆவிபட்டு மூங்கிலே நிமிர்ந்து விட்டபின்
அதுதானே பக்குவம்’’ ஏன்று நடந்தைக் கூறினார்.
அகத்தியரே சீடனின் நுட்பம் அறிந்து பரவசப்பட்டார்.

அதன்பின் அந்த தைலத்தை எடுத்து பாண்டிய மன்னன் முதுகில் தடவ கூன் நிமிர்ந்ததது.

ஒருநாள் யோகி ஒருவருக்கு தீராத வயிற்று வலி. ஆசிரமம் வந்து அகத்தியரிடம்
‘வலி பொறுக்க இயலவில்லை. தயவு செய்து இந்த வயிற்று வலியை நீக்கவும்
என வேண்ட, அகத்தியரும் மருந்து கொடுத்தார். ஆனால் வயிற்று நோய்
தீரவில்லை. வலியால் வாடியவர்க்கு தேரையர் மருந்து கொடுத்தார்.

அதே மருந்துதான். ஒரு கொருக்கு குச்சி எடுத்து அதன் உள்ளீடற்ற ஓட்டை வழியாக
யோகியின் பல்லில் படாமல் தொண்டைக்குள் மருந்தை செலுத்தினார். சிறிது
நேரத்தில் யோகியின் வயிற்று வலி தீர்ந்தது.

“குருவே, தங்களது மருந்து முதலில் பலம் இழந்து போனதற்குக் காரணம் யோகியின்
பற்களில் இருந்த பாஷாணம். ஆகவே பல்லில் படாமல் கொருக்குக் குச்சி ஓட்டை
வழியே மருந்தை தொண்டைக்குள் மருந்தை ஊற்றினேன்” என்றார் தேரையர்.

“தேரையரே, இனி நாம் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது நல்லதல்ல. நீர் தனியாக
உமக்கு விருப்பமான இடத்துக்குச் செல்லாம்” என்றார். அகத்தியர் கூறியதைக்கேட்டு
தேரையர் மிகவும் மனம் உடைந்து போனார். கவலையுடனே தனியாக மலைக்
காடுகளில் அலைந்து மூலிகை இரசியங்களை மேலும் அறிந்தார்.

இந்நிலையில் அகத்தியருக்கு கண் பார்வை மங்கி போக, எல்லா சிகிச்சைகளும்
பலனற்று போன நிலையில் சீடர்கள் அவரிடம் “ முனிவர் பெருமானே…,
அநாயம் காட்டில் ஒரு முனிவர் இருக்கிறாராம். அவர் இறவ முலிகை இரகசியம்
பலவற்றை அறிந்து வைத்துள்ளாராம். அந்த அற்புத சித்தரை இங்கு அழைத்து
வருகிறோம். தாங்கள் நிச்சியம் கண்பார்வை பெறுவீர்கள்’’

‘ அகத்திய முனிவர் தனது ஞான திருஷ்டியால் அந்த சித்தர் யார் என அறிந்து,
மனத்திற்குள் ஒரு மெல்லிய புன்முறுவல் பூத்தார்.

Comments