சித்தர் வழியில்…கோம்பைச் சித்தர்

சித்தர் வழியில்…கோம்பைச் சித்தர்.



அவர் இங்கே வருவதற்கு இரண்டு பேர்கள் காரணம். அவர்கள் வடசேரி, கழுகுமலைச் சந்தைக்குப் போய் மாடு வாங்கி வந்துக்கிட்டு இருக்கும்போது, வழியில் பரட்டைத்தலையுடன், ஒட்டிய வயிறுமாக ஒரு கோவணத் தாண்டி நின்னுக்கிட்டு இருந்ததைப் பார்த்திருக்காங்க. அவரு இவங்களையே உற்று உற்றுப் பார்க்க நம்மகிட்டே அவரு ஏதோ எதிர்ப்பாக்கிறாருன்னு தெரிஞ்சிக்கிட்டு கையிலிருந்த சாப்பாடு பொட்டலத்தை அவருகிட்டே தந்திருங்க்காங்க. உடனே அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் பாவம் கோவணத்தோட இருக்காருன்னு
சந்தையில புதுசா வாங்கிட்டு வந்த சட்டையை அவர்கிட்டே கொடுத்திருக்காரு. ’’கோம்பைச் சித்தர்’’ மறுக்காம சாப்பாட்டையும் சட்டையையும் வாங்கிக்கிட்டிருக்காரு.


உடனே அவங்க மாட்டை ஓட்டிக்கிட்டுக் கிளம்ப, பின்னாடியே கோம்பைச் சித்தர் வந்திருக்காரு. திரும்பிப் பார்த்த அவங்க சாப்பாடும், சட்டையும் கொடுத்தாலே நம்மக்கூடயே வர ஆரம்பிச்சிட்டாருன்னு யோசிக்கிட்டே நடந்திருக்காங்க.

கொஞ்ச தூரத்தல ரோட்டோரமா ஏற்றம் இறைச்சிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு இங்க தண்ணீர் இருக்குது,நாம இங்கேயே சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு போகலாம்ன்னு முடிவெடுத்து அங்கேயே சாப்பிட்டு விட்டு, சற்று தலை சாச்சி படுத்திருங்கா. படுத்துத் தூங்கி எழுந்த பார்த்தா…., வடசேரி கிராமத்து முகப்புல இருக்கிற ஒரு மரத்துக்கு அடியில் தூங்கிக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சிருக்கு.

இது எப்படி? சில மைல் தூரத்திலிருக்கிற கழுகுமலையில் படுத்து தூங்கினவங்க… தூங்கி எழும்போது வடசேரியில எழுந்திரிக்கிறோம்ன்னு ஆச்சர்யமாகப் பார்த்திருக்காங்க.இது கோம்பைச் சித்தர் சித்தாடலால் என்பதை உணர்ந்தார்கள். அவரது தீட்சண்ய மிக்க கண்களின்
ஒளியை உணர்ந்த கொண்ட இருவரும், சித்தரை வணங்கி, “ஐயா நீங்கள் எங்கள் ஊரில் வாழ்ந்தால் அது எங்கள் பாக்கியம்” என்று கேட்க அவரும் சம்மதித்து, அவரக்ளுடைய வீடுகளில் ஒருவரது விட்டின் திண்ணையில் வசிக்க ஆரம்பித்தார்…., என்கிறார் அந்த முதிய பெரியவர்.

அவர் அங்கே வந்ததும் அவருடைய அற்புதங்களும்,மகிமையும் முதலில் அக்கிராம மக்களுக்குப் புரியவில்லையாம்.ஏதோ ஒரு பித்தனைப் பார்ப்பத்து போல்தான் பார்ப்பார்களாம். அதற்கு காரணம், ஒரு சிறிய கோவணத்துடன் கைகளில் குப்பைக் கூளமும், எச்சில் இலையுமாக சித்தர் நடமாடிக் கொண்டிருந்ததுதானாம்.

ஆனால், அவர் திடீர் திடீரன ஒரு இடத்திலிருந்து மறைந்து மற்றொரு இடத்தில் தோன்றுவதும், ஒரே சமயத்தில் பலவிடத்தில் தோன்றுவதும், ஒரே சமயத்தில் பலவிடங்களில் காட்சி தருவதுமாக பல சித்தாடல்கள் புரிய ஆரம்பித்திருக்கிறது. அதன் பிறகே அவரிடம் அருள்வேண்டி பலர் காத்திருக்க ஆரம்பித்தனர்.

ஒருநாள் திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது எச்சில் இலையும் குப்பை கூளமாக இருக்கும் கோம்பைச் சித்தர் மன்னர் முன்னே வந்தால், அவர் முகம் சுளிப்பார் என்று சித்தரை வடசேரி சந்தையிலிருந்து போலீசார் பிடித்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.ஆனால், என்ன ஆச்சரியம்! மன்னர் அந்த நகருக்கு வந்தபோது திடீரென சித்தர் அவர் முன்னே தோன்றினார்.

”நாம் அடைத்து வைத்தவர் எப்படி இங்கே வந்தார்?” என்று சித்தரை ஆச்சரியத்துடன் பார்க்க..,சித்தர் மன்னரை நெருங்க, அவரது கண்களை ஆழமாகப் பார்த்தார். அடுத்த நொடி மன்னர் தன்னையும் அறியாது சித்தர் முன்னே மண்டியிட்டு சுரங்களைக் கூப்பி வணங்க ஆரம்பித்தார்.சித்தர் அவரது நெற்றியில் விரல் பதித்து ஆசீர்வதித்து விட்டுச் சொன்னார்.

“ மன்னரே…, இன்று நீ என்னைப் பார்க்க வேண்டும் என்பது விதி. இதனால் உனது முற்பிறவி சாபம விலக வேண்டும் என்பது விதித்த விதி. இன்றோடு உன் பிரச்ச்னைகள் தீர்ந்தது. போய் வா..” என்று சொல்ல மன்னர் கோம்பைச் சித்தரின் கரங்களைப் பற்றித் தனது கண்களில் ஒற்றி சித்தருக்கு தன்னிடமிருந்த புதிய ஆடையை போர்த்தினார். அடுத்த வினாடி அந்த புத்தாடையை தூக்கி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்து போனார்.

Comments